Vijay Viral Photo: பிளாக் டி -சர்ட்.. ஒயிட் கிளாஸ்.. தளபதி விஜய்யின் லேட்டஸ்ட் போட்டோ..! சோஷியல் மீடியா வைரல்!
விஜயின் புதிய போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் தனது சினிமா வாழ்கையில் 29 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.நாளைய தீர்ப்பின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த விஜய், இன்று அனைத்து தரப்பினரும் விரும்பும் நடிகராக மாறியிருக்கிறார். இதனை அவரது ரசிகர்கள் காமன் டிபியை வெளியிட்டு சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
Awesome @shynu_mash 🤩#29YrsOfVIJAYSupremacy https://t.co/gC6hgPfmIh
— Seven Screen Studio (@7screenstudio) December 3, 2021
இந்த நிலையில், தற்போது நடிகர் விஜயின் ஒரு புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பிளாக் டி சர்ட், கண்ணாடி அணிந்திருக்கும் விஜய் போர்டில் சென்று கொண்டிருக்கிறார்.
29 years of a remarkable journey yet the kind of dedication and professionalism you display is truly inspiring. Every moment I spend with you is a learning process. Wishing you lot more success and happiness in the years to come @actorvijay na 🤗♥️#29YrsOfVIJAYSupremacy pic.twitter.com/f6hMWNxoZS
— Jagadish (@Jagadishbliss) December 4, 2021
விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் 100 நாட்களை நிறைவு செய்த நிலையில், அது தொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை முடித்தவுடன் நடிகர் விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விஜயின் 68 வது இயக்குநர் அட்லீ இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜயின் கதை
தமிழ்சினிமாவில் ஒரு ஹீரோ 10 வருடங்களுக்கு மேல் தாக்குபிடிக்கிறார் என்றால் படங்களை தாண்டி அந்த நடிகரிடம் இருக்கும் ஏதோ ஒரு விஷயம் மக்களுக்கு பிடித்திருக்கிறது என்று அர்த்தம்.
அதன் பின்னர் விஜய் மீது யாருக்கும் பெரிய அபிப்ராயம் கிடையாது. விஜய்யா.. அவனுக்கு என்ன... அவன் உண்டு.. அவன் வேலை உண்டுனு இருப்பான் என்ற எண்ணம்தான் எல்லோருக்கும். சின்ன வயதில் இருந்தே சாந்த சொரூபன் எனற பெயரை சம்பாதித்த விஜய் திடிரென்று தனது தந்தையிடம் வந்து நான் நடிக்க வேண்டும் என்று கூறுகிறார். அப்போது எல்லோரையும் போலதான் சந்திர சேகரும் நீ ஒழுங்காக பேச கூட மாட்டாய்... நீ எப்படி சினிமாவில்... என தயங்கினார்.. ஆனால் விஜய் விடுவதாக இல்லை... நான் நடித்தே தீர வேண்டும் டாட்.. என்று அடம் பிடிக்க பெரும் பிரளயத்திற்கு பிறகு எஸ்.ஏ.சியிடம் இருந்து சம்மதம் கிடைத்தது.
ஆசைப்பட்டுட்ட சரி ஏதாவது நடித்துக்காட்டு என்று கூறிய எஸ்.ஏ.சியும் விஜய்க்கு இப்படி ஒரு முகம் இருக்குமென்று எதிர்பார்த்திருக்க மாட்டார் “ ரஜினியின் அண்ணாமலையில் இருந்து ஒரு சீனை விஜய் நடித்து காட்ட எஸ்.ஏ.சி வாயடைத்துப் போனார். அந்த அமைதிப்பிரளயம் அப்படிதான் தனது பயணத்தை தொடங்கியது. ‘நாளைய தீர்ப்பும்’ உருவானது. தந்தையின் தோளைப்பிடித்து வந்ததால், தமிழ் சினிமா அவர் மீது கல் எரியாமல் இல்லை.. ஆரம்பகாலக்கட்டங்களில் விஜய் மீது ஆயிரத்தெட்டு விமர்சனங்கள்..
விவரம் புரியாத வயது என்றாலும் அவை அனைத்தையும் தனது ‘ அமைதி’ கொண்டே சமாளித்தார் விஜய். வெற்றியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த விஜய்க்கு ‘ரசிகன்’ படம் பெரிய வெற்றியைப் பெற்றுத்தந்து விட விஜய் ‘இளைய தளபதி’ விஜய் என்று மாற்றம் கண்டார். ‘பூவே உனக்காக’ நல்லப் பெயரை பெற்றுத் தந்தாலும் அதற்கு அடுத்தப்படங்கள் அவருக்கு தோல்விகளையே கொண்டுவந்தன இருப்பினும் அவர் கடுமையாக உழைத்தார்... மன்னிக்கவும் அமைதியாக உழைத்தார். பின்னர் வந்த ‘லவ் டுடே’ நல்ல வெற்றியை பெற விஜய் பிக் அப் ஆக ஆரம்பித்தார்.
