Vijay Visit Marakkar Set | அன்று அஜித்.. இன்று விஜயா? மரக்கார் ஷூட்டிங்கில் தல.. தளபதி? இன்று வீடியோ?!
மலையாளத்தில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் மரக்கார் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் விஜய் திடீர் விசிட் அடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மலையாளத்தில் பெரிய பட்ஜெட் படங்கள் வருவது அபூர்வத்திலும் அபூர்வம். குறைந்த பட்ஜெட்டில் எதார்த்த சினிமாக்களை கொடுக்கவே கடவுளின் தேசம் விரும்பும். ஆனால் சில படங்கள் இந்த விதியை உடைத்து உருவாக்கப்படும்.
அப்படி உருவாகியுள்ள திரைப்படம்தான் மரக்கார். இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ரூ.85 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் மரக்காராக மோகன்லால் நடிக்கிறார். ஆங்கிலேயர்களை எதிர்த்து முதலில் கடற்படையை உருவாக்கிய மரக்காரின் உண்மைக்கதையை தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் அண்மையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் அஜித் தளத்திற்கு சென்றார். அவரைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியும் அங்கு சென்றிருந்தார்.
இந்தநிலையில் தற்போது மரக்கார் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் விஜய் திடீர் விசிட் அசித்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பான புகைப்படம் ஒன்றை, படக்குழு வெளியிட்டுள்ளது.
முன்னதாக, மரக்கார் திரைப்படம் கடந்த வருடமே ரிலீஸுக்கு காத்திருந்தது. கண்டிப்பாக தியேட்டரில்தான் படம் வெளியாகுமென படக்குழு அடித்துக் கூறியது. ஆனால் பல குழப்பங்கள் இடையே வர வியாபாரமும் சரியாக இல்லை எனக் கூறப்பட்டது. இதனால் படத்தை அமேசான் ப்ரைமுக்கு கொடுக்க படக்குழு ஓகே சொல்லியதாக தகவல் வெளியானது. இப்படியான பிரமாண்ட படம் தியேட்டரில் ரிலீஸ் இல்லையா என ரசிகர்கள் நொந்துகொள்ள கேரள அமைச்சரோ தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டுமென நேரடியாக கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து பேசிய அமைச்சர் ஷாஜி செரியன், “பெரிய நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள்வரை யார் நடித்த படமாக இருந்தாலும் அதை முதலில் திரையரங்குகளில்தான் வெளியிட வேண்டும். ஓடிடி தளங்கள் மூலமாக முதலில் திரைப்படங்களை வெளியிடும் கலாசாரத்தை கேரள அரசு ஊக்குவிக்க விரும்பவில்லை”எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இடைக்கால தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒன்று. இக்கட்டான காலக்கட்டங்களிலும், திரையரங்குகளில் திரையிட வாய்ப்பு கிடைக்காத சிறிய படங்களை மட்டுமே ஓடிடியில் இனி வெளியிட வேண்டும். திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாவது நின்றுவிட்டால் சினிமாத் துறை அழிவை நோக்கி செல்லும்” என்றும் அவர் பேசினார்.
Watch Video | பிக்பாஸ் சம்யுக்தா போட்ட குத்து டான்ஸ்.. நட்சத்திராவின் நோ நோ டான்ஸ்.. இன்ஸ்டா வைரல்!#Samyuktha https://t.co/OGbL2gYNkz
— ABP Nadu (@abpnadu) November 19, 2021