Watch Video : பீஸ்ட் படக்குழுவுடன் காரில் லாங்டிரைவ் சென்ற நடிகர் விஜய்...! வைரல் வீடியோ உள்ளே..!
பீஸ்ட் படக்குழுவினரை நடிகர் விஜய் தனது காரில் அழைத்துச் செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
![Watch Video : பீஸ்ட் படக்குழுவுடன் காரில் லாங்டிரைவ் சென்ற நடிகர் விஜய்...! வைரல் வீடியோ உள்ளே..! actor vijay drive his car with beast movie crew video viral Watch Video : பீஸ்ட் படக்குழுவுடன் காரில் லாங்டிரைவ் சென்ற நடிகர் விஜய்...! வைரல் வீடியோ உள்ளே..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/10/8dc9fa7ee0c3858a750efbab6dd6d4f9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வரும் 13-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். நடிகர் விஜய் பீஸ்ட் படம் குறித்தும், தனது வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு குறித்தும் சன் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பகிரந்திருந்தார்.
இந்த நிலையில், பீஸ்ட் படத்தில் நடித்திருந்த நடிகை அபர்ணா தாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், பீஸ்ட் படத்தில் நடித்திருந்த நடிகர்கள் அனைவரையும் தனது காரில் விஜய் அழைத்துச் செல்கிறார். அந்த பயணத்தில் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், இயக்குனர் நெல்சன், நடிகர் மற்றும் நடன இயக்குனர் சதீஷ் ஆகியோர் உள்ளனர். இந்த வீடியோவை சதீஸ் எடுத்துள்ளார்.
View this post on Instagram
வீடியோவில் அனைவரையும் காட்டிய சதீஷ் இறுதியாக விஜய்யை காட்டுகிறார். அப்போது, இதுவரை பார்த்தவர்கள் கிளீனர்கள் என்றும், விஜய்தான் ஓனர் என்றும் கூறுகிறார். விஜயும் ஒரு மெல்லிய புன்னகையுடன் காரை ஓட்டுகிறார். நடிகை அபர்ணா தாசின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் இவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)