Actor Suriya: சாலை விபத்தில் இறந்த ரசிகர்.. நேராக வீட்டிற்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சூர்யா..
சாலை விபத்தில் உயிரிழந்த தனது ரசிகர் வீட்டுக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
![Actor Suriya: சாலை விபத்தில் இறந்த ரசிகர்.. நேராக வீட்டிற்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சூர்யா.. Actor Suriya Pays Tribute to Jagadesh Namakkal suriya fans club district secretary who died in accident Actor Suriya: சாலை விபத்தில் இறந்த ரசிகர்.. நேராக வீட்டிற்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சூர்யா..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/29/165498f010a0d3dec092c065f7ad5691_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சாலை விபத்தில் உயிரிழந்த தனது ரசிகர் வீட்டுக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சென்ற வாரம் 22-ம் தேதி சூர்யா ரசிகர் மன்ற நாமக்கல் மாவட்ட செயலாளர் ஜெகதீஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதைக் கேள்விப்பட்ட நடிகர் சூர்யா நாமக்கல்லில் உள்ள ஜெகதீஷ் வீட்டிற்கு நேரில் சென்று, ஜெகதீஷ் படத்திற்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும், ஜெகதீஷ் மனைவி ராதிகா மற்றும் குடும்பத்தினருக்கும் அவர் ஆறுதல் கூறினார். சூர்யாவின் வருகையை அறிந்த ஏராளமான பொதுமக்கள் அவரைப் பார்ப்பதற்காக அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
View this post on Instagram
முன்னதாக, கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கேமியோ ரோல்
இதனைத்தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி படத்தின் ஆடியோ நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் டிரெய்லரும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ட்ரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்தது. டிரெய்லர் வெளியானபோதே, படத்தில் சூர்யா நடித்துள்ளதாக ரசிகர்கள் கணித்தனர். விக்ரம்' படத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும், அவர் க்ளைமாக்ஸில் ஒரு கேமியோ வேடத்தில் காணப்படுவார் என்றும் செய்திகள் பரவின.
விக்ரம் 3
அந்த செய்தியை நிஜமாக்குவதுபோல, அந்த நிகழ்ச்சிலேயே படத்தின் இயக்குநர் லோகேஷ் சூர்யா நடித்திருப்பதை உறுதி செய்தார். இந்த நிலையில், விக்ரம் படத்தின் மூன்றாம் உருவாக இருப்பதாகவும், அதற்கான காரணமாக சூர்யா இருப்பார் என்றும் கமல்ஹாசன் கூறினார். தற்போது சூர்யா பாலா இயக்கும் படத்தில் நடித்திருக்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)