Karthigai Deepam: சேட்டை வச்சு சந்திரகலாவுக்கு ஸ்கெட்ச்! மாமியார் கோபத்தை குறைப்பாரா மருமகன்?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியலில், அடுத்தடுத்து நடக்கும் அதிரடி சம்பவங்கள் கதையை இன்னும் விறுவிறுப்பாக்கி வருகின்றன.
பணத்தைக் கேட்கும் சேட்:
கடந்த எபிசோடில் சேட் ஒருவரைச் சந்தித்துப் பேசிய கார்த்திக், சந்திரகலாவை எப்படியாவது சிக்க வைக்க ஒரு திட்டம் போட்டிருந்தார். அதன்படி, சொத்து தொடர்பான பத்திரங்களுடன் சந்திரகலாவின் வீட்டுக்குச் செல்கிறார் சேட்.
அங்கே, “சாமுண்டீஸ்வரி இந்தச் செங்கல் சூளையை அடமானம் வைத்து ஏற்கெனவே பெரிய தொகையைக் கடனாக வாங்கியிருக்கிறார். அந்தப் பணத்தை நீங்கள் திருப்பிக் கொடுத்தால்தான் இந்தச் சொத்து உங்களுக்குக் கிடைக்கும்” என்று கூறுகிறார்.
கார்த்திக்கின் திட்டம் சக்ஸஸ்:
இதைச் சற்றும் எதிர்பார்க்காத சந்திரகலா அதிர்ச்சியடைந்தாலும், அந்தச் சொத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சேட் கேட்ட பணத்தைக் கொடுத்துவிடுகிறார். பணத்தைக் கொடுத்ததும் ரசீது மற்றும் பத்திரங்களை வாங்கிக்கொண்டு, அந்த ஆவணங்களை அங்கேயே கிழித்துப் போட்டுவிட்டு நிம்மதியடைகிறார். ஆனால், சந்திரகலாவிடம் வாங்கிய பணத்தை சேட் நேராகக் கார்த்திக்கிடம் கொண்டு வந்து கொடுத்துவிடுகிறார். இப்படிக் கார்த்திக்கின் முதல் திட்டம் வெற்றிகரமாக முடிகிறது.
15 கோடி பாக்கி:
இதோடு கார்த்திக் தனது திட்டத்தை நிறுத்தவில்லை. அடுத்ததாக, சேட்டை மீண்டும் சந்திரகலாவிடம் அனுப்பி இன்னும் சுமார் 15 கோடி ரூபாய் பாக்கி இருப்பதாகச் சொல்ல வைக்கிறார்.
வேறு வழியில்லாமல் சந்திரகலா தான் வசிக்கும் சொந்த வீட்டின் பத்திரத்தையே அடமானம் வைத்து அந்தப் பணத்தை ஏற்பாடு செய்து கொடுக்கிறார். அப்போது, “அக்கா சாமுண்டீஸ்வரி இவ்வளவு கடன் வாங்கித்தான் இதையெல்லாம் நடத்தினாரா? எனக்கு இதெல்லாம் தெரியாமப் போயிடுச்சே” என்று புலம்பிக்கொண்டே பணத்தைக் கொடுக்கிறார். அந்தப் பணமும் வழக்கம்போல கார்த்திக்கின் கைகளுக்கே வந்து சேர்கிறது.
அடுத்தடுத்து சந்திரகலா:
ஒருபக்கம் சந்திரகலாவிடம் இருந்து பணத்தை வாங்கிய கார்த்திக், அடுத்ததாக அவருக்குப் பெரிய சிக்கலை உருவாக்கத் திட்டமிடுகிறார். செங்கல் சூளை இருக்கும் இடத்தில் ஒரு மர்மமான பிணம் இருப்பது போன்ற ஒரு பிரச்சினையைக் கிளப்பினால், போலீஸ் விசாரணை தொடங்கும். இதனால் அந்தச் சொத்தை சந்திரகலாவால் அவ்வளவு எளிதாகக் கைப்பற்ற முடியாது என்று கணக்குப் போடுகிறார்.
இதற்காக இரவோடு இரவாகத் தனது அடுத்தகட்ட வேலையைத் தொடங்குகிறார் கார்த்திக். இந்தத் திட்டம் சந்திரகலாவுக்கு எந்த மாதிரியான சிக்கலை ஏற்படுத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போது அதிகரித்துள்ளது.
சாப்பிட மறுத்த சாமுண்டீஸ்வரி:
மற்றொரு பக்கம், இரவு நேரத்தில் கோயிலில் தனியாக அமர்ந்திருக்கிறார் சாமுண்டீஸ்வரி. அவரைப் பார்க்க வரும் ரேவதி, ரோகிணி, சுவாதி மூவரும் சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்து அவரைச் சாப்பிடச் சொல்கிறார்கள்.
ஆனால், அந்தச் சாப்பாடு கார்த்திக் வீட்டில் சமைத்தது என்பதைத் தெரிந்துகொண்ட சாமுண்டீஸ்வரி, அதைச் சாப்பிடவே முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிடுகிறார். பிள்ளைகள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் மனம் மாறவில்லை.
“நான் சாப்பிட மாட்டேன்... நீங்க சாப்பிட்டாலே எனக்குப் போதும்” என்று சொல்லிவிடுகிறார். அம்மா சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்து ரேவதி, ரோகிணி, சுவாதி மூவரும் மிகுந்த வேதனையடைகிறார்கள். இப்படியான உருக்கமான காட்சிகளுடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
கோபம் தணியுமா?
சந்திரகலாவைத் தனது அடுத்தடுத்த திட்டங்கள் மூலம் கார்த்திக் எப்படி வீழ்த்தப் போகிறார்? செங்கல் சூளையில் அவர் செய்யப்போகும் சதி என்ன? சாமுண்டீஸ்வரியின் கோபமும் வைராக்கியமும் எப்போது தணியும்? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்






