தொடர்ந்து வந்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ ‘மின்சாரக்கண்ணா’ ‘குஷி’ ‘பிரியமானவளே’ உள்ளிட்ட படங்கள் விஜயை அனைவருக்கும் பிடித்த கமர்ஷயல் ஹீரோவாக மாற்றியது. அதன் பின்னர் ‘திருமலை’ ‘கில்லி’ உள்ளிட்ட படங்களில் அவர் கையில் எடுத்த ஆக்ஷன் அவதாரமும்.. தங்கச்சி சென்டிமெண்டும் அவரை தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் சென்று சேர்த்து விட்டது. அப்போது அவர் கொடுத்த நேர்காணல்களிலும் சரி, பிரஸ் மீட்களிலும் வெளிப்பட்ட விஜயின் அமைதி... இவரா இவ்வளவும் பண்றார் என்ற பிரமிப்பை திரைப்பிரபலங்களிடம், ரசிகர்களிடமும் ஏற்படுத்தியது. 2007 ஆம் ஆண்டு வெளியான விஜய்க்கு ‘போக்கிரி’பெரிய வெற்றியை பெற்றுத்தந்தாலும் ‘ வில்லு’ ‘அழகிய தமிழ் மகன்’ ‘ குருவி’ உள்ளிட்ட படங்கள் அவரை தோல்வியின் பாதைக்கு அழைத்து சென்று விட்டன. மீள முடியாமல் இருந்த விஜயை ‘காவலன்’ சிறு ஆறுதலாக அமைந்தது.
அப்போது விஜய் கொடுத்த ஒன்றில் தொகுப்பாளர் ஒரு கேள்வி கேட்பார் “ இப்படி அமைதியாக இருப்பதால் உங்களுக்கு என்ன கிடைக்குது” அதற்கு விஜய் “ இது என்ன பண்ணும்னு எனக்கு தெரியல.. ஆனால் இத வச்சு நிறைய விஷயங்களை சாதித்திருக்கிறேன் என்று கூறினார்.. ஆம் அதை வைத்து பின்னர் அவர் சாதித்துக்காட்டியது எல்லாம் வரலாறு.. அதன் பின்னர் விஜய் நடித்த ‘நண்பன்’ ‘ துப்பாக்கி’ ‘ கத்தி’ ‘மெர்சல்’ ‘பிகில்’ ‘மாஸ்டர்’ படங்கள் எல்லாம் எகிடுதகிடு கிட்ஸ்.
‘காவலன்’ ‘துப்பாக்கி’ ‘தலைவா’ படங்கள் பிரச்னையை சந்தித்த போது கைகளை இறுகக் கட்டிக்கொண்டு அமைதியாக அத்துனை காய்களையும் நகர்த்தினார் விஜய்.. அவர் சொன்னது போலவே நெகட்டிவிட்டி அமைதியாக அவரை விட்டு நகர்ந்தது. ரஜினியிடம் ஒரு முறை உங்களிடம் விஜயிடம் பிடித்தது என்ன என்று கேட்க.. அவர் கூறிய பதில் ‘விஜயோட அமைதி’ தனது கையால் விஜய்க்கு விருது கொடுத்த கமலும் ‘ விஜய் உழைக்கிறது பிடிக்கும் அமைதியா உழைக்கிறது’ இன்னும் பிடிக்கும் என்றார்... விஜயின் அமைதிக்கு இன்னொரு பக்கபலம்.. அவரின் ஆடைகள். (மாஸ்டர் ஆடியோ லான்ச் விதிவிலக்கு). அந்த அமைதிதான் விஜயை நடிகர் என்பதை தாண்டி ஒரு உணர்வாக விஜய் ரசிகர்களின் மனதில் அவரை ஆழப்பதித்திருக்கிறது. ஆனால் சமீப காலமாக விஜய் அமைதியில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. “ஸ்பீடா போன கவனம் மஸ்ட் நண்பா..
மேலும் படிக்க:
STR | தயாராகுங்க சிம்பு ஃபேன்ஸ்! - அடுத்த வாரம் சிறப்பான சம்பவம் காத்திருக்கு !https://t.co/KuTngviclY#STR #Silambarasan
— ABP Nadu (@abpnadu) December 4, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்