மேலும் அறிய

Ramki: நிரோஷாவே வேண்டாம் என சொல்லியும் கேட்கல.. நடிகர் ராம்கி பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

தமிழ் சினிமாவில் 90களின் காலக்கட்டத்தில் முன்னணி நடிகராக இருந்த ராம்கி மற்றும் நடிகை நிரோஷா ஒருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.

தனக்கும் நிரோஷாவுக்கும் இடையே காதல் முளைத்த தருணத்தை நேர்காணல் ஒன்றில் நடிகர் ராம்கி தெரிவித்தது மீண்டும் வைரலாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் 90களின் காலக்கட்டத்தில் முன்னணி நடிகராக இருந்த ராம்கி மற்றும் நடிகை நிரோஷா ஒருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். சில படங்களில் இணைந்து நடித்த இருவரும் இன்றும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகின்றனர். இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ராம்கி, நிரோஷாவுடன் தனக்கு காதல் ஏற்பட்ட தருணம் பற்றி பேசியுள்ளார்.

அதில்,”நிரோஷாவை என்னிடம் அறிமுகம் செய்தபோது அவர் கமலுடன் சூரசம்ஹாரம் படத்தில் நடித்து வந்தார். எந்த பத்திரிக்கை எடுத்தாலும் அட்டைப்படத்தில் இடம்பிடித்தார். நிரோஷாவின் பின்னணி என்பது வேற லெவலில் இருந்தது. அக்னி நட்சத்திரம் படத்தில் நடித்த அவரை செந்தூரப்பூவே படத்தில் ஹீரோயினாக போடலாம் என சொன்னார்கள். ஆனால் நான், ‘இவங்க வேண்டாம். நல்ல பொண்ணா நான் சொல்றேன்’ என சொன்னேன்.

ஆனால் ஆபாவணன் இது ஓகே சாமி என சொல்லிவிட்டார். நான் அப்போது மார்க்கெட்டில் பிஸியான நடிகர். பார்ப்பதற்கு சின்ன பிள்ளை மாதிரி இருப்பதால் நிரோஷா வேண்டாம் என சொன்னேன். இதை யாரோ அவரிடம் சொல்லி விட்டார். 

ஷூட்டிங் வரும்போதே முறைத்துக் கொண்டு தான் வந்தார். எனக்கு கெத்து காட்டுறதே பிடிக்காது. நிராஷாவோ எங்களுடன் ஒட்டாமல் கெத்தாக இருந்து கொண்டிருந்தார். ஆனால் நடிப்பில் என்னோட ஸ்பீட் அவருக்கு செட்டாகவில்லை. நான் ரிகர்சல் சரியான பிறகு என்னை நடிக்க அழைத்தால் போதும் என கெத்து காட்ட ஆரம்பிக்க இருவருக்குள்ளும் ஈகோ மோதல் கொளுந்து விட்டு எரிய தொடங்குகிறது. 

என்னை பார்த்து நீயெல்லாம் யாரு, ஊர்ல இருந்து நடிக்க வந்துட்ட, அப்ப நானெல்லாம் என்ன சொல்லுவ, நான் எம்.ஆர்.ராதா பொண்ணுடா என்கிற ரீதியில் தான் அவருக்கு என்மேல கோபம் இருந்துச்சு. என்னிடம் சினிமா பற்றி பேசினால் எங்களுக்குள் கோபம் வந்து விடும். நான் திரைப்பட கல்லூரியில் படித்து விட்டு வந்தவன் தான். இதெல்லாம் சண்டைக்கு ஏற்றிவிடுவதற்காக மட்டும் தான் பேசுவோம். 

அதேசமயம் ஆபாவாணன் படத்தில் காட்சிகள் பிரமாண்டமாக இருக்கும். ஒரு சண்டை காட்சியில் ரயிலில் நான் ஓடிப்போய் ஏற வேண்டும். பின்னாடியே நிரோஷா ஓடி வந்து ஏற வேண்டும். ஆனால் அவருக்கு ஓட தெரியவில்லை. இதனால் உள்ளே விழ போனார். நான் கையை பிடித்து தூக்கி விட்டேன். இந்த சம்பவத்தில் நிரோஷாவின் முகமே போயிருக்கும். அவரை வெளியே இழுத்து போட்டால் மயங்கி விழுந்து விட்டார். அந்த காப்பாற்றிய தருணம் மட்டுமல்லாமல், நாங்க நடிச்ச படம் சூப்பர் ஹிட்டான சமயத்தில் தான் காதல் முளைத்தது. 

சிம்ரன் எந்த மாதிரி ஒரு பிஸியான நடிகையாக இருந்தாரோ, அந்த அளவுக்கு அந்த காலக்கட்டத்தில் நிரோஷா இருந்தார். இருவரும் பிஸியாக நடிக்க ஆரம்பித்த சம்பவத்தில் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தோம். அப்படி காதல் வந்து விட்டது” என ராம்கி தெரிவித்திருந்தார்.

தலைப்பு செய்திகள்

Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget