Aishwarya : "தெருத் தெருவா சோப்பு விக்குறேன்; ஒருவேளைதான் சாப்பாடு.." : ஐஸ்வர்யா சொன்ன அதிர்ச்சி ரக விஷயங்கள்..
சினிமாவில் எனக்கு சில விஷயங்கள் பிடிக்காது. லிப் டூ லிப் கிஸ், க்ளீவேஜ் தெரியும்படி நடிப்பது, முந்தானையை திறந்து காட்டுவது. இந்த மூன்றும் எனக்குப் பிடிக்காது.
பழம்பெரும் நடிகை லஷ்மியின் மகள் நடிகை ஐஸ்வர்யா. இவர் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்தவர். திருமணத்திற்குப் பின்னர் அவருடைய தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகளால் பல்வேறு சிக்கல்களில் சிக்கினார். அதன் பின்னர் சினிமாவில் இருந்து காணாமல் போன அவர் சில காலம் சின்னத்திரையில் உற்சாகமாக வலம் வந்தார். ஆனால், தற்போது அவரின் நிலை என்னவென்று அவரே ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.
நான் இப்போது வீடுவீடாகச் சென்று சோப் விற்கிறேன். அதில்தான் நானும் என் மூன்று பூனைகளும் வாழ்கிறோம். ஒரு நாளைக்கு ஒருவேளைதான் சாப்பிடுகிறேன். ஆனால் நான் தன்மானத்துடன் இருக்கிறேன். இப்போது எனது தேவையெல்லாம் ஏதாவது ஒரு சீரியலில் சான்ஸ். சினிமாவைவிட என்னை சீரியல்தான் வளர்த்தது. அதனால் ஏதாவது ஒரு மெகா சீரியலில் எனக்கு சான்ஸ் கிடைத்தால் நன்றாக இருக்கும். மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்க விரும்புகிறேன்.
மன அழுத்தம் இருக்கு:
எனக்கு மன அழுத்தம் இருந்தது. இப்போதும் பேனிக் அட்டாக்ஸ் வரும். ஆனால் நான் அதிலிருந்து குணமடைந்து வருகிறேன். மனநல சிகிச்சை ஒருபுறம் என்றால் என் நட்புக்கள் மறுபுறம். என் பள்ளித்தோழிகள் தான் என்னைத் தேற்றியுள்ளனர். நான் எப்போதும் பழசைத் திரும்பிப் பார்த்து அழ மாட்டேன். ஒரு விஷயம் முடிந்துவிட்டால் அதை திரும்பிப் பார்க்கக் கூடாது. என்னைவிட என் எக்ஸ் கணவருக்கு அவருடைய இப்போதைய மனைவிதான் பொருத்தமானவர். அவர் என் மகளுக்கும் ஒரு நல்ல மாற்றாந்தாய். எனக்கும் தன்வீருக்குமான சண்டை கோர்ட்டுடன் முடிந்துவிட்டது. அவ்வளவுதான். ஆனால் இப்போதும் தோன்றும் நமக்கே நமக்கென்று ஒரு துணை இருந்தால் எப்படி இருக்கும் என்று. ஆனால், உடனே சுதாரித்துவிடுவேன்.
எப்போது யாரையாவது பார்த்து ஐ லவ் யூ சொல்றோமோ அப்போதே அடக்குமுறை ஆரம்பித்துவிடும். எதற்கு இந்த ட்ரெஸ் என்று ஆரம்பித்து எல்லாவற்றிலும் தலையீடு வரும். திருமணம் நன்றாக அமைந்தால் சேர்ந்து வாழுங்கள். இல்லாவிட்டால் தனித்தும் வாழலாம். நாம் இந்த உலகிற்கு தனியாக வருகிறோம்.. தனியாகப் போகப் போகிறோம். இதில் துணை எதற்கு.
வீட்டில் வளர்ப்பு சரியில்லை:
அதுபோல் பெண்களை சிலர் வக்கிரமாக விமர்சிக்கின்றனர். அப்படி விமர்சிப்பவர்கள் தவறானவர்களால் வளர்க்கப்பட்டிருப்பார்கள். முதலில் பல ஆண்கள் மோசமாக வளர அவர்களின் தாய் தான் காரணம். தினமும் வேலை முடிந்து வந்தவுடனேயே தாய் காபி போட்டுத் தந்தே ஆக வேண்டும் என்று வளர்க்கப்படுகிற ஆண் தான் மனைவிக்கு எல்லா கஷ்டமும் தருவான். மகன் வந்து கேட்டால், எனக்கும் நாள் பூரா வேலை பார்த்து அசதியாக இருக்கு ரெண்டு பேருக்கும் சேர்த்து காபி போட்டு வா என்று ஒரு தாய் அனுப்பினால், அந்த பிள்ளை நன்றாக வளரும்.
எனக்கு அது மட்டும் பிடிக்காது..
சினிமாவில் எனக்கு சில விஷயங்கள் பிடிக்காது. லிப் டூ லிப் கிஸ், க்ளீவேஜ் தெரியும்படி நடிப்பது, முந்தானையை திறந்து காட்டுவது. இந்த மூன்றும் எனக்குப் பிடிக்காது. அதை பிடிக்காமலேயே நான் செய்திருக்கிறேன். அதை செய்ததற்காக இன்றும் வருந்துகிறேன்.