![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Vijay Antony: ”விஜய் ஆண்டனியை பார்க்கவே பயமா இருக்கு...எப்படி தாங்கிக்கொள்வாரோ?” : உருகிய தயாரிப்பாளர்
”விஜய் ஆண்டனியை பார்க்கவே பயமாகவே உள்ளது. இந்த குழந்தையின் இழப்பை எப்படி அவர் தாங்கி கொள்வார். எவ்வளவு பெரிய விபத்தில் இருந்து எல்லாம் அவர் மீண்டு வந்துள்ளார்...”
![Vijay Antony: ”விஜய் ஆண்டனியை பார்க்கவே பயமா இருக்கு...எப்படி தாங்கிக்கொள்வாரோ?” : உருகிய தயாரிப்பாளர் Actor vijay antony daughter no more producer T.siva shares his emotions Vijay Antony: ”விஜய் ஆண்டனியை பார்க்கவே பயமா இருக்கு...எப்படி தாங்கிக்கொள்வாரோ?” : உருகிய தயாரிப்பாளர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/19/2d490be66a28348bc7cf907a189673ce1695128315715102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் விஜய் ஆண்டனியின் மகள், தற்கொலை செய்துகொண்ட நிலையில் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே விஜய் ஆண்டனிக்கு நெருங்கிய நண்பரும், தயாரிப்பாளருமான டி. சிவா விஜய் ஆண்டனியை பார்க்கவே பயமாக இருப்பதாக கூறியுள்ளார்.
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் இன்று அதிகாலை தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மன அழுத்தத்தின் காரணமாக சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்டதால் திரைப்பிரபலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையில் விஜய் ஆண்டனி மகளின் உடலை பார்த்த தயாரிப்பாளர் டி.சிவா, இறந்த சிறுமி குறித்து பகிர்ந்து கொண்டார்.
சிறுமி குறித்து பேசிய டி.சிவா ”பெரும் அதிர்ச்சியாக உள்ளது. ரொம்ப தைரியமான பொண்ணு. என்ன நடந்தது என்று கணிக்க முடியவில்லை. ரொம்ப தங்கமான பொண்ணு. இது நியாயமே இல்லை. ரெக்கார்டு பிரேக் செய்யும் பெண் அவர். மருத்துவமனைக்கு வந்து உடலை பார்க்கும் வரை நம்ப முடியவில்லை. படிக்கும் குழந்தைக்கு என்ன மன அழுத்தம் இருக்கப்போகிறது. நன்றாக பிரமாதமாக படிக்கும் பெண்ணால் எப்படி இப்படி ஒரு முடிவு எடுக்க முடியும் என்று தெரியவில்லை. இந்த இழப்பை விஜய் ஆண்டனி எப்படி தாங்கி கொள்வார் என்று தெரியவில்லை. இதில் இருந்து அவர் எப்படி மீளப்போகிறார் என்று கூட தெரியவில்லை.
விஜய் ஆண்டனியை பார்க்கவே பயமாகவே உள்ளது. இந்த குழந்தையின் இழப்பை எப்படி அவர் தாங்கி கொள்வார். எவ்வளவு பெரிய விபத்தில் இருந்து எல்லாம் அவர் மீண்டு வந்துள்ளார். அதெல்லாம் உடல் வலி தாங்கி கொண்டு விட்டார். ஆனால், இது மன வலி தொடர்பானது. அவருக்கு கடவுள்தான் தைரியத்தை தர வேண்டும். எவ்வளவு ஆறுதல் கூறினாலும் அவரால் இந்த இழப்பில் இருந்து மீள முடியாது.
எல்லா பெற்றோரும் குழந்தைகளிடமும் மனம் விட்டு பேச வேண்டும். எவ்வளவு வேலை இருந்தாலும் குழந்தைகளுக்காக நேரம் செலவிட வேண்டும். விஜய் ஆண்டனியின் குடும்பம் இடைவெளியை கடைப்பிடிக்கும் குடும்பம் இல்லை. அப்பாவும், மகளும் சகஜமாக பேசி கொள்வார்கள். அதையும் தாண்டி என்ன நடந்தது இருக்கும் என்பது தான் தெரியவில்லை” என உருக்கமாக பேசியுள்ளார்.
சென்னையில் உள்ள விஜய் ஆண்டனியின் வீட்டிற்கு நேரில் சென்ற திரைப்பிரபலங்கள் சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். சித்தார்த், கார்த்திக், சிபிராஜ், சத்யராஜ், உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், சிம்பு உள்ளிட்டோர் விஜய் ஆண்டனியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: Vijay Antony: அன்று அப்பா.. இன்று மகள்.. சோகங்கள் நிறைந்த விஜய் ஆண்டனியின் வாழ்க்கை.. வைரலாகும் வீடியோ..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)