மேலும் அறிய

Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்

தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் நடிகர் விஜய் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்திய தமிழக அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

விஜய் பிறந்தநாள்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கடந்த ஜூன்  22 ஆம் தேதி தனது 50 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் இறப்பை அனுசரிக்கும் விதமாக தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்கும்படி தனது ரசிகர்களிடம் விஜய் வேண்டுகோள் வைத்திருந்தார். விஜயின் பிறந்தநாளுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். 

 நன்றி தெரிவித்த விஜய் 

தனது பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நடிகர் விஜய் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் “ எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது பிறந்த நாளை முன்னிட்டு தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகத் தளங்கள் வாயிலாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக புதுச்சேரி மாநில மாண்புமிகு முதலமைச்சர் திரு. என்.ரங்கசாமி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருமான திரு. எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்
மதிப்பிற்குரிய திரு. ஒ. பன்னீர்செல்வம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் மதிப்பிற்குரிய திருமதி தமிழிசை சௌந்தரராஜன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர், பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய திரு. செந்தமிழன் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திரு. தொல். திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர், அன்பிற்கும்
மதிப்பிற்கும் உரிய டாக்டர் அன்புமணி இராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய திரு. டி.டி.வி. தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திரு. கமல்ஹாசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்
தலைவர் மதிப்பிற்குரிய திரு. ஜான் பாண்டியன், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய திரு. நெல்லை முபாரக், சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான மதிப்பிற்குரிய திரு. கு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர், மதிப்பிற்குரிய திரு. கே. அண்ணாமலை, முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய திரு. எஸ். திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர் மதிப்பிற்குரிய திரு. டி. ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திரு. எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திரு. சி.விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திருமதி வானதி சீனிவாசன், நாடாளுமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திரு. விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திருமதி. தாரகை கத்பட், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திரு. ஒ.பி.ரவீந்திரநாத் மற்றும் என்றும் எனது நெஞ்சிற்கினிய கலைத்துறை சார்ந்த அனைத்து ஆளுமைகள், வழிகாட்டிகள், நண்பர்கள், சகோதர சகோதரிகள், ஊடக நிறுவனங்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகள், என் நெஞ்சில் குடியிருக்கும் கழகத் தோழர்கள், உலகெங்கும் உள்ள என் உயிரினும் மேலான கோடானு கோடி சொந்தங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும்எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்.” விஜய் குறிப்பிட்டுள்ளார்

சீமான் , திருமா , அன்புமணிக்கு சிறப்பு நன்றி

இதிக் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் , விடுதலை சிறுத்தைக் கட்சித் தலைவர் தொல் திருமா வளவன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் ஆகிய மூவரையும் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர்கள் என்று விஜய் குறிப்பிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

5, 8ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் முறை ரத்து: கல்வி அமைச்சர் அறிவிப்பு
5, 8ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் முறை ரத்து: கல்வி அமைச்சர் அறிவிப்பு
RN Ravi Meets PM Modi : ”ஆளுநர் – பிரதமர் சந்திப்பு – இருவரும் பேசியது என்ன?” வெளிவராத விவரங்கள்..!
RN Ravi Meets PM Modi : ”ஆளுநர் – பிரதமர் சந்திப்பு – இருவரும் பேசியது என்ன?” வெளிவராத விவரங்கள்..!
CA Registration: சிஏ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- ஜன.1 கடைசி- எப்படி?
CA Registration: சிஏ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- ஜன.1 கடைசி- எப்படி?
Pudhumai Penn scheme: அடடே.. இனி இவர்களுக்கும் மாதம் ரூ.1000: டிச.30 முதல் அமல்- விவரம்!
Pudhumai Penn scheme: அடடே.. இனி இவர்களுக்கும் மாதம் ரூ.1000: டிச.30 முதல் அமல்- விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
5, 8ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் முறை ரத்து: கல்வி அமைச்சர் அறிவிப்பு
5, 8ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் முறை ரத்து: கல்வி அமைச்சர் அறிவிப்பு
RN Ravi Meets PM Modi : ”ஆளுநர் – பிரதமர் சந்திப்பு – இருவரும் பேசியது என்ன?” வெளிவராத விவரங்கள்..!
RN Ravi Meets PM Modi : ”ஆளுநர் – பிரதமர் சந்திப்பு – இருவரும் பேசியது என்ன?” வெளிவராத விவரங்கள்..!
CA Registration: சிஏ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- ஜன.1 கடைசி- எப்படி?
CA Registration: சிஏ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- ஜன.1 கடைசி- எப்படி?
Pudhumai Penn scheme: அடடே.. இனி இவர்களுக்கும் மாதம் ரூ.1000: டிச.30 முதல் அமல்- விவரம்!
Pudhumai Penn scheme: அடடே.. இனி இவர்களுக்கும் மாதம் ரூ.1000: டிச.30 முதல் அமல்- விவரம்!
DMK Alliance: ஆடிப்போன ஸ்டாலின் ”தமிழகத்தில் அதிக ஆணவக் கொலைகள், தலித் கொடுமைகள்
DMK Alliance: ஆடிப்போன ஸ்டாலின் ”தமிழகத்தில் அதிக ஆணவக் கொலைகள், தலித் கொடுமைகள்" கூட்டணி கட்சி போட்ட பழி
கல்வி சுதந்திரத்தைப் பறிப்பதா? 5, 8ஆம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது: வலுக்கும் எதிர்ப்பு!
கல்வி சுதந்திரத்தைப் பறிப்பதா? 5, 8ஆம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது: வலுக்கும் எதிர்ப்பு!
"பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு” தமிழக அரசியல் பற்றி பேச்சா?
UGC NET: பண்டிகை அல்ல; கலாச்சாரம்: பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வா? பொங்கி எழுந்த தமிழக அரசு!
UGC NET: பண்டிகை அல்ல; கலாச்சாரம்: பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வா? பொங்கி எழுந்த தமிழக அரசு!
Embed widget