மேலும் அறிய

Parthiban: பார்த்திபனின் புதுப்படம்... டைட்டில் சொல்பவர்களுக்கு பரிசு.. ரொம்ப ஈசி தான்.. ட்ரை பண்ணுங்க..!

நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தனது படங்களுக்கு தான் தேர்வு செய்த டைட்டிலை சொல்பவர்களுக்கு பரிசு வழங்கி வருவது அனைவரையும் கவர்ந்துள்ளது. 

நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தனது படங்களுக்கு தான் தேர்வு செய்த டைட்டிலை சொல்பவர்களுக்கு பரிசு வழங்கி வருவது அனைவரையும் கவர்ந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் ஒருவரான பார்த்திபன் எழுதி இயக்கி, நடித்து தயாரித்த படம் இரவின் நிழல். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி வெளியான இப்படத்தில் நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இரவின் நிழல் படம் தான் உலகிலேயே முதல் “நான்லீனியர் சிங்கிள் ஷாட்” படம் என்ற அடையாளத்துடன் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 

ஆனால் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இது உலகின் முதல் நான்லீனியர் சிங்கிள் ஷாட் படம் இல்லை என்ற கருத்தை முன்வைக்க, பார்த்திபனுக்கும் இவருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. ஆனாலும் இரவின் நிழல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து பார்த்திபனுக்கே தெரியாமல் நவம்பர் 12 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. 

இதனிடையே 100க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்ற இரவின் நிழல் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலிலும் இடம் பெற்று அசத்தியுள்ளது. இதனிடையே நேற்றை தினம் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தகத்தின் பக்கம் ஒன்றை வெளியிட்டு அதில் மயிலிறகு ஒன்றையும் இருந்தவாறு பதிவிட்டார். மேலும் அந்த பதிவில் ஒரு புடவையோட அழகு அதோட தலைப்புல தெரியும்.அந்த மாதிரி இந்த டிசைனுக்குள்ள இருக்க திரைப்படத்தோட தலைப்பைக் கண்டுபிடிங்க பாக்கலாம்! என தெரிவித்திருந்தார். 

பலரும் மயில் இறகு.. புத்தகத்தில் ஒளிந்திருக்கும் மயிலிறகே... மயிலே..வண்ணங்களாய் வாழ்கிறாள் என பல தலைப்புகளை பதிவிட்டனர்.

இந்நிலையில் மீண்டும் ட்வீட் ஒன்றை பதிவிட்ட பார்த்திபன், என் தலைப்பை யூகித்த ஒவ்வொருவருக்கும்,அழகான தலைப்பை கொண்ட புடவை ஒன்று பொங்கல் பரிசாக வழங்கப்படும்! “புடவையை வாங்கி நாங்க என்ன கட்டிக்கவா முடியும்” என கடுப்படிக்கும் ஆண்மாக்களுக்கு… கட்டிகிட்டவங்களுக்கு குடுங்க இல்ல கட்டிக்கப் போறவங்களுக்கு குடுங்க! என தெரிவித்திருந்தார். அதன்பிறகு நேற்றைய தினம் தனது புதுப்படத்திற்கு ”52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு” என பெயரிட்டதாக தெரிவித்தார். 

இதற்கிடையில் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ள பார்த்திபன், இவ்வாண்டில் … இன்னொரு படம் துவங்குகிறேன்… அத்தலைப்பு ஒரு பெண்ணின் பெயர் கொண்டதாய் இருக்கும்.ஆனால் அதனுள் ஒரு ஆண் பெயர் இருக்கும். கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு doll பரிசு! அனேகமாக அதிகமானவர்கள் கண்டுபிடிப்பீர்கள். எனவே ஒரு பொம்மை மட்டும் பரிசு. Ready 1..2..3 என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget