மேலும் அறிய

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்துக்கு நவீன சிகிச்சை.. அமைச்சர் மா.சுப்ரமணியன் அளித்த விளக்கம் என்ன?

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்திற்கு இன்று இதயம் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி:

சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், நேற்று மாலை அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மருத்துர்களுடன் கலந்தாலோசித்து திட்டமிட்டு தான், ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அவருக்கு இதயம் தொடர்பன சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், தற்போது வரை ரஜினியின் உடல்நிலை நிலையாக இருப்பதாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திடீரென உடல்நலம் மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் போலி எனவும், ஏற்கனவே உடலில் அவ்வப்போது ஏற்படும் சில அசவுகரியங்களுக்கான சிகிச்சைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது?

குறிப்பிட்ட சிகிச்சை முறைக்கு பிறகு இன்று காலை, ரஜினிகாந்தின் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவசர நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வெளியான,  முதற்கட்ட தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. ஆனால், அது உண்மை இல்லை எனவும், திட்டமிடப்பட்ட சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார் என்றும் தெரிய வந்திருப்பது ரசிகர்களை நிம்மதி அடைய செய்துள்ளது.  சிகிச்சைக்குப் பிறகு 2-3 நாட்களில் ரஜினி வீடு திரும்புவார் எனவும், சுமார் 2 வார கால ஓய்விற்குப் பிறகு மீண்டும் திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 

முதலமைச்சர் ஸ்டாலின் டிவீட்:

இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

நெருங்கும் வேட்டையன் ரிலீஸ்

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக விளங்கும் ரஜினிகாந்த் நடிப்பில், ஜெயிலர் திரைப்படத்திற்குப் பிறகு உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், த.செ. ஞானவேல் ராஜா இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. வரும் 10ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தில், ரஜினிகாந்த் காவல்துறையை சேர்ந்த என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும், கூலி திரைப்படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல்நிலையை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம்” என்று கூறியிருக்கும் அமைச்சர் மா.சுப்ரமணியன், திட்டமிட்ட மருத்துவ சிகிச்சைதான் அளிக்கப்படுகிறது. பெரிய அளவிலான அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை. அதனால் அச்சப்பட எதுவுமில்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  நடிகர் ரஜினிகாந்துக்கு நவீன சிகிச்சை.. அமைச்சர் மா.சுப்ரமணியன் அளித்த விளக்கம் என்ன?
நடிகர் ரஜினிகாந்துக்கு நவீன சிகிச்சை.. அமைச்சர் மா.சுப்ரமணியன் அளித்த விளக்கம் என்ன?
Breaking News LIVE 1st OCT 2024: மனைவியை கடத்திய பாஜக பிரமுகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு
Breaking News LIVE 1st OCT 2024: மனைவியை கடத்திய பாஜக பிரமுகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
New PPF Rules: பிபிஎஃப் கணக்குகளுக்கான வட்டி ரத்து, கூடுதல் கணக்குகள் இனி இயங்காது - மத்திய அரசு அதிரடி
New PPF Rules: பிபிஎஃப் கணக்குகளுக்கான வட்டி ரத்து, கூடுதல் கணக்குகள் இனி இயங்காது - மத்திய அரசு அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  நடிகர் ரஜினிகாந்துக்கு நவீன சிகிச்சை.. அமைச்சர் மா.சுப்ரமணியன் அளித்த விளக்கம் என்ன?
நடிகர் ரஜினிகாந்துக்கு நவீன சிகிச்சை.. அமைச்சர் மா.சுப்ரமணியன் அளித்த விளக்கம் என்ன?
Breaking News LIVE 1st OCT 2024: மனைவியை கடத்திய பாஜக பிரமுகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு
Breaking News LIVE 1st OCT 2024: மனைவியை கடத்திய பாஜக பிரமுகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
New PPF Rules: பிபிஎஃப் கணக்குகளுக்கான வட்டி ரத்து, கூடுதல் கணக்குகள் இனி இயங்காது - மத்திய அரசு அதிரடி
New PPF Rules: பிபிஎஃப் கணக்குகளுக்கான வட்டி ரத்து, கூடுதல் கணக்குகள் இனி இயங்காது - மத்திய அரசு அதிரடி
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Today Rasipalan 1st Oct 2024: விருச்சிகத்திற்கு யோகம்! கும்பத்துக்கு இன்பம்! உங்க ராசிக்கு இந்த நாள் எப்படி?
Today Rasipalan: விருச்சிகத்திற்கு யோகம்! கும்பத்துக்கு இன்பம்! உங்க ராசிக்கு இந்த நாள் எப்படி?
Mettur Dam: திடீரென அதிகரித்த மேட்டூர் அணையின் நீர்வரத்து... வினாடிக்கு 12,763 கன அடியாக உயர்வு.
Mettur Dam: திடீரென அதிகரித்த மேட்டூர் அணையின் நீர்வரத்து... வினாடிக்கு 12,763 கன அடியாக உயர்வு.
Embed widget