மேலும் அறிய

Consecutive holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- போக்குவரத்து கழகம் அசத்தல் அறிவிப்பு

Consecutive holiday Special Bus : விடுமுறை எப்போது வரும் காத்திருந்த மக்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பாக தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. இதனால் பொதுமக்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

3 நாள் தொடர் விடுமுறை

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் கடந்த ஜூன் 4 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்த விடுமுறை எப்போது வரும் என மாணவர்கள் தினந்தோறும் காலண்டர்களை பார்த்து ஏங்கி தவித்து வந்தனர். இதே போ அரசு ஊழியர்களும் தொடர் விடுமுறை கிடைக்குமா.? சுற்றுலா செல்லலாமே என காத்திருந்தனர். இந்த நிலையில் மாணவர்கள் மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் 3 நாட்கள் தொடர் விடுமுறையானது கிடைக்கவுள்ளது. இதனையடுத்து அனைத்து ரயில்களும் ஏற்கனவே முன்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் சிறப்பு பேருந்து இயக்கப்படுமா.? என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர். அந்த வகையில் சிறப்பு பேருந்து தொடர்பான அறிவிப்பை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து

இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 25/06/2026 (வியாழக்கிழமை) 26/06/2026 (மொஹரம் பண்டிகை வெள்ளிகிழமை) 27/06/2026 (சனிக்கிழமை). மற்றும் 28/06/2026 (ஞாயிற்றுக் கிழமை) தொடர் விடுமுறையை முன்னிட்டு 25/06/2026, 26/06/2026 மற்றும் 27/06/2026 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஏற்கனவே இயக்கப்படும் பேருந்துகளோடு கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 25/06/2026 அன்று 85 பேருந்துகளும், 26/06/2026 மற்றும் 27/06/2026 ஆகிய நாட்களில் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 25/06/2026 வியாழக்கிழமை அன்று 525 பேருந்துகளும், 28/06/2026 வெள்ளிக்கிழமை மற்றும் 27/06/2026 சனிக்கிழமை 315 பேருந்துகளும் மாதவரத்திலிருந்து 25/06/2026 முதல் 27/06/2026 வரை தலா 14 பேருந்துகளும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

முன்பதிவு செய்து பயணியுங்கள்

இதுமட்டுமில்லாமல் விடுமுறை முடிவடைந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பொதுமக்கள் செல்லுவதற்காக வரும்  ஞாயிறு அன்று பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 28/08/2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 615 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில்,

இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 12445 பயணிகளும் வெள்ளிக்கிழமை அன்று 5846 பயணிகளும் சனிக்கிழமை அன்று 3815 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 12642 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Official Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Broiler Chicken: அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி; தமிழகம் முழுவதும் சிக்கன் கடைகள் மூடல்.. வரும் 31 முதல் கறிக்கோழி கிடைக்காது - காரணம் என்ன?
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி; தமிழகம் முழுவதும் சிக்கன் கடைகள் மூடல்.. வரும் 31 முதல் கறிக்கோழி கிடைக்காது - காரணம் என்ன?
Minister Jegatheeswari: “என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு அதிகாரம் கொடுத்தது யார்.? அடிச்சு கொன்னுடுவேன்” அமைச்சர் ஜெகதீஸ்வரி ஷாக் ஆடியோ
“என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு அதிகாரம் கொடுத்தது யார்.? அடிச்சு கொன்னுடுவேன்” அமைச்சர் ஜெகதீஸ்வரி ஷாக் ஆடியோ
"என்னை திருடன்னு சொல்றாங்க... மன்னிப்பு கேக்குற வரை வரமாட்டேன்" - அதிமுக கூட்டத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் - நடந்தது என்ன?
Tasmac: மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
Tasmac: மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
TVK Vijay: உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
Royal Enfield EMI: வெறும் 5 ஆயிரம் போதும்; ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை சொந்தமாக்கலாம்- EMI விவரங்கள்!
Royal Enfield EMI: வெறும் 5 ஆயிரம் போதும்; ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை சொந்தமாக்கலாம்- EMI விவரங்கள்!
Minister Jegatheeswari: “என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு அதிகாரம் கொடுத்தது யார்.? அடிச்சு கொன்னுடுவேன்” அமைச்சர் ஜெகதீஸ்வரி ஷாக் ஆடியோ
“என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு அதிகாரம் கொடுத்தது யார்.? அடிச்சு கொன்னுடுவேன்” அமைச்சர் ஜெகதீஸ்வரி ஷாக் ஆடியோ
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
EPS ADMK : தங்கமணி, வேலுமணி மீது கடும் கோபம்.! ஆக்‌ஷனில் இறங்கும் எடப்பாடி.? இனி நடக்கப்போவது இது தான்..
தங்கமணி, வேலுமணி மீது கடும் கோபம்.! ஆக்‌ஷனில் இறங்கும் எடப்பாடி.? இனி நடக்கப்போவது இது தான்..
Embed widget