HBD Sadhguru: ‛மக்களின் வாழ்வை மலரச் செய்துள்ளீர்கள்’ சத்குருவிற்கு நடிகர் சந்தானம் வாழ்த்து!
சத்குருவின் பிறந்தநாள் இன்று. அவருக்கு நடிகர் சந்தானம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜக்கி வாசுதேவ் என்ற சத்குருவின் பிறந்தநாள் இன்று. இவரது உலக புகழ் பெற்ற ஈஷா யோகா மையம், பிரபலங்கள் பலரும் அடிக்கடி வந்து செல்லும் இடமாக உள்ளது.இவரது 75 ஆவது பிறந்த நாளான இன்று, நடிகர் சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் சத்குருவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
.@SadhguruJV You have made millions of us blossom with #ishayogaprogram and various other tools and I am one among them. Each time I explore the tools, it transforms me. The journey of engineering myself has been one of internal exploration, clearance & possibility#HBDSadhguru
— Santhanam (@iamsanthanam) September 3, 2022
அந்த பிறந்தநாள் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "உங்களின் ஈஷா யோகா பயிற்சி மற்றும் பல்வேறு பயிற்சிகள் மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை மலரச் செய்துள்ளீர்கள். அதில் நானும் ஒருவன்… ஒவ்வொரு முறையும் நீங்கள் கற்றுக் கொடுக்கும் விதியை பின்பற்றும்போது, அது என்னை வேறு ஒருவனாக மாற்றுகிறது. நான் யார் என்பதையும், என்னால் என்ன முடியும் என்பதையும் உணரச் செய்து மனத்தெளிவு பெறச் செய்கிறது" பிறந்தநாள் வாழ்த்துக்கள் சத்குரு! என்று குறிப்பிட்டுள்ளார்.
SANTA15 :
சமீபத்தில் சந்தானம் நடிப்பில் 'குலு குலு' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து அவரின் அடுத்த படத்தின் அறிவிப்பும் வெளியாகி இருந்தது. கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜூ இயக்கத்தில் நடித்து வருகிறார் சந்தானம். அந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது.
Happy Vinayakar Chathurthi everyone 😊
— Santhanam (@iamsanthanam) August 31, 2022
Here is the first look of my next #SANTA15, titled #KICK 💥
🙏🏻😊#KickFirstLook #SantasKick @iamprashantraj @TanyaHope_offl @raginidwivedi24 @ArjunJanyaMusic @iamnaveenraaj @Fortune_films #ProductionNo10 @johnsoncinepro pic.twitter.com/VzgXAYIlXb
லொள்ளு சபா மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரைக்குள் நுழைந்தவர் சந்தானம். கோலிவுட்டில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர். மேலும் டாப் நடிகர்கள் பலருடன் காமெடியனாக நடித்திருக்கிறார். இவரது நகைச்சுவை ஸ்டைல் கவுண்டமணியை நினைவுப்படுத்தினாலும் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உண்டு.
சில காரணங்களால் வடிவேலு சினிமாவில் நடிப்பதிலிருந்து பிரேக் எடுக்க சந்தானம் அசுர வேகத்தில் வளர்ந்தார். ஆனால் திடீரென ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அவர் ஹீரோவாக நடித்த படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளன.
சமீபத்தில் அவர் ஹீரோவாக நடித்த சபாபதி, டிக்கிலோனா உள்ளிட்ட படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றன. அதேசமயம் சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டுமென்பதே அவரது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.