மேலும் அறிய

HBD Sarthkumar: வில்லன் டூ சுப்ரீம் ஸ்டார்... தமிழ் சினிமாவின் உண்மையான ஆணழகன் சரத்குமார் பிறந்தநாள் இன்று!

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக கையாளக்கூடிய திறமை வாய்ந்த ஒரு நடிகர் என்பதை நிரூபித்தவர் நடிகர் சரத்குமார்.

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்கள் மூலம் திரையில் தலைகாட்டி பின்னர் ஹீரோவாக வாய்ப்பு கிடைத்து சுப்ரீம் ஸ்டார் என்ற அந்தஸ்த்தில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் சரத்குமார். இன்றும் பிஸியான ஒரு நடிகராக நடித்து வரும் சரத்குமார் தனது 69வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

சரத்குமார் என்றாலே கட்டுக்கோப்பான உடல் தான் பிரதானம். அதை மெயின்டெய்ன் செய்வதில் சிறு வயது முதலே ஆர்வம் கொண்டு இருந்தவர் இந்த வயதிலும் மிகவும் ஃபிட்டான ஒரு பர்சனாலிட்டியாக வலம் வருகிறார். அவரின் கல்லூரி காலகட்டங்களிலேயே மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் வென்ற ஆணழகன். பத்திரிகை விநியோகம் செய்து கொண்டு இருந்தவர் பின்னர் நிருபராக பணியாற்றி வந்தார்.

தெலுங்கு திரைப்படம் ஒன்றில் 1986ம் ஆண்டு ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார் . அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவருக்கு தமிழ் சினிமாவில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  'புலன் விசாரணை' படத்தில் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வில்லனாக சரத்குமாரை அறிமுகம் செய்து வைத்தார். அப்படம் அவருக்கு நல்ல வரவேற்பையும் விருதையும் பெற்றுத்தந்தது.

பல படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் கௌரவ கதாபத்திரங்களிலும் நடித்த சரத்குமாரை 'சேரன் பாண்டியன்' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் கே.எஸ்.ரவிக்குமார். ஹீரோக்கான அத்தனை அம்சங்களும் பொருந்திய ஒரு நடிகராக இருந்தவரை இந்த சினிமா சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்றது. ஹீரோவாக அவர் நடித்த 'சூரியன்' படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது.

தொடர்ச்சியாக 90களில் முன்னணி இயக்குநர்களாக இருந்த அனைவரின் படங்களிலும் நாயகனாக அலங்கரித்தார். சரத்குமார் திரைப்பயணத்தில் சூர்யவம்சம், நாட்டாமை, நட்புக்காக, ஜானகி ராமன், ஐயா, மாயி, அரசு, ஏய், சாணக்யா என அடுத்தது சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் படங்களால் கொண்டாப்பட்டார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக கையாளக்கூடிய திறமை வாய்ந்த ஒரு நடிகர் என்பதை நிரூபித்தார். அதற்கு உதாரணம் தான் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் நடித்த வீக்கான கதாபாத்திரம்.

HBD Sarthkumar: வில்லன் டூ சுப்ரீம் ஸ்டார்... தமிழ் சினிமாவின் உண்மையான ஆணழகன் சரத்குமார் பிறந்தநாள் இன்று!

ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்த சரத்குமார் இயக்குநர் அவதாரம் எடுத்தது அவரின் 100வது படமான 'தலைமகன்' திரைப்படம். திருநங்கையாக 'காஞ்சனா' படத்தில் அவரின் நடிப்பு அபாரம். நடுத்தர வயது என்றாலும் முதியவர் கதாபாத்திரங்களிலும் தயக்கமின்றி நடித்தவர். இப்படி படிப்படியாக தனது நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தி கொண்ட சரத்குமார் நடிகர் சங்க தலைவராகவும் பதவியேற்றார். அரசியலிலும் கால் தடம் பதித்த  சரத்குமார் திமுக கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக அவரின் திரைப்பயணம் மட்டுமின்றி பல துறைகளிலும் அவர் நிகழ்த்திய சாதனை என்றுமே பாராட்டுக்குரியது.

