Ambika: பணத்தால் வந்த வினை.. ஏமாந்தது நான் தான்.. ராதா மீது அம்பிகா கடும் குற்றச்சாட்டு!
ஒரு அக்கா, தங்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு ஒற்றுமையாக இருந்தோம். ஆனால் பணத்தால் எல்லாம் மாறி விட்டது என நடிகை அம்பிகா வேதனை தெரிவித்துள்ளார்.

நியாயமாக பார்த்தால் நான் தான் ராதா உள்ளிட்டோர் மேல் புகார் கொடுக்க வேண்டும் என நடிகை அம்பிகா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சகோதரி நடிகைகளாக புகழ்பெற்றவர்கள் அம்பிகா - ராதா. 80களில் இவர்கள் நடித்த பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து புகழ் பெற்றார்கள். ஆனால் இப்போது அம்பிகா மீது ராதா போலீஸில் புகார் அளித்துள்ளார். அதாவது, என் பெயரில் இருக்கும் செக்குகளை எடுத்து ரூ.46 கோடி அளவுக்கு திருடி அம்பிகாவின் வங்கி கணக்கில் கொண்டு போய் போட்டுள்ளார்கள். வளசரவாக்கத்தில் உள்ள ஏஆர்எஸ் கார்டன் வீட்டில் தான் அவர் தங்கியிருக்கிறார். அக்கா தானே என நம்பி இருந்தேன். இன்னும் அந்த வீட்டில் என்னென்ன காணாமல் போயிருக்கிறது என தெரியவில்லை. எங்களை அந்த வீட்டுக்குள் விட மறுக்கிறார்கள் என தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அம்பிகா, “எம்ஜிஆர் எங்க குடும்பத்துக்கு கடவுள் தான். அவர் எனக்கு 25 ஏக்கர் ஏஆர்எஸ் கார்டன் நிலத்தை இலவசமாக கொடுத்ததாக பரப்புகிறார்கள். அதில் எந்தளவும் உண்மை இல்லை. அந்த ஏஆர்எஸ் கார்டன் இடத்தை எம்ஜிஆர் தான் திறந்து வைத்தார். அப்போது எம்ஜிஆர் எங்க அம்மாவிடம் இதுபோன்ற நிறைய இடம் வாங்கி வையுங்கள். எதிர்காலத்தில் இந்த மெட்ராஸ் வேறு மாதிரி இருக்கும் என தெரிவித்தார். அந்த ஏஆர்எஸ் கார்டன் இடத்தை எங்க அம்மா தேவர் பிலிம்ஸில் இருந்து பணம் கொடுத்து வாங்கினார்.
எங்க கிட்ட பணம் இருந்ததை வைத்து சிறிய இடத்தை வாங்கினோம். அதன் அருகில் இருந்த இடத்தை பாரதிராஜா வாங்கினார். அப்போது நாங்கள் லட்சத்தில் தான் சம்பளம் பெற்றோம். சென்னையில் ஸ்டூடியோ, வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஏஆர்எஸ் கார்டன் எனக்கு உயிர் என சொல்லலாம்.
ராதா வந்தது அம்பிகாவினால் தான். எங்கள் குடும்பத்தின் கஷ்டம் தீர்க்க நான் முதல் படிக்கட்டாக இருந்தேன். என் மீது ராதா போலீசில் புகார் கொடுத்தார். ஒரு தனிப்பட்ட பிரச்னை ஒன்று சென்று கொண்டிருக்கிறது. ஏஆர்எஸ் கார்டன் விற்பனைக்கு கிடையாது. கொஞ்ச நாளைக்கு முன்னால் அங்கு சென்றபோது வேறு ஏதோ போர்டு இருந்தது. அதைப் பார்க்கும்போது நான் மனம் நொந்து விட்டேன். சட்டப்படியாக அந்த பிரச்னையை எதிர்கொள்கிறோம்.
பொதுவாக குடும்பத்தில் பிரச்னை வந்தால் நான் வெளியே செல்ல மாட்டேன். ராதா கொடுத்த புகார் போலீஸ், நீதிமன்றம் செல்லும். அப்போது நடந்ததை எல்லாம் சொல்கிறேன். இந்த உலகத்தில் எல்லாமே பணம் தான். முதலில் குடும்பம், உறவுகள் இருந்தால் எதை வேண்டுமானாலும் எதிர்கொள்வேன் என நினைப்பேன். இப்போது அப்படி இல்லை. நன்றி, சென்டிமென்ட், அனுசரித்து செல்லுதல் எல்லாமே வாழ்க்கையில் இருந்து விலகி சென்று கொண்டிருக்கிறது.
நான் தான் ஏமாந்து போய் புகார் தெரிவிக்க வேண்டும். ராதா ஏன் புகார் கொடுத்தார் என தெரியவில்லை. ஒரு அக்கா, தங்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு ஒற்றுமையாக இருந்தோம். என் மீது புகார் கொடுத்ததே அதிர்ச்சி தான். இதுக்கெல்லாம் காரணம் பணம் தான்” என கண் கலங்கியபடி பேசியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















