மேலும் அறிய

இரட்டைக் கதிரே - உலகக்கோப்பையை கலக்கும் இலங்கையின் ஸ்பின் ட்வின்ஸ்!

ஒயிட்பால் கிரிக்கெட்டின் தி பெஸ்ட் பேட்ஸ்மேன் என சொல்லப்படும் பட்லரை இந்த இருவரும் அடக்கி ஆண்டனர்.

நடந்து கொண்டிருக்கும் டி20 உலகக்கோப்பையில் இலங்கை அணி ரொம்ப சுமாராகவே ஆடிக்கொண்டிருக்கிறது. ஆனால், அந்த அணியின் குறிப்பிட்ட இரண்டு வீரர்கள் மிகச்சிறப்பாக பெர்ஃபார்ம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். ஸ்பின்னர்களான வனிந்து ஹசரங்கா மற்றும் மஹீஸ் திக்ஷனாவே அந்த இருவர்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி நேற்று தோற்றிருந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜாஸ் அட்டகாசமாக ஒரு சதத்தை அடித்திருந்தார். 67 பந்துகளில் 101 ரன்களை அடித்த பட்லர் 6 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என அதிரடியாக வெளுத்தெடுத்தார். ஆனால், இவ்வளவு சிறப்பாக ஆடிய பட்லர் வனிந்து ஹசரங்கா மற்றும் மஹீஸ் தீக்ஷ்னா இவர்கள் இருவருக்கு எதிராக மட்டும் ரொம்பவே டிஃபன்ஸிவ்வாக பதுங்கி ஆடியிருந்தார். ஒயிட்பால் கிரிக்கெட்டின் தி பெஸ்ட் பேட்ஸ்மேன் என சொல்லப்படும் பட்லரை இந்த இருவரும் அடக்கி ஆண்டனர். வனிந்து ஹசரங்கா 4 ஓவர்களை வீசி 21 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஜேசன் ராய், பேர்ஸ்ட்டோ, மோர்கன் என மூன்றுமே முக்கியமான விக்கெட்டுகள். மஹீஸ் தீக்ஷனா 4 ஓவர்களில் 13 ரன்களை மட்டுமே கொடுத்து ரொம்பவே டைட்டாக தனது ஸ்பெல்லை முடித்திருந்தார். இவர்களுக்கு உறுதுணையாக வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக வீசியிருந்தால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி மட்டுமில்லை தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான கடந்த போட்டியையுமே இலங்கை வென்றிருக்கும்.

இரட்டைக் கதிரே - உலகக்கோப்பையை கலக்கும் இலங்கையின் ஸ்பின் ட்வின்ஸ்!

இந்த உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது வனிந்து ஹசரங்காவே. 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். எக்கானமி 5.26 மட்டுமே. தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டை வேறு எடுத்திருந்தார். டி20 உலகக்கோப்பையில் ஹாட்ரிக் எடுத்த முதல் வீரர் எனும் பெருமையையும் பெற்றார். மஹீஸ் தீக்ஷனா 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். எக்கானமி 5.52 மட்டுமே. டி20 போட்டியில் ஒரு அணிக்கு இப்படி எக்கானமி 6 க்குள் வீசக்கூடிய பௌலர்கள் இரண்டு பேர் அமைவது பெரும் வரம். இவர்கள் இருவரும் வீசும் 8 ஓவர்களை பார்த்து ஆடிவிட்டு மீதம் 12 ஓவர்களில் ரிஸ்க் எடுக்கவே அணிகள் விரும்புகின்றனர்.

வனிந்து ஹசரங்கா மஹீஸ் தீக்ஷனா இருவருமே தங்களது முதல் போட்டியிலேயே முத்திரை பதித்தவர்கள். 2017 இல் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் அறிமுகமான ஹசரங்கா தனது முதல் ஓடிஐ போட்டியிலேயே ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். மஹீஸ் தீக்ஷனா வெகு சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்புதான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியிருந்தார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தனது முதல் ஒருநாள் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தினார். அந்த அறிமுக போட்டியில் 10 ஓவர்களை வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்த ஒரு ஸ்பெல்லே மஹீஸ் தீக்ஷனாவுக்கு உலகக்கோப்பையில் இடத்தை பெற்றுக் கொடுத்துவிட்டது. இந்த உலகக்கோப்பைக்கு முன்பு ஒரே ஒரு ஓடிஐ போட்டியிலும் இரண்டே இரண்டு டி20 போட்டியில் மட்டுமே மஹீஸ் தீக்ஷனா ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லெக் ஸ்பின்னரான வனிந்து ஹசரங்கா நவீன லெக் ஸ்பின்னர்களை போல வேரியேஷனை மட்டுமே முழுமையாக நம்பாதவர். கூக்ளிதான் அவரின் விக்கெட் டேக்கிங் டெலிவரி என்றாலும் அதை ஒரு சர்ப்ரைஸ் டெலிவரியாக மட்டுமே பயன்படுத்தக் கூடியவர். இந்த மரபார்ந்த தன்மைதான் அவரின் ஸ்பெசாலிட்டியும் கூட! வனிந்து ஹசரங்காவின் கரியரில் முக்கியமான ஒரு தொடர் என்றால் அது இந்த வருடத்தின் முதல் பாதியில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரே. பிக் ஹிட்டர்கள் நிறைந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அந்த டி20 தொடரில் ஹசரங்கா வெறித்தனமாக வீசியிருப்பார். மூன்று டி20 போட்டிகளில் அவருடைய எக்கானமி 5 க்கும் கீழ்தான் இருந்தது. இந்த தொடரில்தான் பொல்லார்ட் அகிலா தனஞ்செயாவின் ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்திருப்பார். ஆனால், 6 சிக்சர்களை அடித்த அந்த போட்டியில் ஹசரங்காவின் ஓவரிலேயே பொல்லார்ட் அவுட் ஆகியிருப்பார். ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்த பொல்லார்டால் ஹசரங்கா பந்தில் ஒரு பவுண்டரியை கூட அடிக்க முடியவில்லை. விக்கெட்டையும் விட்டிருந்தார். பொல்லார்ட் மட்டுமில்லை அத்தனை பிக் ஹிட்டர்களுமே வனிந்து ஹசரங்காவிற்கு எதிராக திணறவே செய்தனர்.

இரட்டைக் கதிரே - உலகக்கோப்பையை கலக்கும் இலங்கையின் ஸ்பின் ட்வின்ஸ்!

பௌலிங்கில் மட்டுமில்லை. வனிந்து ஹசரங்காவால் குறிப்பிடத்தக்க வகையில் பேட்டிங்கும் ஆட முடியும். இந்த உலகக்கோப்பையிலேயே அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 71 ரன்களை அடித்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும் இலங்கை கொஞ்சம் சவாலளித்ததற்கு ஹசரங்காவின் பேட்டிங்கும் பௌலிங்குமே காரணமாக இருந்தது.

மஹீஸ் தீக்ஷ்னா ஆஃப் ஸ்பின்னர். அஜந்தா மெண்டீஸின் இன்னொரு வெர்ஷன் என சொல்லலாம். இவரின் கேரம் பந்துகளை ரீட் செய்ய பேட்ஸ்மேன்கள் கடுமையாக திணறிக் கொண்டிருக்கின்றனர். இலங்கை அணிக்கு ஆடிய முதல் 2K கிட் இவர்தான் என்பது கூடுதல் ஸ்பெசல். 

இந்த டி20 உலகக்கோப்பையில் இலங்கை அணி பெரிதாக தடம் பதிக்கவில்லையெனினும் இந்த இருவரும் தடம்பதித்துவிட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget