Beast Update : பீஸ்ட் படத்தின் ஆடியோ லாஞ்ச்...! இந்த முறை எப்படி நடக்கப்போகுது தெரியுமா..? உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்..!
Beast Update : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். தமிழ்நாட்டில் இவருக்கென்று லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் நெல்சனுடன் கூட்டணி சேர்ந்தார். இவர்களது கூட்டணியில் உருவாகிய பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 14-ந் தேதி சித்திரை முதல் நாள் கொண்டாட்டமாக வெளியாக உள்ளது.
பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வெளியீடாக கடந்த மாதம் 14-ந் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு அரபிக்குத்து பாடல் வெளியானது. இந்த பாடல் தற்போது வரை யூ டியூபில் 130 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடல் தற்போது ட்ரெண்டிங் சாங்காகவும் உள்ளது.
வழக்கமாக விஜய் படத்தின் வெளியீட்டிற்கு முன்பு ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்தப்படும். இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் ஆடியோ லாஞ்ச் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது. பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயின் ரசிகர்கள் மட்டும் பங்கேற்க உள்ளதாகவும், அதற்கான டோக்கன்கள் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக விநியோகிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால் படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக விஜய் படத்தின் இசை வௌியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசும் பேச்சுக்கள் வைரலாவது வழக்கம்.
இதனால், பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் என்ன பேசப்போகிறார் என்று அவரது ரசிகர்கள் இப்போது முதலே எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், டான்சிங் ரோஸ் புகழ் ஷபீர் கல்லக்கல் வில்லனாக நடித்துள்ளார். நடிகர் விஜய் மெர்சல் படம், மாஸ்டர் படம், பிகில் ஆகிய படங்களின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கருத்துக்கள் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்