தலைப்பு செய்திகள்

CM Vijay - Trisha: விஜய் பிறந்தநாள்.. வாழ்த்து தெரிவிக்காத த்ரிஷா.. நன்றி தெரிவித்த தவெகவினர்!
CM Vijay - Trisha: விஜய் பிறந்தநாள்.. வாழ்த்து தெரிவிக்காத த்ரிஷா.. நன்றி தெரிவித்த தவெகவினர்!
கணவருடன் ஜோடியாக முதல்வர் விஜயை சந்தித்த கீர்த்தி சுரேஷ்
கணவருடன் ஜோடியாக முதல்வர் விஜயை சந்தித்த கீர்த்தி சுரேஷ்
ரசிகன் டூ தனிச் செயலாளர்..என்னுடைய கடவுள்..விஜய்க்கு வாழ்த்து சொன்ன ரூட் ஜகதீஷ்
ரசிகன் டூ தனிச் செயலாளர்..என்னுடைய கடவுள்..விஜய்க்கு வாழ்த்து சொன்ன ரூட் ஜகதீஷ்
நூறு சாமி படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு..நன்றி கூறி வீடியோ வெளியிட்ட சுவாசிகா
நூறு சாமி படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு..நன்றி கூறி வீடியோ வெளியிட்ட சுவாசிகா

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Live: சட்டமன்றத்தில் கொந்தளித்த விஜய்.. எதிர்க்கட்சிகளுக்கு சரமாரி பதிலடி... நேரலை இதோ!
CM Vijay Live: சட்டமன்றத்தில் கொந்தளித்த விஜய்.. எதிர்க்கட்சிகளுக்கு சரமாரி பதிலடி... நேரலை இதோ!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு குஷி.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ...
நகைப்பிரியர்களுக்கு குஷி.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ...
Tamilnadu Round Up: திமுக மீது CM விஜய் தாக்கு, கத்தாரில் தமிழர்கள் 3 பேர் பலி, குறைந்த தங்கம் - தமிழ்நாட்டில் இதுவரை
திமுக மீது CM விஜய் தாக்கு, கத்தாரில் தமிழர்கள் 3 பேர் பலி, குறைந்த தங்கம் - தமிழ்நாட்டில் இதுவரை
Consecutive holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- போக்குவரத்து கழகம் அசத்தல் அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- போக்குவரத்து கழகம் அசத்தல் அறிவிப்பு
Tiruchendur: “நிம்மதியா சாமி கும்பிட விடுங்க” .. திருச்செந்தூர் கோயில் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த முடிவு!
Tiruchendur: “நிம்மதியா சாமி கும்பிட விடுங்க” .. திருச்செந்தூர் கோயில் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த முடிவு!
ஆசிரியர் இல்லாமல் பாழாகும் கல்வி.. மனசாட்சி இருக்கா முதலமைச்சரே? - விஜயை விளாசிய ஹெச்.ராஜா!
ஆசிரியர் இல்லாமல் பாழாகும் கல்வி.. மனசாட்சி இருக்கா முதலமைச்சரே? - விஜயை விளாசிய ஹெச்.ராஜா!
CM Vijay: விஜயை வில்லங்கத்தில் மாட்டி விட்ட ரூட் ஜெகதீஷ்.. வாழ்த்து பதிவால் வெடித்த சர்ச்சை.. குஷியில் எதிர்க்கட்சிகள்!
CM Vijay: விஜயை வில்லங்கத்தில் மாட்டி விட்ட ரூட் ஜெகதீஷ்.. வாழ்த்து பதிவால் வெடித்த சர்ச்சை.. குஷியில் எதிர்க்கட்சிகள்!
இத மட்டும் பண்ணா போதும்.. மொத்தமாக மாறப்போகும் காஞ்சிபுரம்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
இத மட்டும் பண்ணா போதும்.. மொத்தமாக மாறப்போகும் காஞ்சிபுரம்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
Embed widget