மேலும் அறிய

Sarathkumar: ‘நான் சும்மா சொன்னதை நீங்க உண்மைன்னு நம்பிட்டீங்க’ .. 150 வயது வரை வாழும் விஷயத்தில் பல்டி அடித்த சரத்குமார்..!

150 வயது வரையில்  உயிருடன் வாழ்வதற்கான வித்தை பற்றி பேசிய விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை நடிகர் சரத்குமார் விளக்கியுள்ளார். 

150 வயது வரையில்  உயிருடன் வாழ்வதற்கான வித்தை பற்றி பேசிய விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை நடிகர் சரத்குமார் விளக்கியுள்ளார். 

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்த விளக்க பொதுக்கூட்டம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.  இந்த கூட்டம் அக்கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய சரத்குமார்,  எனக்கு தற்போது 69 வயதாகிறது. இன்னும் 150 வயது வரையில்  உயிருடன் வாழ்வதற்கான வித்தையை கற்றுள்ளேன்.  அதனை 2026  ஆண்டு என்னை முதலமைச்சராக்கினால் சொல்வேன் என கூறினார்.

இதன் வீடியோ இணையத்தில் வைரலானதோடு பெரும் விவாத பொருளாகவும் மாறியது. இதனிடையே அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள போர் தொழில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.  அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்நிகழ்வில் கலந்து கொள்ள வந்த சரத்குமார், செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவரிடம், 150 வயது வரையில்  உயிருடன் வாழ்வதற்கான வித்தை பற்றி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “ஒரு மீட்டிங்கில் பேசும் போது, அங்கிருப்பவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கும் போது, அந்த இடத்தை கலகலப்பாக மாற்ற என் நண்பன் என்னுடைய வயதை சொன்னான். அதற்காக சொல்லப்பட்டது தான் 150 வயது வரை வாழ்வேன் என்பது. அது செய்தியாக வந்தபோது எனக்கே ஆச்சரியமாகவே இருந்தது. நான் அந்த மீட்டிங்கில் ஒரு உந்துதல் ஏற்படுத்த வேண்டும் என அப்படி செய்தேன். 

அதாவது 150 வயது வரை யாராலும் வாழ முடியுமா?. ஒரு கட்சியின் தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரை முதலமைச்சராக பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். எனக்கும் இருக்கும். நான் ஏன் பொய் சொல்லணும். நான் முயற்சி செய்ய தான் செய்வேன். இது ஒரு போட்டி தானே” என கூறினார். அப்போது விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என  சரத்குமார் தெரிவித்தார். 

தொடர்ந்து மல்யுத்த வீரர்கள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீரர்களை கைது செய்து கொண்டு சென்றது தவறு தான். நாட்டுக்காக பதக்கம் வாங்கிக் கொடுத்த வீரர்களை அப்படி செய்திருக்க வேண்டாம்’ என சரத்குமார் கூறியுள்ளார். 

மேலும் படிக்க: Sarath kumar: ‘இன்னும் 150 வயது வரை உயிர் வாழ்வேன்’...அந்த வித்தை உங்களுக்கு தெரிஞ்சிக்கனுமா? இதை செய்யுங்க - சரத்குமார்

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget