மேலும் அறிய

Divya Sathyaraj : சனாதனம் பெண்களுக்கு எதிரானது... நடிகை கஸ்தூரிக்கு பதிலடி கொடுத்த சத்யராஜின் மகள்

சனாதனம் குறித்து நடிகை கஸ்தூரியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் சத்யராஜ், மகளான திவ்யா சத்யராஜ்

சனாதனத்தை ஆதரித்து நடிகை கஸ்தூரி பேசியது குறித்து எதிர்வினையாற்றி இருக்கிறார் நடிகர் சத்யராஜின் மகள், ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ்.

கஸ்தூரி

எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த நடிகை கஸ்தூரி, கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இளைய தலைமுறையினரிடம் அவர் 'தமிழ்ப்படம்', 'ஏஏஏ' மற்றும் 'தமிழ்ப் படம் 2' ஆகிய படங்களில் நடித்ததற்காக அறியப்படுகிறார்.

கஸ்தூரி அவ்வப்போது சில பொதுக் கருத்துக்களையும் பொது வெளியில் பகிர்பவராக இருக்கிறார், மேலும் அரசியல் நிகழ்வுகள் குறித்த கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து  வருபவராகவும் இருக்கிறார்

சனாதனம் குறித்து கஸ்தூரி பேச்சு

அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, ”சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக உள்ள சனாதனத்தை ஒழிக்க வேண்டும். அது கொசு, டெங்கு, மலேரியா போன்றது” என பேசியிருந்தார். அதற்கு பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் குவிய தொடங்கின. 

உதயநிதி ஸ்டாலினின்  கருத்துக்கள் குறித்து  தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்தார் நடிகை கஸ்தூரி. அதில் சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது முழுக்க முழுக்க வெறுப்பு பிரச்சாரம் என்று அவர் குறிப்பிட்டார். ”சனாதனம் வேறு இந்துத்துவம் வேறு என்று காங்கிரஸ் பேசியுள்ளது அபத்தமான ஒரு கருத்து. ஒட்டுமொத்த  நாடும் உதயநிதி சனாதனம் குறித்து பேசிய கருத்துக்களைப் பற்றித்தான் பேசி வருகிறது. ஆனால் நல்ல விதமாக இல்லை. தமிழ்நாட்டில் எல்லா காலத்திலும் திமுக, பிராமண வெறுப்பை வளர்த்து வந்திருக்கிறது. தற்போது சனாதனத்தை எதிர்த்து அவர்கள் பேசுவது பிராமண வெறுப்பையே வெளிக்காட்டுகிறது. உதயநிதி ஸ்டாலின் பேசியது நாட்டில் இருக்கும் 80 சதவீதம் இந்து மதத்தைச் சேர்ந்த மக்களின் உணர்வுகளை புண்படுத்தியிருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் வெறுப்புணர்ச்சி கொண்டவர் மட்டும் இல்லை.. அவர் ஒரு கோழையும் கூட“ என்று கஸ்தூரி பேசியிருந்தார்.

இது குறித்து சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் வந்தன. தற்போது கஸ்தூரி பேச்சு குறித்து எதிர்வினையாற்றி இருக்கிறார் நடிகர் சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ்

திவ்யா சத்யராஜ்

இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஊட்டச்சத்து  நிபுனர்களில் ஒருவர் திவ்யா சத்யராஜ். மகிழ்மதி என்கிற தனியார் நிறுவனத்தின்  மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறார். மேலும் மணிப்பூர் , இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து ஊட்டச்சத்து குறைபாட்டால், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார்.  

கஸ்தூரியின் கருத்துக்களுக்கு தற்போது தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார் நடிகர் சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ். “கஸ்தூரி அவர்களின் நேர்காணலை நான் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரை கஸ்தூரி ஒரு தீவிர மதப்பற்றாளராகவே தெரிகிறார். சமத்துவத்திற்கும் பெண்களுக்கு எதிரானதாக இருப்பதால் நான் சனாதனத்தை எதிர்க்கிறேன்“ என்று அவர் கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
Embed widget