The GOAT Thala : கோட் படத்தில் "தல" தோனியா? அஜித்தா? மனம் திறந்த விஜய்யின் ரீல் மகள்
கோட் படத்தில் தல என்று குறிப்பிட்டது நடிகர் அஜித்தையா? தோனியையா? என்ற கேள்விக்கு அந்த படத்தில் விஜய்யின் மகளாக நடித்த அப்யுக்தா பதிலளித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உலா வருபவர் நடிகர் விஜய். இவர் இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கோட் படம் கடந்த 5ம் தேதி வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
தல என்று குறிப்பிட்டது யாரை?
இந்த படத்தை நடிகர் அஜித்தை வைத்து மங்காத்தா என்ற வெற்றிப்படத்தை இயக்கிய வெங்கட்பிரபு இயக்கியிருப்பதால் படத்தில் அஜித் பற்றிய காட்சிகளும், வசனங்களும் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு தொடக்கத்தில் இருந்தே இருந்து வந்தது. அதற்கேற்ப வெங்கட்பிரபுவும் படத்தின் முக்கியமான இடத்தில் அப்படி ஒரு காட்சி இருப்பதாக கூறினார்.
படத்தின் கிளைமேக்சில் தல என்ற வார்த்தையை பயன்படுத்துவது குறித்து படத்தில் விஜய்யின் மகளாக நடித்துள்ள அப்யுக்தாவிடம் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளர் கேட்டார். அதற்கு அவர், அது தல தோனியாக கூட இருக்கலாம். எனக்கு தளபதிதான் ஃபேவரைட் என்று கூறினார்.
அதிருப்தியில் அஜித் ரசிகர்கள்:
அதற்கு அந்த தொகுப்பாளர் அந்த இடத்தில் மங்காத்தா பி.ஜி.எம். வருகிறதே என்று கேட்டபோது, அதற்கு அந்த நடிகை அது நீங்க யோசிக்கனும். ஆனால், சி.எஸ்.கே. மேட்ச்சில் இருக்கிறோம் என்றார். நடிகை அப்யுக்தாவின் இந்த பதில் அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மங்காத்தா படம் முதலே அஜித்தின் நெருங்கிய நட்பு வட்டாரத்திற்கு உள்ளான ஒருவராக மாறியவர் வெங்கட்பிரபு. இவர் இந்த படத்தின் வௌியீட்டிற்கு முன்பு வரை தனது ஒவ்வொரு பேட்டியில் நடிகர் அஜித் பற்றியும், அஜித் – விஜய் உறவு பற்றியும், அஜித்தின் வாழ்த்து குறித்தும் பேசி வந்தார்.
படத்தின் இறுதிக்காட்சியில் வரும் யாரோட ஃபேன் நீ என்ற வசனமும், அதற்கு தல என்ற வசனமும் தோனியையும், அஜித்தையும் இணைக்கும் விதமாக சி.எஸ்.கே. போட்டி மற்றும் மங்காத்தா பி.ஜி.எம்.முடன் இருக்கும். இது தோனி, அஜித் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. ஆனால், படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் யாரோட ஃபேன் நீ என்ற கேள்விக்கு தோனியின் புகைப்படத்தை வெளியிட்டு சி.எஸ்.கே. வெளியிட்ட எக்ஸ் பதிவை ரீ ட்விட் செய்தது அஜித் ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்தது. இந்த சூழலில், படத்தின் முக்கிய நடிகை ஒருவரும் இதுபோல கூறியிருப்பதற்கு அஜித் ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர்.