Kaduvetti: நெட்டிசன்களால் வறுக்கப்பட்ட காடுவெட்டி.. ரூ.1 கோடியை கூட தாண்டாத வசூல்?
பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மறைந்த காடுவெட்டி குரு. இவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து “காடுவெட்டி” என்ற படம் வெளியாகியுள்ளது.
நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள காடுவெட்டி படத்தின் ஒரு வார வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்
பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மறைந்த காடுவெட்டி குரு. இவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து “காடுவெட்டி” என்ற படம் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் 15 ஆம் தேதி வெளியான இப்படத்தை சோலை ஆறுமுகம் இயக்கியுள்ளார். இது அவரின் முதல் படமாகும். இந்த படத்தில் ஹீரோவாக தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார்.
தாய்மார்களின் கொண்டாட்டத்தில்...
— RK SURESH (@studio9_suresh) March 21, 2024
7- வது நாளாக வெற்றிநடை போடுகிறது... pic.twitter.com/E5J9ubyLrf
மேலும் சங்கீர்த்தனா, விஷ்மியா, சுப்பிரமணிய சிவா, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்பிரமணியன் என பலரும் நடித்துள்ளனர். வணக்கம் தமிழா சாதிக் இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசையமைக்க மஞ்சள் ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் ஏகப்பட்ட சர்ச்சைகளை கடந்து தான் தியேட்டரில் வெளியானது.
சென்சாரில் கட்
காடுவெட்டி குரு வன்னிய சமுதாய மக்களால் கடவுளாக பார்க்கப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் அவர் அனைத்து சமுதாய மக்களால் மதிக்கத்தக்கவராகவும் திகழ்ந்தார். இதனால் காடுவெட்டி படத்தை வன்னிய சமுதாய மக்கள் கொண்டாடி தீர்த்தனர். மேலும் அனைத்து தரப்பு மக்களும் பார்க்குபடி படம் எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் சென்சார் போர்ட்டில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. 31 காட்சிகளை நீக்கிய நிலையில் பல இடங்களில் வசனங்களும் மியூட் செய்யப்பட்டது.
@studio9_suresh
— Kailasam thangam (@kailashstfc) March 20, 2024
காடுவெட்டி அய்யா கதாபாத்திரம் உங்களை விட சிறப்பாக யாரும் செய்திருக்க முடியாது அண்ணா ... படம் சூப்பரா இருக்கு part-2 Ku waiting❤️... தென் மாவட்டம் படத்திற்கு waiting.... Love From namakkal Pallipalayam 🥰🥰
மேலும் படத்தில் இடம்பெற்ற காட்சிகள் கடும் சர்ச்சையை கிளப்பியது. இந்த படம் முதல் நாளில் ரூ.15 லட்சம், இரண்டாம் நாளில் ரூ.9 லட்சம் , 3ஆம் நாளில் ரூ.12 லட்சம், 4ஆம் நாளில் ரூ.5 லட்சம், 5ஆம் நாளில் ரூ.3 லட்சம், 6வது நாளில் ரூ.3 லட்சம் என சுமார் 6 நாட்களில் ரூ47 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளதாக sacnilk இணையதளம் வெளியிட்டுள்ளது. இன்று 7வது நாளாக படம் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று படத்தின் வசூல் சேர்த்து ரூ.50 லட்சம் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.