மேலும் அறிய

மதுவும் பெண்களும் தான் மலையாள சினிமாவில் பொழுதுபோக்கு....பி கிரேட் படங்கள் பற்றி நடிகை ஷர்மிலா பேட்டி

மூத்த நடிகையான ஷர்மிலா தான் ஆரம்ப கட்டத்தில் மலையாளத் திரைப்படங்களில் நடிக்க பயந்ததாகவும் மோகன்லால் தனக்கு தைரியமளித்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

நடிகை சர்மிலா பேட்டி

1980 மற்றும் 90களில் மலையாள திரையுலகில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஷர்மிலா. மோகன்லால். மம்மூட்டி போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருக்கிறார். ஆனால் மலையாள படங்களில் நடிக்க பயந்து பல வாய்ப்புகளை தான் நிராகரித்ததாக அண்மையில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மலையாள படங்கள் என்றாலே ஆபாச படங்கள் என்கிற எண்ணமே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்

குடியும் , பெண்களும் தான் மலையாள சினிமா

"பிரபல இயக்குநர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தபோதும் என் பெற்றோர்கள் என்னை நடிக்க அனுமதிக்கவில்லை. மலையாள சினிமாக்களைப் பற்றி அன்றிருந்த பொதுப்புத்தியே இதற்கு காரணம் . " கேரளாவுக்கு வெளியே மலையாள படங்கள் என்றாலே ஆபாச படங்கள் என்றுதான் பலரும் நினைத்து வைத்திருந்தார்கள். அந்த காலத்தில் பெண்களும் போதையும் தான் அவர்களின் பொழுதுபோக்கு. ஆனால் மறுபக்கம் மலையாளத்தில் மிக சிறந்த படங்கள் வந்திருக்கின்றன. மேலும் நாங்கள் ஹோட்டலில் தங்கும்போது கூட பி கிரேட் படங்களில் நடிப்பவர்களுக்கு என தனியாக தங்கும் விடுதிகள் இருந்தன. அவர்கள் எல்லாம் இப்போது இந்த துறையை விட்டே போய்விட்டார்கள். சிலர் திருமணத்திற்கு பின் நடிப்பதை  நிறுத்திக் கொண்டார்கள். சிலர் துபாயில் போய் செட்டிலாகிவிட்டார்கள். "

மோகன்லால் கொடுத்த நம்பிக்கை 

பிரபல தயாரிப்பாளரான கே பாலாஜியின் மருமகனான மோகன்லால் தான் மலையாளத்தில் நடிக்க ஷர்மிலாவை சம்மதிக்க வைத்துள்ளார். எல்லா மலையாள படங்களும் பி கிரேட் படங்கள் கிடையாது . மம்மூட்டி மோகன்லால் போன்ற பெரிய நடிகர்கள் நல்ல படங்களில் நடித்து வருவதாக மோகன்லால் ஷர்மிலாவின் பெற்றோர்களுக்கு நம்பிக்கை அளித்தார். மோகன்லாலின் படத்தில் நாயகியாக அறிமுகமானார் ஷர்மிலா. தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ஷர்மிலாவுக்கு கேரள ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் ;தனம் ' கேளி , அங்கிள் பென் , பெரியபேட்ட குக்கு' ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றிபெற்றன.  

கடந்த ஆண்டு ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியாகி பரவலாக பேசப்பட்ட போது  மலையாள இயக்குநர் பி ஹரிஹரன் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்தார் ஷர்மிலா. 1994 ஆம் ஆண்டு தான் நடித்த 'பரிநயம்' படத்தின் போது தன்னை அட்ஜெஸ்மெண்ட் செய்துகொள்ள சொன்னதாக ஷர்மிலா கூறினார். 

தலைப்பு செய்திகள்

Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Embed widget