Jolly O Gymkhana : ஜாலியோ ஜிம்கானா... வெளியானது ஜாலியான ப்ரோமோ..! பீஸ்ட் மோடுக்கு ரெடி ஆகுங்க...!
பீஸ்ட் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடாக ஜாலியோ ஜிம்கானா இன்று மாலை ரிலீசாக உள்ளது. இதற்காக வித்தியாசமான ப்ரோமோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ளது பீஸ்ட் படம். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று, தற்போது வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தின் முதல் பாடல் வெளியீடாக காதலர் தினத்தன்று அரபிக்குத்து பாடல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், அரபிக்குத்து பாடலுக்கு அடுத்தபடியாக ஜாலியோ ஜிம்கானா பாடல் ரிலீசாக உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில், ஜாலியோ ஜிம்கானா பாடல் பதிவின்போது நடைபெற்ற காமெடியாக தருணம் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
Steps evlo tough ah irundhalum.. 😉#ThalapathyVijay Beast mode la erangi #JollyOGymkhana tharaporaru!
— Sun Pictures (@sunpictures) March 19, 2022
Today @ 6pm 🔥@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @kukarthik1 @hegdepooja @manojdft @AlwaysJani @Nirmalcuts #Beast #BeastSecondSingle pic.twitter.com/DIJq4nfsA6
இந்த வீடியோவில் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு நடன இயக்குனர் ஜானி கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். அப்போது, இயக்குநர் நெல்சனிடம் நடனக்கலைஞர்களை வைத்து ஆடிக்காட்டுகிறார். அப்போது, இயக்குநர் நெல்சன் இந்த ஸ்டெப் எல்லாம் விஜய் சாருக்கு ஓகே..! இவங்களுக்கு? என்று கூறியபடி ரெடின் கிங்ஸ்லி, வி.டி.வி. கணேஷ் ஆகிய நகைச்சுவை நடிகர்களை காட்டுகிறார்.
அவர்களும் அவர்களுக்கு தெரிந்த ஸ்டெப்களை ஆடுகிறார்கள். அதற்கு நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் நான் ஒன்றும் கேப்ரே டான்ஸ் ஆடச் சொல்லவில்லை என்று கூறுகிறார். இவர்களது நகைச்சுவையான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவிற்கு கீழ் ஸ்டெப்ஸ் எவ்ளோ டஃப்பா இருந்தாலும், தளபதி விஜய் பீஸ்ட் மோட்ல எறங்கி ஜாலியோ ஜிம்கானா தரப்போறாரு.! என்று பதிவிட்டுள்ளது. இந்த ட்விட்டருக்கு கீழ் விஜய் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தும், தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Salute movie Review : ‛இதுதான்டா போலீஸ்... இல்லை இல்லை... இதுவும் போலீஸ்...’ சல்யூட் அடிக்க வைக்கிறதா சல்யூட்? ஆழமான விமர்சனம் இதோ!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்