மேலும் அறிய

Silambarasan : கட்டம் கட்டி கலக்குறோம்... சிம்புவின் அடுத்த படத்தை இயக்கும் ஓ மை கடவுளே இயக்குநர்

சிலம்பரசனின் 49 ஆவது படத்தை ஓ மை கடவுளே மற்றும் டிராகன் படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது

சிலம்பரசன்

பல்வேறு சவால்கள் விமர்சனங்களுக்குப் பின் சிம்பு மீண்டும் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு , கெளதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு ஆகிய இரு படங்கள் அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தன. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமி ஆகி வந்தாலும் எந்த படமும் முழுமையாகி வெளியாகவில்லை என்பது சிம்பு ரசிகர்களுக்கு பயத்தை கொடுத்து வருகிறது. குறிப்பாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த எஸ்.டி.ஆர் 48 திரைப்படம் அறிவிப்பு வெளியாகி நிலுவையில் கிடக்கிறது. 

கமல் நடித்துவந்த தக் லைஃப் படத்தில் சிம்பு நடித்த காரணத்தினால் எஸ்.டி.ஆர் 48 படம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. மிகப்பெரிய வரலாற்றுத் திரைப்படமாக  பாகுபலி ஸ்டைலில் இப்படம் உருவாகும் என கூறப்பட்டது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கு என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வந்த நிலையில் சிம்பு தனது அடுத்த படத்தைப் பற்றிய தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

சிம்புவின் புதிய படத்தின் அப்டேட்

தனது எக்ஸ் பக்கத்தில் சிம்பு தனது அடுத்த படத்தைப் பற்றிய அப்டேட் தெரிவித்துள்ளார். இந்த படம் தான் நடித்த தம் , மன்மதன் , வல்லவன் , வி.டி.வி  ஆகிய நான்கு படங்களை சேர்ந்தது போலவும் இன்றைய தலைமுறைக்கு ஏற்ற மாதிரியும் இருக்கும் என்றும் சிம்பு தெரிவித்துள்ளார். மேலும் 90ஸ் கிட்ஸ் மூடில் நாளைக்கு அப்டேட் வெளியாகும் என சிம்பு தெரிவித்துள்ளார். 

ஓ மை கடவுளே மற்றும் தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்தை இயக்கிவரும் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கவிருக்கிறார். ஏஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. எஸ்.டி.ஆர் 49 குறித்த அதிகாரப்பூர்வ தகவல்  நாளை வெளியாக இருக்கிறது. 

எஸ்.டி.ஆர் 48 படத்தை கமலின் ராஜ்லமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருந்தது. தற்போது ராஜ்கமல் தயாரிப்பில் இரண்டு படங்கள் ரிலீஸூக்கு தயாராகி வருகின்றன. சிவகார்த்திகேயன் நடித்த அமரன் , மற்றும் மணிரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப். அமரன் படத்தின் வெற்றி எஸ்.டி.ஆர் 48 படத்தின் துவக்கத்திற்கு ஒரு அவசியமான காரணி. சிம்பு நடிக்கும் படம் பெரிய பட்ஜெட் படம் என்பதால் இந்த இரண்டு படங்களின் வெற்றியை சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி சிவகார்த்திகேயனை நம்பிதான் சிம்பு இருக்கிறார். 

தலைப்பு செய்திகள்

Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
Embed widget