Toxic: டாக்சிக் யஷ்! நாளை மறுநாள் முக்கிய அப்டேட் தரும் ராக்கி பாய் - ரெடியா இருங்க
பிரபல நடிகர் யஷ் நடிக்கும் டாக்சிக் படத்தின் முக்கிய அப்டேட் நாளை மறுநாள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னடத்தில் உருவான படம் கே.ஜி.எப். 2018ம் ஆண்டு வெளியான இந்த படம் கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என இந்தியா முழுவதும் டப்பிங் செய்யப்பட்டு ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
டாக்சிக்
இந்த படம் தந்த மிகப்பெரிய வெற்றியால் இந்தியா முழுவதும் பிரபலமான ஹீரோவாக கே.ஜி.எஃப். ஹீரோ யஷ் உருவெடுத்துள்ளார். கே.ஜி.எஃப். இரண்டாம் பாகமும் கடந்த 2022ம் ஆண்டு ரிலீசாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு யஷ், டாக்சிக் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு கடந்தாண்டு வெளியாகியது. இந்த படத்தில் பிரபலங்கள் பலரும் நடித்து வரும் நிலையில், இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை மறுநாள் ரிலீசாக உள்ளது. இதை படத்தின் நாயகன் யஷ் மற்றும் படக்குழு அறிவித்துள்ளனர்.
நாளை மறுநாள் அப்டேட்:
டாக்சிக் படத்தில் யஷ்ஷிற்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். நவாசுதீன் சித்திக், கரீனா கபூரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படம் இந்தாண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கீது மோகன்தாஸ் இந்தியில் லையர்ஸ் டைஸ், மூதோன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது டாக்சிக் படத்தை இயக்கி வருகிறார்.
கன்னட திரையுலகின் முக்கிய தயாரிப்பு மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் நிறுவனமான கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
கே.ஜி.எஃப். படத்தின் மூலம் மிகப்பெரிய நடிகராக உருவெடுத்துள்ள யஷ் நடிக்கும் இந்த படத்தின் மீது மிகப்பெரிய அறிவிப்பு உருவாகியுள்ளது. பிரபலங்கள் பலரும் இந்த படத்தில் குவிந்துள்ளதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. நாளை மறுநாள் இந்த படத்தின் போஸ்டர் அல்லது கிளிம்ப்ஸ் போன்று ஏதாவது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.