மேலும் அறிய

விஜயை டார்லிங் என்றுதான் கூப்பிட்டேன்..முதலமைச்சரை சந்தித்தது குறித்து விஷால் பகிர்ந்த தகவல்

மகுடம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டில் நடிகர் விஷால் தமிழக முதல்வர் விஜயை சந்தித்து அவருடனான உரையாடலை பகிர்ந்துகொண்டார்

விஷால் இயக்கி நடித்துள்ள மகுடம் திரைப்படத்தின் இரண்டாம் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் பேசிய நடிகர் விஷால் தமிழக முதல்வர் விஜயை சந்தித்தது குறித்தும் அவருடனான உரையாடல் குறித்தும் பகிர்ந்துகொண்டார். முதல்வர் விஜயை டார்லிங் என்று அழைத்ததாக விஷால் தெரிவித்துள்ளார்

முதல்வர் விஜயை டார்லிங் என்றுதான் அழைத்தேன் 

நிகழ்வில் பேசிய விஷால் "முதலமைச்சர் அவர்களை எனக்கு கடந்த 30 ஆண்டுகளாக, அவரது முதல் படத்திலிருந்தே தெரியும், கல்லூரியில் அவர் என் அண்ணனுடன் படித்தவர், அப்போதிருந்து நான் அவரைச் சந்தித்து வருகிறேன்இப்போது அவர் முதலமைச்சரான பிறகு நான் அவரைச் சந்திக்கச் சென்றபோதும், அவரிடம் எந்த மாற்றமும் இல்லை,அதே நபர், அதே உடல்மொழி, அதே நல்ல குணம்; பதவி மட்டும்தான் மாறியிருக்கிறது, நான் விஜய்யிடம் பேசும்போது, 'சாரி டார்லிங்' என்று தான் சொன்னேன், ஒரு முதலமைச்சரை 'டார்லிங்' என்று கூப்பிடுவது எவ்வளவு நல்ல விஷயம் என்று நினைத்துப் பாருங்கள், ஒரு நண்பரிடம் பேசுவது போலவே இருந்தது, அந்தச் சூழலே மிகவும் அழகாக இருந்தது,

நான் அவரிடம், 'உங்களுக்குப் பூங்கொத்து கொடுப்பதற்குப் பதிலாக, உங்கள் பெயரில் மூன்று குழந்தைகளைப் படிக்க வைக்கிறேன்' என்று சொன்னேன், அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து அதற்கு சம்மதித்தார், முதலமைச்சருக்குப் பூங்கொத்து கொடுக்காததன் மூலம் நான் மரபை மீறிவிட்டேன் என்பது உண்மைதான், ஆனால், அவர் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார், அது என்னுடைய பெருந்தன்மை அல்ல, அதை ஏற்றுக்கொண்ட அவருடைய பெருந்தன்மை, அவர் சம்மதித்ததில்தான் எனக்கு மகிழ்ச்சி, அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இது நடந்திருக்காது !

அந்த மூன்று பெண் குழந்தைகளும் அடுத்த மூன்று வருடங்களுக்கு விஜய் பெயரில் படிக்கப் போகிறார்கள்,  முதலமைச்சரின் பெயரால் அவர்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் அமையப் போகிறது, அதற்காக நான் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும், இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் சந்தித்த அதே விஜய்தான் அவர், இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரிடம் ஒரு கதை சொல்வதற்காக இதே இடத்திற்குச் சென்றிருந்தேன். அதே விஜய்யிடம் (நான் அவரை விஜய் என்று சொல்கிறேன், இப்போது அவர் முதலமைச்சர்) சென்று, 'கடந்த முறை நான் வந்தபோது கதை சொல்வதற்காக உங்களிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டது நினைவிருக்கிறதா?' என்று கேட்டேன். 'ஆமாம், ஆமாம், நினைவிருக்கிறது' என்றார், இப்போது நீங்கள் சினிமாவில் இல்லை என்பதால், நான் உங்கள் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறேன்' என்று சொன்னேன், அதற்கு விஜய் அவர்கள் சிரித்தார் !

Advertisement

தலைப்பு செய்திகள்

R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?
R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?
லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
Embed widget