மேலும் அறிய

Actor Vijay: விமான நிலையத்தில் ‘தளபதி’ விஜய்.. வைரலாகும் புகைப்படம்.. எங்கே சென்றார் தெரியுமா?

விமான நிலையத்தில் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தளபதி எங்கே இருக்கிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

விமான நிலையத்தில் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தளபதி எங்கே இருக்கிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

முன்னணி நடிகர் விஜய்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிராக உள்ள விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன், அனுராஜ் காஷ்யப், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின் என பலரும் நடித்துள்ளனர். அக்டோபர் 19 ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக படத்தில் இருந்து நா ரெடி பாடல், போஸ்டர்கள், விஜய், சஞ்சய் தத், அர்ஜூன் ஆகியோரின் கேரக்டர்கள் அறிமுகம் என அடுத்தடுத்து லியோ படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. செப்டம்பர் மாத இறுதியில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் விஜய் அரசியலுக்கு வருகை தர உள்ளார் என்ற தகவல் உலா வரும் நிலையில், ஆடியோ நிகழ்ச்சியில் அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்

இதனிடையே விஜய்யின் 68 வது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குவதன் மூலம் இயக்குநர் வெங்கட் பிரபு முதல்முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளார். தளபதி 68 படத்தில் விஜய் இரட்டை  கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவும், மற்றொரு கதாபாத்திரத்துக்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்கவுள்ள தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் ஜெய் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாகவும் அபர்ணா தாஸ் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்த படத்தின் ப்ரோமோஷன் போட்டோ ஷூட் அமெரிக்காவில் நடக்கவுள்ளது. இதற்காக நடிகர் விஜய்,  இயக்குநர் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றடைந்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. லாஸ் ஏஞ்சல் விமான நிலையத்தில் இந்த  புகைப்படம் எடுத்ததாக சொல்லப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget