சிறிய வயதில் பெற்றோர்கள் மரணம்...மன உளைச்சலில் சகோதரி...ஷாருக் கான் மனதில் இவ்வளவு கஷ்டமா
தனது தந்தை இறந்ததில் இருந்து தனது அக்கா மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அன்றிலிருந்து இன்று வரை அவரை பார்த்து வருவதாக நடிகர் ஷாருக் கான் தெரிவித்துள்ளார்

ஷாருக் கான்
பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஷாருக் கான் பிரபலமானவர். 60 வயதைக் கடந்தும் இன்னும் இளமை மாறாமல் காணப்படும் ஷாருக் கானுக்கு மிகப்பெரிய பெண் ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அவரது அழகைப் போலவே அவரது விளையாட்டு மற்றும் நகைச்சுவையான பேச்சும் பலரை கவர்ந்த அமசங்கள். ஆனால் எப்போது முகத்தில் புண்ணகையோடு வலம் வரும் ஷாருக் கான் தனது அடிமனதில் பல சோகங்களை மறைத்து வைத்திருக்கிறார். பழைய நேர்காணல் ஒன்றில் ஷாருக் கான் ஒளிவு மறைவில்லாமல் மனம் விட்டு பேசிய வீடியோ ஒன்று தற்பொது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
என்னுடைய சகோதரி என் அப்பாவின் இறந்த உடல் முன் நின்று கொண்டிருந்தது எனக்கு நியாபகம் இருக்கிறது. அவள் எதுவும் பேசவில்லை , அழவில்லை. நின்ற இடத்தில் அப்படியே தரையில் விழுந்தார். அவரது தலையில் பலமாக அடிபட்டது. இரண்டு வருடங்களுக்கு அவர் எதுவும் பேசாமல் வெட்டவெளியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். அது எங்கள் அனைவரின் வாழ்க்கையை மாற்றியது. இப்போது அவர் நன்றாக இருக்கிறார். தில்வாலே துல்ஹனியா படத்தில் நடித்து வந்த போது அவரை மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். அவர் உயிழ் பிழைக்கமாட்டார் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். நான் அவரை ஸ்விட்சர்லாந்து அழைந்து சென்று சிகிச்சை செய்தேன். எங்கள் தந்தையின் இறப்பில் இருந்து அவர் மீளவே இல்லை. 10 ஆண்டுகள் கழித்து என் அம்மாவும் இறந்தபின் அவர் இன்னும் மோசமானார். இஸ்லாமில் சொன்னால் நாங்கள் அப்பா அம்மா இல்லாத யதீம் யசீர். என் தங்கை எம்.ஏ .எல்.எல்.பி முடித்திருக்கிறார். மிக திறமையானவர். ஆனால் அவரால் பெற்றோர்களின் இறப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏதோ ஒரு வகையில் நான் ஒரு விலகலை ஏற்படுத்திக் கொண்டேன் . மக்கள் என்னிடம் ரசிக்கும் நகைச்சுவை உணர்வு , தன் நம்பிக்கை எல்லாமே என்னுடைய் சோகத்தை நான் மறைத்துக் கொள்ள உருவாக்கிக் கொண்ட போலியான விஷயங்கள் . என் தங்கையைப் போல் ஆகிவிடாமல் என்னை காப்பாற்றிக் கொள்ள நான் இந்த போலியான தோற்றத்தை உருவாக்கிக் கொண்டேன். என் தங்கை எப்படி இருக்கிறாரோ நான் அவரை அப்படியே நேசிக்கிறேன். அவர் ரொம்ப கன்னியமானவர். என் குழந்தைகள் எங்களைவிட அவரை தான் அதிகம் நேசிக்கிறார்கள். அவர் எங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி . ஆனால் சோகமாக இருக்க எனக்கு தைரியம் கிடையாது. அதனால் தான் விடாமல் உழைக்கிறேன். நடிப்பு எனக்கு உதவுகிறது. என்னைப் பற்றிய விமர்சனங்களில் இருந்து என்னால் விலகி இருக்க முடிகிறது. இது தான் கடவுள் சத்தியமாக உண்மை.





















