மேலும் அறிய

Vinayakan: மோசமான நடத்தை.. பிரிந்து போன மனைவி.. வேதனையுடன் பேசிய ரஜினி பட வில்லன்!

இப்போது என் வாழ்க்கையில் மனைவி இல்லை. இதனால் என் வாழ்க்கை மிகவும் இருண்டு விட்டது. குறிப்பாகப் பணத்தைக் கையாள்வது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது என நடிகர் விநாயகன் தெரிவித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகர் விநாயகன் ஒரு நேர்காணலில் தன்னுடைய 40 வருட மண வாழ்க்கை முறிந்தது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதனைப் பற்றிக் காணலாம். 

தமிழ், மலையாளத்தில் கலக்கும் வில்லன்

தமிழில் திமிரு படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விநாயகன். இவர் எல்லாம் அவன் செயல், சிலம்பாட்டம், காளை, மரியான், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 2023ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்தன் மூலம் பட்டித்தொட்டியெங்கும் விநாயகன் புகழ் பரவியது. மலையாளத்திலும் தனக்கென தனியிடம் பிடித்த அவர், கடந்த சில ஆண்டுகளாகவே கடும் சர்ச்சையில் சிக்கி வருகிறார்.  இது அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் சறுக்கலை உண்டாக்கியுள்ளது.  

சர்ச்சையை கிளப்பிய விநாயகன்

2022ம் ஆண்டு மீ டூ இயக்கம் பற்றி விநாயகன் சர்ச்சையாக பேசினார். தொடர்ந்து கேரளம் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவின்போது யார் இவர் என கேட்டு அதிர வைத்தார். தொடர்ந்து ஹைதரபாத் விமான நிலையத்தில் மதுபோதையில் பாதுகாப்புப்படை அதிகாரியுடன் வாக்குவாதம் செய்தார். தனது அண்டை வீட்டாருடன் சண்டையின்போது அநாகரிகமான முறையில் நடந்து கொண்டார். இப்படி சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்ற விநாயகன் தனது மனைவியின் பிரிவால் நொறுங்கி போயுள்ளார். 

மனைவியுடனான சந்திப்பும்.. சண்டையும்

ஒரு நேர்காணலில் பேசிய அவர், “எனக்கு 19 வயதாக இருக்கும்போது நான் என் மனைவி பபிதாவை முதல்முறையாக சந்தித்தேன். மகாராஜா கல்லூரியில் இந்த சந்திப்பு தொடங்கியது. இது ஒரு காதல் திருமணமாகும். நாங்கள் இருவரும் 40 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தோன். அவள் திடீரென்று பிரிந்து சென்று விட்டாள். எங்கள் இருவரிடையேயும் எந்த சண்டையும் இல்லை. சேர்ந்து வாழ முடியாததால் தான் பிரிந்தோம். வாழ்க்கையில் நாம் குறைந்தபட்சம் ஒருவரிடமாவது மனம் திறந்து பேசுவோம்.

அப்படிப்பட்ட நபராக தான் பபிதா இருந்தார். இப்போது என் வாழ்க்கையில் அப்படி யாரும் இல்லை. இதனால் என் வாழ்க்கை மிகவும் இருண்டு விட்டது. குறிப்பாகப் பணத்தைக் கையாள்வது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. என்னிடம் ஜிபே போன்ற வசதிகள் கிடையாது. எல்லாவற்றையும் பபிதா தான் கவனித்து வந்தார். 

இந்த பிரிவுக்கு நான் தான் முழு பொறுப்பாகும்.எனது நடத்தை மனைவியின் அமைதி மற்றும் நிம்மதியை பறித்து விட்டது. அவளால்இனிமேலும் சமாளிக்க முடியாததால் பிரிந்து சென்று விட்டார். அது அவரின் தவறு கிடையாது. தொடர்ச்சியான சண்டை சச்சரவுகளுடன் வாழ்க்கை தொடர்வதை விட இந்த பிரிவு நல்லது என உணர்ந்தேன். இன்றும் கூட பபிதா நான் தொடர்பான விஷயங்களை கவனித்துக் கொள்கிறாள். எனக்கு ரீசார்ஜ் உள்ளிட்ட விஷயங்களை அவர் தான் செய்கிறார்” என விநாயகன் தெரிவித்துள்ளார். இருவரும் கடந்த 2023ம் ஆண்டு பிரிவதாக அறிவித்த நிலையில் தற்போது விநாயகன் மனம் திறந்து பேசியுள்ளது மலையாள சினிமாவில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget