Thug Life: கமல்ஹாசனுடன் கைகோர்த்த “பூங்குழலி”.. தக் லைஃப் படத்தில் இணைந்த ஐஸ்வர்யா லஷ்மி!
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இணைந்துள்ளார்.
நாயகன் படத்துக்குப் பிறகு சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் இணையும் திரைப்படம் தக் லைஃப்.
கமலுடன் இணைந்த பூங்குழலி
இப்படத்தில் நடிகை த்ரிஷா கமல்ஹாசனுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேர்கிறார். மேலும் இப்படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், கௌதம் கார்த்திக் என பெரும் பட்டாளமே இணைந்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் புதிதாக நடிகை ஐஸ்வர்யா லஷ்மி இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலில் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களைக் கட்டிப்போட்ட நடிகை ஐஸ்வர்யா லஷ்மி, தற்போது கமல் - மணிரத்னம் காம்போவுடன் இணைய உள்ளார்.
With utmost joy, we welcome the elegant @AishuL_ to the ensemble of #ThugLife#Ulaganayagan #KamalHaasan @ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @actor_jayamravi @trishtrashers @dulQuer @C_I_N_E_M_A_A @Gautham_Karthik @abhiramiact #Nasser@MShenbagamoort3… pic.twitter.com/pEBGDEL7Qb
— Raaj Kamal Films International (@RKFI) January 11, 2024
விரைவில் தொடங்கும் ஷூட்டிங்
கேரள நடிகையான ஐஸ்வர்யா லஷ்மி தனது முந்தைய தமிழ் படங்கள் மூலம் ஏற்கெனவே ரசிகர்களை சம்பாதித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளாது
வரும் ஜனவரி 18ஆம் தேதி இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது. விக்ரம் படத்துக்குப் பிறகு இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துகொண்டு அதனை முடித்துக் கொடுத்த கமல்ஹாசன் அடுத்ததாக இப்படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ள நிலையில், அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதால் தொடர்ந்து இப்படத்தின் அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. முன்னதாக வெளியான தக் லைஃப் படத்தின் அறிமுக வீடியோ மாறுபட்ட வகையில் அமைந்து ரசிகர்களை ஈர்த்தது. காயல்பட்டினத்தைச் சேர்ந்த ‘யகூசா’ என கமல் அறிமுகமான நிலையில் இந்த வீடியோ இணையத்தில் லைக்ஸ் அள்ளியது.
மற்றொருபுறம் நடிகர் கமல்ஹாசன் ஹெச் வினோத் இணையும் திரைப்படமான கேஹெச் 233 திரைப்படம் ட்ராப் செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால் இப்படத்துக்கு முன்னதாக கே.ஹெச் 234 திரைப்படமான தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் தொடங்குவது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்றொருபுறம் பிரபாஸ் நடித்து வரும் பான் இந்தியத் திரைப்படமான கல்கி 2898 படத்தில் வில்லனாக கமல்ஹாசன் நடித்து வருகிறார். பெரும் பொருட்செலவில் சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
மேலும் படிக்க: Nayanthara: "சுயநலத்துக்கு பின்னால் ஒரு பொதுநலம் இருக்கு" - புது பிசினஸ் குறித்து மனம் திறந்த நடிகை நயன்தாரா!