நாகர்ஜூனா படத்திலிருந்து விலகிய காஜல் அகர்வால்! - ஜோடியாகும் விஜய் பட கதாநாயகி!
நாகர்ஜுனாவிற்கு ஜோடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில் அவர் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கு காரணம் காஜல் கர்பமாக இருப்பதுதான் என்கின்றனர் டோலிவுட் வட்டாரங்கள்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகருள் ஒருவராக இருப்பவர் நாகர்ஜூனா. மகன் நாக சைத்தன்யா ஒரு பக்கம் ஹீரோவாக கலக்கிக்கொண்டிருக்க, நாகர்ஜூனாவும் மகனுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார். நாகர்ஜுனா தற்போது ‘தி கோஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரவீன் சட்டாரா இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் தீயாய் பரவியது. படத்தில் நாகர்ஜுனாவிற்கு ஜோடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில் அவர் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கு காரணம் காஜல் கர்பமாக இருப்பதுதான் என்கின்றனர் டோலிவுட் வட்டாரங்கள். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகையும், நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவருமான இலியானாவை, நாகார்ஜுனாவிற்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்துள்ளார்களாம் படக்குழு.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாகர்ஜூனா மற்றும் இளியான ஜோடியாக நடிப்பது இதுவே முதல் முறை. முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு நாகர்ஜூனா மகன் , நாக சைத்தன்யாவுடன் இலியானா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.
நாகர்ஜூனாவின் மகன் நாக சைத்தன்யாவைத்தான் சமந்தா திருமணம் செய்துள்ளார் என்பது நாம் அறிந்ததே!. இந்நிலையில் நாக சைத்தன்யாவும் , சமந்தாவும் விவாகரத்து செய்துக்கொள்ள போவதாக சில செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளன. அந்த பிரிவிற்கு நாகர்ஜூனாதான் காரணம் என்ற செய்திகளும் வெளியாக தொடங்கியுள்ளன. ஏதோ சமந்தாவின் பட விவகாரத்தில் மாமனார் நாகர்ஜூனா தலையிட்டதாக தெரிகிறது. அதில் முற்றிப்போன பிரச்சனைதான் தற்போது சமந்தா- சைத்தன்யா விவாகரத்தில் வந்து நிற்கிறது என்கின்றனர் சிலர். ஆனால் இது குறித்த முழுமையான விவரங்கள் தெரியவில்லை. இந்நிலையில் நேற்று நாகர்ஜூனா ட்விட்டரில் தந்தை நாகேஷ்வரராவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு பதிவிட்டிருந்தார். அதனை ஷேர் செய்த சமந்தா இது மிகவும் அழகாக இருக்கிறது @iamnagarjuna என்று நாகர்ஜூனாவை டேக் செய்து தனது கருத்தைப் பதிவிட்டார். ஆனால், என்ன நினைத்தாரோ தெரியவில்லை உடனே அந்த ட்வீட்டை டெலீட் செய்துவிட்டு மீண்டும் பதிவிட்டார். இந்த முறை, இது மிகவும் அழகாக இருக்கிறது @iamnagarjuna மாமா, என்று மரியாதையுடன் உறவுமுறையோடு பகிர்ந்திருந்தார்.இது ட்விட்டரில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக சமந்தா தனது சமூகவலைதளப் பக்கத்தில் சமந்தா அக்கினேனி என்ற பெயரை மாற்றி வெறும் S என்று மட்டும் வைத்துக் கொண்டார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் சமந்தா அண்மைக்காலமாகவே நாகசைதன்யாவுடனான புகைப்படங்க்ளை வெளியிடாததும் இந்த சந்தேகத்தை அதிகரித்தது. இந்நிலையில், அண்மையில் நாகசைதன்யா தான் சாய் பல்லவியுடன் இணைந்து நடித்த லவ் ஸ்டோரி திரைப்படம் வரும் 24 ஆம் தேதி திரைக்கு வரவிருப்பது குறித்து ட்வீட் செய்திருந்தார். அதற்கு சமந்தாவும் வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு நாக சைதன்யா நன்றி சாம் என்று பதிவிட்டிருந்தார்.