மேலும் அறிய

Maruti Brezza: டர்போ இன்ஜின், சிஎன்ஜி, கூடுதல் அம்சங்கள், வசதிகள் - புது மாருதி ப்ரேஸ்ஸா அப்படி இருக்கு? விலை

New Gen Maruti Brezza: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசூகியின் ப்ரேஸ்ஸா கார் மாடல், 7 முக்கிய அப்க்ரேட்களுடன் மேம்படுத்தப்பட்ட எடிஷனாக விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது.

New Gen Maruti Brezza: மாருதி சுசூகியின் ப்ரேஸ்ஸா கார் மாடலில் புதியதாக வழங்கப்பட உள்ள 7 முக்கிய அப்க்ரேட்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

புதிய தலைமுறை மாருதி ப்ரேஸ்ஸா

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாருதி ப்ரேஸ்ஸா காரின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன், அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. அதேநேரம், அதிகாரப்பூர்வமான வெளியீட்டு தேதி ஏதும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், இந்த மேம்படுத்தப்பட்ட எடிஷனானது பலமுறை சாலை பரிசோதனைகளில் சிக்கியுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களானது, முக்கியமான டிசைன் மற்றும் உட்புற வசதிகள் தொடர்பாக அறிய உதவுகின்றன. அந்த வகையில் புதிய ப்ரேஸ்ஸா தொடர்பாக இதுவரை அறிந்த 7 முக்கியமான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுளன.

புதிய டர்போ பெட்ரோல் இன்ஜின்

புதிய ப்ரேஸ்ஸாவின் மிகப்பெரிய அப்டேட் அதன் மெக்கானிக்கல் பிரிவில் தான் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி ஃப்ராங்க்சில் உள்ள 1.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் இன்ஜின் இந்த எஸ்யுவியில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனை கொண்டு,  100bhp மற்றும் 147Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. ஏற்கனவே உள்ள 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் ஆனது, 5 ஸ்பீட்  மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் ஆட்டோக்மேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் அப்படியே தொடர உள்ளதாம்.

பாடிக்கு கீழே சிஎன்ஜி டேங்க்:

தற்போதைய ப்ரேஸ்ஸா எடிஷனில் இருப்பதை போன்றே புதிய எடிஷனிலும், ஆலையிலேயே  பொருத்தப்பட்ட சிஎன்ஜி டேங்க் இடம்பெற உள்ளது. ஆனால், பூட்-ஸ்பேஸை அதிகரிக்கும் விதமாக இனி, வாகனத்திற்கு அடியில் சிஎன்ஜி டேங்க் இடம்பெற உள்ளதாம். ப்ரேஸ்ஸாவின் தற்போதைய சிஎன்ஜி எடிஷனானது 1.5 லிட்டர் டூயல் விவிடி பெட்ரோல் இன்ஜினில், ஆலையிலேயே நிறுவப்பட்ட சிஎன்ஜி கிட்டில் கிடைக்கிறது. அதேநேரம், 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் என்ற ஒற்றை ஆப்ஷன் மட்டுமே பயனர்களால் தேர்வு செய்ய முடியும்.

ப்ரேஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் - டிசைன், அம்சங்கள்

சாலை சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களானது மேம்படுத்தப்பட்ட ப்ரேஸ்ஸா எடிஷனில், அகலமான, புதிதாக வடிவமைக்கப்பட்ட கிரில், மையத்தில் தடிமனான குரோம் பட்டை , திருத்தப்பட்ட பம்பர்கள் ஆகியவை புதியதாக இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் பின்புறத் தோற்றங்கள் பெரும்பாலும் மாற்றமின்றி இருக்கும் என கூறப்படுகிறது. புதிய மாருதி ப்ரேஸ்ஸா 2026 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஒட்டுமொத்த அளவீடுகள் மாற்றமின்றி அப்படியே இருக்க வாய்ப்புள்ளது. அதாவத் இந்த எஸ்யூவி தொடர்ந்து 3,995 மிமீ நீளம், 1,790 மிமீ அகலம், 1,685 மிமீ உயரம் மற்றும் 2,500 மிமீ வீல்பேஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

இதையும் படியுங்கள்: Upcoming Tata EV: குட்டி, காம்பேக்ட், எம்பிவி..! மின்சார பிரிவை ஆள முடிவு - அடுத்தடுத்து வரும் 5 கார்கள் - பட்ஜெட், மைலேஜ்

புதிய மாருதி ப்ரேஸ்ஸாவின் உட்புறம் ஒரு குறிப்பிட்ட புதிய அம்சங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் வசதியானது மாருதி விக்டோரிஸில் இருந்து பெறப்படலாம்.  இந்த சப் காம்பாக்ட் எஸ்யுவியில் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், புதிய இருக்கை உறைகள், காற்றோட்ட வசதியுள்ள முன் இருக்கை, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, எலக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் 360-டிகிரி கேமரா போன்ற அம்சங்களையும் பொருத்தக்கூடும்.

Maruti Brezza: டர்போ இன்ஜின், சிஎன்ஜி, கூடுதல் அம்சங்கள், வசதிகள் - புது மாருதி ப்ரேஸ்ஸா அப்படி இருக்கு? விலை

ப்ரேஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் - விலை, விவரங்கள்

மாருதி ப்ரேஸ்ஸா கார் மாடலனாது தற்போது ரூ.8.26 லட்சத்தில் தொடங்கி ரூ.13.01 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையிலான விலை வரம்பில் விற்பனை செய்யப்படுகிறது. அப்க்ரேடட் அம்சங்களின் அடிப்படையில் புதிய எடிஷனின் விலை சற்றே உயரக்கூடும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Embed widget