மேலும் அறிய

Ajith | ‛அஜித் சார் சிம்பிளானவர் தான்... கூட இருக்கவங்க தான்....’ வான்மதியில் நடித்த ‛வைகாசி’ ரவி ஓபன் டாக்!

அஜித் சார் ரொம்ப எளிமையானவர் ஆனால் அவர் கூட இருப்பவர்கள் தான் அவரிடம் யாருமே நெருங்கவிட மாட்டார்கள் என்று நடிகர் வைகாசி ரவி தெரிவித்துள்ளார்.

அஜித் சார் ரொம்ப எளிமையானவர் ஆனால் அவர் கூட இருப்பவர்கள் தான் அவரிடம் யாருமே நெருங்கவிட மாட்டார்கள் என்று நடிகர் வைகாசி ரவி தெரிவித்துள்ளார்.

வான்மதி திரைப்படம் தான், அஜித்துடன் வைகாசி ரவி முதலில் நடித்த படம். அதற்கு முன்னால் அவரை நேரில் பார்த்ததில்லை. 

வான்மதி 1996 பொங்கல் அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக சுவாதியும், நடித்தனர். இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாகும். இந்தப் படத்தில் தேவா இசையமைத்துப் பாடிய பிள்ளையார்பட்டி ஹீரோ நீ தான்பா பாடல் அந்தக் காலத்தில் செம்ம ஹிட் பாடல். இப்படத்தில் வைகாசி ரவி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதேபோல் அஜித்தின் ரெட் திரைப்படத்திலும் வைகாசி ரவி நடித்திருப்பார். அந்தப் படத்தில் அஜித்தின் கூட்டாளிகளாக வருவோரில் வைகாசி ரவியும் படம் முழுவதும் இருப்பார்.
இந்நிலையில், அஜித்துடனான தனது அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார்.


Ajith | ‛அஜித் சார் சிம்பிளானவர் தான்... கூட இருக்கவங்க தான்....’ வான்மதியில் நடித்த ‛வைகாசி’ ரவி ஓபன் டாக்!

இது குறித்து அவர் அளித்தப் பேட்டி, “வான்மதி திரைப்படம் தான், நான் அஜித் சாருடன் செய்த முதல் படம். அந்தப் படத்தைப் பற்றி ரெண்டு நாளைக்கு முன்னால் தான் சொன்னார்கள். அப்புறம் அடுத்த நாளே சூட்டிங்குக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க. நானும், சில துணை நடிகைகளும் வேனில் அழைத்துச் செல்லப்பட்டோம். அங்க போன பின்னர் தான் நான் முதன்முதலாக அஜித் சாரைப் பார்க்கிறேன். பார்த்தால் அவ்வளவு இயல்பாக இருக்கிறார். எல்லோரிடமும் இயல்பாகப் பேசுகிறார்.

ஒரு காமெடி சீன் பற்றி என்னிடம் வந்து கேட்டார். அது ஒரு பஸ் ஸ்டாண்ட் சீன். இந்த சீனை நீங்கள் பண்ணா எப்படி செய்வீங்க சொல்லுங்க என்றார். நானும் தயக்கத்தோடு செய்து காட்டினேன். அப்புறம் அதை உள் வாங்கிக் கொண்டு அவர் பாணியில் செய்தார். இதெல்லாம் இவரிடம் கேட்கிறோமே என்றெல்லாம் நினைக்கவே இல்லை. அவருக்கு காமெடி சீன் என்றால் ரொம்ப விரும்பி நடிப்பார். அவர் அவ்வளவு இயல்பானவர்.

அவர் கிட்ட பந்தாவே இல்லை. அதை மறக்கவே முடியாது. அதற்குப் பின்னர் தீனா வந்தது. அந்தப் படத்தில் எல்லாம் நடிக்கும் போது அஜித் சார், தல ஆகிவிட்டார். ஆனால் அப்போதும் அவர் எளிமையானவராகவே இருந்தார்.. ஆனால் அவருடன் இருப்பவர்கள் தான் அவரை நெருங்கவே விட மாட்டார்கள். நம்ம போய் பேசினால் அஜித் சார் இயல்பாகவே பேசுவார். ஆனால் கூட இருப்பவர்கள், சார தொந்தரவு பண்ணாதீங்க என நெருக்கடி தருவார்கள். இரண்டு மூன்று தடவை அவர்கள் அப்படிச் சொன்னால் அப்புறம் நமக்கே கொஞ்சம் சங்கடம் ஆகிவிடும்.

ரஜினி சார் கெத்து..

ரஜினி சாருடன் முத்து படத்தில் நடித்தேன். எனக்கு 30 நாள் கால் சீட். அந்த 30 நாளும் ரஜினி சாரை பார்த்ததே எனக்கு பெரிய சந்தோஷம் தான். ஒரு காட்சியில் நான், செந்தில் சார், ரஜினி சார் நிற்க வேண்டும். நான் எங்கே ஓவர்லேப் செய்துவிடுவேனோ என்று பயந்து ஒதுங்கி நின்றேன். திடீரென ஒரு கை ஏன் ஒதுங்கி நிற்கிறீங்க என்று என்னை இழுக்க திரும்பிப் பார்த்து அப்படியே விரைத்துப் போய்விட்டேன். அது ரஜினி சாரின் கைகள்.

ஏதோ பிறவிப் பயன் அடைந்தது போல் இருந்தது. ரஜினி சாரின் ஸ்டைலை ஒட்டுமொத்த செட்டும் ரசிக்கும். நான் இன்றைக்கும் என்றைக்கும் ரஜினி சாரின் ஃபேன் தான். அவர் என்ன பண்ணாலும் அது ஒரு ஸ்டைல். செட்டில் ஒருத்தர் விடாமல் எல்லோருக்கு வணக்கம் வைப்பார். நாம் வணக்கம் சொல்ல கை தூக்கும் முன் அவர் வணக்கம் சொல்லி முடித்திருப்பார். அப்படிப்பட்ட மனிதர் அவர்” இவ்வாறு வைகாசி ரவி அந்தப் பேட்டியில் பேசியுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget