A R Murugadoss : இப்படியும் இருக்காங்களா...ஏ.ஆர் முருகதாஸ் பற்றி எஸ்.கே சொன்ன சீக்ரெட்
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் தனது உதவி இயக்குநர்களிடம் கடைபிடிக்கும் வழக்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் அனைவரிடமும் பகிர்ந்துகொண்டுள்ளார்
அமரன்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தை ஏ.ஆர் முருகதாஸின் உதவி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் ஒரே நேரத்தில் அமரன் படத்திலும் முருகதாஸ் இயக்கும் எஸ்.கே.23 படத்திலும் நடித்து வருகிறார். ஒருபக்க குரு இன்னொரு பக்கம் சிஷ்யனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் பற்றி எஸ்.கே பகிர்ந்துகொண்டுள்ளார். மேலும் முருகதாஸ் பற்றி பலர் அறியாத ஒரு தகவலையும் எஸ்.கே பகிர்ந்துள்ளார்.
ஏ.ஆர் முருகதாஸ் பற்றி எஸ்.கே
" நான் முருகதாஸ் படத்தில் நடித்து வந்தபோது அவரிடம் உங்கள் உதவி இயக்குநர் உங்களை பெருமைப்படுத்தப் போகிறார் என்று சொல்வேன். அதேபோல் அமரன் படத்தைப் பார்த்து அவர் ராஜ்குமார் பெரியசாமிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். ஒருபக்கம் குரு இன்னொரு பக்கம் சிஷ்யனுடன் சேர்ந்து வேலைப் பார்த்ததில் எனக்கு ரொம்ப பெருமை. தன் உதவி இயக்குநர்கள் படம் பண்ண தயாராகிவிட்டார்கள் என்றால் முருகதாஸ் அவர்களுக்கு ஒரு வருட சம்பளத்தை மொத்தமாக கொடுத்துவிடுவார். அந்த ஒரு வருட சம்பளத்தை வைத்துக்கொண்டு அந்த உதவி இயக்குநர் தனத் முதல் படத்திற்கான திரைக்கதை எழுதி , தயாரிப்பாளரிடம் கதை சொல்லி பட வேலைகளை தொடங்க வேண்டும். இந்த ஒரு வருடத்தில் எந்த வித பொருளாதார நெருக்கடி அவருக்கு இருக்கக்கூடாது என்பதற்காக ஒரு வருட சம்பளத்தை அவர் மொத்தமாக கொடுத்துவிடுவார். இந்த மாதிர்யான சின்ன சின்ன விஷயங்களை நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டு வருகிறேன். தற்போது நாங்கள் வேலை செய்யும் இந்த படம் விண்டேஜ் ஏ.ஆர் முருகதாஸ் ஸ்டைலில் இருக்கும்' என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
#Sivakarthikeyan to ARM: Your associate Rajkumar will make you proud😎🫰#ARMurugadoss: Congratulations Rajkumar Mr Talk of the town (On #Amaran release Day)✅🔥
— AmuthaBharathi (@CinemaWithAB) November 8, 2024
SK:I am happy that i worked with Guru(ARM) & his Associate (Rajkumar) in parallel🥰 pic.twitter.com/hRcUSE2HCm
மேலும் படிக்க : Amaran: அமரன் படம் பார்த்து அப்செட்டான இயக்குனர் வசந்தபாலன் - ஏன் என்னாச்சு?
Amaran : அமரன் இஸ்லாமியர்களை குற்றப்பரம்பரையாக சித்தரிக்கிறது ..எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டனம்