Actor Pratap Pothen: திரையுலகிற்கு பேரிழப்பு... பிரதாப் போத்தன் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்...
பிரதாப் போத்தன் அடிக்கடி சொல்லுவார். தூங்கி எழும்பொழுது மறைந்திருக்க வேண்டும் என்று அதேபோல அவர், தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது.
திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் உடல் நலக்குறைவால் காலமான நிலையில் அவரது உடலுக்கு பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தீவிர இலக்கிய வாசிப்பையும் கலைப் படங்கள் மீதான தணியாத ஆர்வத்தையும் தொடர்ந்தவர் நண்பர் ப்ரதாப் போத்தன். விறுவிறுப்பான திரைப்படங்களை வெற்றிகரமாக இயக்குவதிலும் நிபுணர் என்பதை 'வெற்றிவிழா' காலத்தில் பார்த்திருக்கிறேன். அவருக்கென் அஞ்சலி. pic.twitter.com/KL0Whqt93X
— Kamal Haasan (@ikamalhaasan) July 15, 2022
1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த பிரதாப் போத்தன் 1978 ஆம் ஆண்டு இயக்குனர் பரதனின் ஆரவம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் 1979 ஆம் ஆண்டு அழியாத கோலங்கள் படத்தில் அறிமுகமான அவர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் 10க்கும் மேற்பட்ட படங்களை பிரதாப் போத்தன் இயக்கியும் உள்ளார்.
Ayyoo...prathap...enna ithu pic.twitter.com/NAvyaPlole
— Manobala (@manobalam) July 15, 2022
2 முறை சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, ஒருமுறை சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். தமிழில் கடைசியாக கமலி ஃப்ரம் நடுக்காவேரி ஆகிய படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து மலையாளத்தில் மோகன்லால் படமான 'பரோஸ்: கார்டியன் ஆஃப் டி'காமா'ஸ் ட்ரெஷரிலும் பிரதாப் போத்தன் நடித்திருந்தார். இந்த படம் இன்னும் ரிலீசாகவில்லை. இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் பிரதாப் போத்தன் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Rest in peace sir.#rippratappothen pic.twitter.com/eEj0WFeoFz
— VijaySethupathi (@VijaySethuOffl) July 15, 2022
பலரும் சமூக வலைத்தளத்தில் பிரதாப் போத்தன் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்தனர். இதனிடையே இயக்குநர்கள் மணிரத்னம்,சீனு ராமசாமி, ஒளிப்பதிவாளர்கள் ராஜீவ் மேனன், பிசி ஸ்ரீராம், நடிகர்கள் கமல்ஹாசன், கருணாஸ், மனோபாலா,ஒய்.ஜி.மகேந்திரன், நரேன்,ரியாஸ்கான், சுரேஷ் சக்கரவர்த்தி, நடிகை பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
Nadigar Sangam (SIAA) Shares Their Condolences With Immense Grief For The Death Of Actor/Director #PrathapPothen .#RIPPratapPothen #SIAA l @siaaprnews @johnsoncinepro l #filmistreet pic.twitter.com/HauQ4qT31B
— Filmi Street (@filmistreet) July 15, 2022
தொடர்ந்து பத்திரிக்கையாளரை சந்தித்த கமல்ஹாசன், பிரதாப்பின் அண்ணன் மூலமாக தான் அவர் எனக்கு பழக்கம். இவரை நான் முதலில் ஒரு மேடை நாடகத்தில் தான் சந்தித்தோம். அங்கு நானும் எனது ஆசானும் அவரின் திறமையை பார்த்து பாலச்சந்தரிடம் சினிமாவில் நடிப்பதற்காக பேசினோம். பிரதாப் சிறந்த திறமையான எழுத்தாளர், இயக்குநர். அவரது எழுத்து முழுமையாக வெளிவரவில்லை என்பது எங்களுக்கு வருத்தம் என கூறினார்.
பிரதாப் போத்தன் அடிக்கடி சொல்லுவார். தூங்கி எழும்பொழுது மறைந்திருக்க வேண்டும் என்று அதேபோல அவர், தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது. அவரது மறைவு என்பது திரைப்பட துறைக்கு பெரிய இழப்பு என நடிகர் மனோபாலா தெரிவித்துள்ளார்.
பிரதாப் போத்தன் என்னுடைய நெருங்கிய நண்பர். சினிமா மீது மிகவும் ஆர்வம் உள்ளவர். கண்டிப்பாக அவரது இழப்பு மிகவும் வருத்தம் அளிக்கிறது என இயக்குநர் மணிரத்னம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்