மேலும் அறிய

Actress Durga: கல்யாணம் ஆனதால பல படங்கள்ல நிராகரிச்சிட்டாங்க... துர்கா பேச்சால் ரசிகர்கள் ஷாக்..!

திருமணமான பெண் என்பதால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதாக நடிகை துர்கா வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

திருமணமான பெண் என்பதால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதாக நடிகை துர்கா வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

இயக்குநர்‌ வெங்கட் புவன்‌ இயக்கத்தில்‌  குருசோம சுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா,  பீட்டர் ராஜ், துர்கா, ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் “பெல்”. பரணி கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ராபர்ட் இசை அமைத்துள்ளார். இயற்கை மருத்துவத்தின்‌ சிறப்புகள்‌ பற்றியும்‌ பழந்தமிழர்களின்‌ மருத்துவம்‌ சார்ந்த கண்டுபிடிப்புகள்‌ பற்றியும்‌ பேசும்‌ படமாக பெல் படம் அமைந்துள்ளது. இந்த படத்தின் சிறப்பு காட்சி நேற்று திரையிடப்பட்டது. இதன்பின், படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து படத்தில் படக்குழுவினர் தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது பேசிய இயக்குனர் வெங்கட் புவன், பல நூறு ஆண்டுகளுக்கு முன்‌ வாழ்ந்த அகஸ்தியர்‌, பாதுகாக்கப்படவேண்டிய 6 ரகசியங்களை தனது நம்பிக்கைக்குரிய 6 சீடர்களுக்குச்‌ சொல்லி கொடுத்ததையும், கட்டளையிட ரகசியங்களைப்‌ பாதுகாப்பதில்‌ நன்மைக்கும்‌ தீமைக்கும்‌ இடையே நடந்த போராட்டமே படத்தின்‌ மையக் கதையாகும்‌ என தெரிவித்துள்ளார். மேலும் காதல்‌, குடும்பம்‌, ஆக்ஷன்‌ என அனைத்து அம்சங்களும்‌ மிகச்‌சரியான விகிதத்தில்‌ கலந்த கலவையாக அமைந்த படமாக பெல்‌ இருக்கும்‌ எனவும் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய நடிகை துர்கா, “சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பலமுறை முயன்றிருக்கிறேன். ஆனால் நான் திருமணமான பெண் என்று சொல்லி வாய்ப்பு தர மறுத்தார்கள். பெல் படத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்பு வாழ்வில் மறக்க முடியாது.  இந்த படத்தில் சீனியர்களுடன் இணைந்து நான் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. முதலில் இப்படத்தில் வேறு கேரக்டருக்கு தான் ஆடிஷன் செய்தேன். ஆனால் ஹீரோயின் கேரக்டர் தந்தார்கள்.  ஆடிஷன் இல்லாமல்தான் நடித்தேன். இந்தப் படத்தில் நான் நடிக்க காரணமாக இருந்த இயக்குநர், தயாரிப்பாளர், உடன் நடித்தவர்கள்,டெக்னீஷியன்கள்  என்னை நடிக்க அனுமதித்த என் கணவர் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Bhagyaraj: காலத்தால் அழிக்கவே முடியாத பாக்யராஜின் 10 படங்கள்! என்னென்ன?
Bhagyaraj: காலத்தால் அழிக்கவே முடியாத பாக்யராஜின் 10 படங்கள்! என்னென்ன?
K.Bhagyaraj: திரைக்கதை ஜாம்பவான் இயக்குனர் கே. பாக்யராஜ் காலமானார் - காரணம் என்ன? குவியும் இரங்கல்கள்
திரைக்கதை ஜாம்பவான் இயக்குனர் கே. பாக்யராஜ் காலமானார் - காரணம் என்ன? குவியும் இரங்கல்கள்
எந்த மேடையாக இருந்தாலும் தனுஷ் சாருக்கு தான் முதல் நன்றி...எமோஷனலாக பேசிய நடிகர் பவிஷ்
எந்த மேடையாக இருந்தாலும் தனுஷ் சாருக்கு தான் முதல் நன்றி...எமோஷனலாக பேசிய நடிகர் பவிஷ்
ஆங்கில இணையத் தொடரின் ரீமேக்கா ரஜினியின் தர்மன் ? அஸ்வத் மாரிமுத்து பதில்
ஆங்கில இணையத் தொடரின் ரீமேக்கா ரஜினியின் தர்மன் ? அஸ்வத் மாரிமுத்து பதில்

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
K.Bhagyaraj: திரைக்கதை ஜாம்பவான் இயக்குனர் கே. பாக்யராஜ் காலமானார் - காரணம் என்ன? குவியும் இரங்கல்கள்
திரைக்கதை ஜாம்பவான் இயக்குனர் கே. பாக்யராஜ் காலமானார் - காரணம் என்ன? குவியும் இரங்கல்கள்
Bhagyaraj: காலத்தால் அழிக்கவே முடியாத பாக்யராஜின் 10 படங்கள்! என்னென்ன?
Bhagyaraj: காலத்தால் அழிக்கவே முடியாத பாக்யராஜின் 10 படங்கள்! என்னென்ன?
எடப்பாடி பழனிசாமிக்கு லெட்டர் கொடுத்த எஸ்பி வேலுமணி! என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா?
எடப்பாடி பழனிசாமிக்கு லெட்டர் கொடுத்த எஸ்பி வேலுமணி! என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா?
CM Vijay: ”20 ஸ்லைட் PPT விஜய் டேபிளுக்கு வரணும்” பட்ஜெட் பணிகள் தீவிரம் - ஒவ்வொரு துறைக்கும் என்ன தேதி?
”20 ஸ்லைட் PPT விஜய் டேபிளுக்கு வரணும்” பட்ஜெட் பணிகள் தீவிரம் - ஒவ்வொரு துறைக்கும் என்ன தேதி?
CM Vijay Vs Stalin: அந்த தப்பால தான் ஆட்சியை கோட்டை விட்டோம்..! இனி கூடாது, விஜய்க்கு எதிராக ஸ்டாலின் முடிவு
அந்த தப்பால தான் ஆட்சியை கோட்டை விட்டோம்..! இனி கூடாது, விஜய்க்கு எதிராக ஸ்டாலின் முடிவு
ஒரே சார்ஜில் 198 கி.மீட்டர் மைலேஜ்! பறக்கலாம் ப்ரோ! Ferrato FEV 650 இ பைக் விலை என்ன?
ஒரே சார்ஜில் 198 கி.மீட்டர் மைலேஜ்! பறக்கலாம் ப்ரோ! Ferrato FEV 650 இ பைக் விலை என்ன?
Maruti Brezza: டர்போ இன்ஜின், சிஎன்ஜி, கூடுதல் அம்சங்கள், வசதிகள் - புது மாருதி ப்ரேஸ்ஸா அப்படி இருக்கு? விலை
டர்போ இன்ஜின், சிஎன்ஜி, கூடுதல் அம்சங்கள், வசதிகள் - புது மாருதி ப்ரேஸ்ஸா அப்படி இருக்கு? விலை
TN Weather Update: சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Embed widget