Anjali in Nayattu Remake: ‛மலையாள ‛நாயட்டு’ தெலுங்கில் ரீமேக் - தொடங்கியது படப்பிடிப்பு!
ஹைதராபாத்: மலையாளத்தில் ஹிட்டடித்த நாயட்டு திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.
மலையாள சினிமா உலகம் எப்போது வித்தியாசமான படைப்புகளையும், எளிய மனிதர்களின் படைப்புகளை கொடுத்துவருகிறது. அந்தவகையில் மார்டின் பிரகாட் இயக்கத்தில் குஞ்சக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ், தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்பட புகழ் நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
காவல் துறைக்குள் நடக்கும் விவகாரங்களை அடிப்படையாக வைத்து உருவான படம் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி பரவலான பாராட்டை பெற்றது.
படம் பெற்ற வரவேற்பால் இப்படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பலர் முயன்றுள்ளனர். அந்தவகையில் தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான உரிமையை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. படத்துக்கான முதல்கட்ட பணிகள் நடந்துவந்த சூழலில் தற்போது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
#AlluAravind Presents - @GA2Official's Production No - 7 launched today! 🤩
— GA2 Pictures (@GA2Official) October 31, 2021
Produced by #BunnyVass, #VidyaMadhuri
Here are the pics from the pooja ceremony. ✨@yoursanjali @priyadarshi_i #RaoRamesh @Karunafilmmaker #ManiSharma @NavinNooli #ArulVincent #AshishTeja pic.twitter.com/CxUeahCI1N
இதில் ராவ் ரமேஷ், ப்ரியதர்ஷினி, அஞ்சலி உள்ளிட்டோர் நடிக்க ‘ஸ்ரீதேவி சோடா சென்டர்’ உள்ளிட்ட படத்தை இயக்கிய கருணா குமார் இயக்குகிறார்.
New beginnings 🧿 #AlluAravind @GA2Official #BunnyVass #VidyaMadhuri @priyadarshi_i #RaoRamesh @Karunafilmmaker #ManiSharma @NavinNooli #ArulVincent #AshishTeja pic.twitter.com/sacPJSLEMd
— Anjali (@yoursanjali) October 31, 2021
நாயட்டு படத்தின் ரீமேக்கை தமிழில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கவிருக்கிறார் என்பதும் ஹிந்தி ரீமேக் உரிமத்தை ஜான் ஆப்ரஹாம் பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Vijay 66 Update: விஜய் எவ்வளவு எளிமையானவர் தெரியுமா?... இயக்குநர் வம்சி புகழாரம்!
இரட்டைக் கதிரே - உலகக்கோப்பையை கலக்கும் இலங்கையின் ஸ்பின் ட்வின்ஸ்!
Watch Video: புனீத் ராஜ்குமாரின் கடைசி நிமிடங்கள் - திக் திக் வீடியோ..!