Power House Teaser: ஃபுல் மீல்ஸ் தரப்போகும் சீயான்.. ரிலீசானது விக்ரமின் பவர் ஹவுஸ் பட டீசர்! மாஸா இருக்கு..
Power House Teaser: நடிகர் விக்ரமின் நடிப்பில் உருவாகியுள்ள பவர்ஹவுஸ் படத்தின் டீசர் ரிலீசாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் மிகவும் தவிர்க்க முடியாத நடிகராக உலா வருபவர் விக்ரம். இவர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் புதியதாக நடிக்கும் படத்தின் பெயர் மற்றும் டீசர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பவர்ஹவுஸ்:
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு பவர்ஹவுஸ் என்று இயக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படத்தின் டீசரில் விக்ரம் அவரது குடும்பத்தினரையும் அறிமுகப்படுத்துகின்றனர். விக்ரமின் அண்ணியாக ஊர்வசியும், விக்ரமின் சகோதரர்கள், தங்கை அனைவரும் வீட்டிலே இனிப்புகள் தயாரித்து விற்பவர்களாக காட்டப்படுகின்றனர்.
ஆக்ஷன்:
#Chiyaan63 titled #PowerHouse. A catering service guy has a secret past. Is this @anandshank ‘s #Baasha moment for @chiyaan ? 💥💥 pic.twitter.com/gqawztn8pf
— Rajasekar (@sekartweets) September 14, 2026
பின்னர், விக்ரம் ஒரு அறைக்கு செல்லும்போது அங்கே இருவரை அடித்து ரத்தக்காயத்துடன் வைத்திருப்பது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஆக்ஷன் காமெடி திரைப்படமாக இந்த படம் அமையும் என்று எதிர்பாரக்கப்படுகிறது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். வசனங்களை ஷான் கருப்பசாமி எழுதியுள்ளார். ப்ருந்தா நடனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். விவேக் பாடல்களை எழுதியுள்ளார்.
இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து ரியா ஷிபு, ஷமி திலகன், மேகா ராஜன், சுபாஷ் செல்வம், சம்யுக்தா ஹெக்டே, விடிவி கணேஷ் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். பவர் ஹவுஸ் படத்தில் இப்போதானே சமைக்க ஆரம்பிச்சுருக்கேன்.. ஃபுல் மீல்ஸ் கொடுத்துட்டுதான் போவேன் என்று விக்ரம் கூறும் வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
எதிர்பார்ப்பு:
இருமுகன் படத்தை விக்ரமை வைத்து இயக்கிய ஆனந்த் ஷங்கரே இந்த படத்தையும் இயக்கியிருப்பதால் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இருமுகன் படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் பலரது பாராட்டுகளையும் பெற்றது.
விக்ரம் நடிப்பில் கடந்தாண்டு வீர தீர சூரன் படம் வெளியாகிய நிலையில், ஓராண்டுக்கு பிறகு இந்த படம் வெளியாகிறது. இவரது நடிப்பில் நீண்ட நாளாக கிடப்பில் உள்ள துருவ நட்சத்திரம் படமும் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















