லிப் கிஸ் காட்சியில் நடிக்க இதுதான் காரணம்.. அனிகா சொன்ன காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!
குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் பல படங்களில் நடித்த அனிகா சுரேந்திரன், தமிழில் என்னை அறிந்தால் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
ஓ மை டார்லிங் படத்தில் லிப் கிஸ் காட்சியில் நடித்தது ஏன் என்பதை நடிகை அனிகா சுரேந்திரன் விளக்கமளித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் பல படங்களில் நடித்த அனிகா சுரேந்திரன், தமிழில் என்னை அறிந்தால் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கௌதம் மேனன் இயக்கிய இப்படத்தில் அஜித்துக்கு மகளாக அவர் நடித்திருந்தார். தொடர்ந்து மிருதன், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்த அனிகா, அஜித்தின் ரீல் மகள் என அன்போடு அழைக்கப்பட்டார், அந்த அளவுக்கு படங்களில் இருவரின் தந்தை - மகள் பாசம் ரசிகர்களை கவர்ந்தது.
இதனிடையே நடிகை அனிகாவுக்கு தற்போது 18 வயது ஆகிவிட்ட நிலையில் அவர் ஹீரோயினாக நடிக்க தொடங்கியுள்ளார். முன்னதாக கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி ரசிகர்களையும் அனிகா கவர்ந்தார். பெரிய பெண்ணாக தற்போது “குட்டி நயன்தாரா” என அழைக்க தொடங்கியுள்ளனர்.
View this post on Instagram
அனிகா முதன்முதலில் தெலுங்கில் புட்ட பொம்மா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். இது மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற கப்பேலா என்ற காதல் படத்தின் தெலுங்கு ரீமேக்காகும். கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெரிதும் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக மலையாளத்தில் ஹீரோயினாக அனிகா அறிமுகமாகிறார்.இந்த படத்துக்கு “ஓ மை டார்லிங்” என பெயரிடப்பட்டுள்ளது. ஆல்பிரட் டி சாமுவேல் இயக்கியுள்ள இப்படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காட்சிகள் நிறைந்த படமாகும். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில் இதனைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம் இதில் பல இடங்களில் லிப் கிஸ் காட்சிகளில் நடித்துள்ளார்.
முதல் படத்திலேயே அனிகா இப்படியான காட்சிகள் நடித்தது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் ஓ மை டார்லிங் தொடர்பான சர்ச்சைகளுக்கு அவர் விளக்கமளித்துள்ளார். அதில், “ஓ மை டார்லிங் முழு நீள காதல் திரைப்படமாகும். இதில் முத்தக்காட்சி என்பது தவிர்க்க முடியாதது. இயக்குநர் கதை சொல்லும் போது காட்சியின் முக்கியத்துவத்தையும் சொல்லியிருந்தார். இதில் துளி கூட ஆபாசம் இருக்காது என்பதை படம் பார்க்கும் ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள்” என அனிகா கூறியுள்ளார். ஓ மை டார்லிங் படம் பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகிறது.