மேலும் அறிய

Rajinikanth: ரஜினியால் கண்கலங்கிய தருணம்.. வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவத்தை பகிர்ந்த பிரபு..!

கும்கி பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியின் போது ரஜினியால் தான் கண் கலங்கிய சம்பவத்தை பிரபு பழைய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அந்த நிகழ்வு பற்றி காணலாம்.

கும்கி பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியின் போது ரஜினியால் தான் கண் கலங்கிய சம்பவத்தை பிரபு பழைய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அந்த நிகழ்வு பற்றி காணலாம். 

கும்கி படம் 

கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் ‘கும்கி’ படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் நடிகராக விக்ரம் பிரபு அறிமுகமானார். மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து 3வது தலைமுறை நடிகராக அவர் அறிமுகமானது படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த படத்தில் லட்சுமி மேனன், தம்பி ராமையா, ஜோ மல்லூரி, அஸ்வின் என பலரும் நடித்திருந்தனர். 

டென்ஷனான ரஜினி.. பதறிய பிரபு 

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றி நேர்காணல் ஒன்றில் நடிகர் பிரபு பேசியிருப்பார். அப்போது, “கும்கி படம் அப்பா (சிவாஜி) மற்றும் மக்களின் ஆசீர்வாதம் ஆகியவற்றால் சிறப்பாக அமைந்தது. அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை என்னால் மறக்க முடியாது. நான் அந்நிகழ்ச்சிக்காக அழைக்க ரஜினியை பார்க்க சென்றிருந்தபோது அவருக்கு உடல்நிலை சற்று சரியில்லாமல் இருந்தது. அதனால் முடிந்தால் வருகிறேன் என சொல்லி விட்டார்.

உடனே நான் கமலிடம் சென்று, ‘ரஜினி அண்ணே வரவில்லை..அதனால் நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் அண்ணன்’ என கட்டாயப்படுத்தி வர வைத்து விட்டேன். ஆனால் தயாரிப்பாளர் லிங்குசாமி, இயக்குநர் பிரபுசாலமன் என்னிடம் ரஜினி, கமல் இரண்டு பேரும் வந்தால் நன்றாக இருக்கும் என சொன்னார்கள். நான் எப்படிப்பா உடம்பு சரியில்லாம இருக்காரு, இப்பதான் வெளிநாட்டுல இருந்து வந்துருக்காரு எப்படி வருவாரு என நினைத்துக் கொண்டு அழைப்பிதழ் வைத்து விட்டு வந்து விட்டேன். திடீரென்று எனக்கு ரஜினியிடம் போன் வந்தது.

கடைசியில் நடந்த சிறப்பான சம்பவம் 

போனை எடுத்த என்னிடம், ‘நான் தான் வரமாட்டேன் என சொன்னனே..ஏன் அழைப்பிதழ் வைக்க வந்திங்க?’ என கோபமாக கேட்டார். நான், நீங்க வரலைன்னாலும் பரவால்ல.. ஆனால் அழைப்பிதழ் வைக்கிறது சம்பிரதாயம் என சொல்லவும் எதுவும் பேசாமல் போனை கட் செய்தார். எனக்கு ஒன்றுமே ஓடவில்லை. நான் உடனடியாக எங்க அண்ணன் ராம்குமாரிடம் தெரிவித்தேன். அவர் ஆடியோ நிகழ்ச்சி முடிந்ததும் பேசிக்கொள்ளலாம் என எனக்கு சமாதானம் சொன்னார். 

அடுத்தநாள் காலை சத்யம் தியேட்டரில் நிகழ்ச்சி நடந்தது. காலை 9 மணி நிகழ்ச்சிக்கு நான் 8.30 மணிக்கே சென்று விட்டேன். திடீரென அவரது உதவியாளர் சுப்பையாவிடம் இருந்து போன் வந்தது. நான் எடுத்து என்னவென்று கேட்டேன். ரஜினி பேச வேண்டும் என சொன்னதாக போனை அவரிடம் கொடுத்தார். நான் என்னவோ ஏதோ என்று பேசினேன். ரஜினி என்னிடம், ‘பிரபு எங்க இருக்கீங்க?’ என கேட்டார்.

நான் சத்யம் தியேட்டரில் இருக்கிறேன் என சொன்னேன். உடனே அவர், நான் வாசலில் தான் நிற்கிறேன். உள்ளே வரலாமா? என கூற, எனக்கு அழுகையே வந்து விட்டது. சொல்லிவிட்டு வந்து விட்டால் தெரிந்து விடுமே என முதல்நாள் என்னை மிரட்டி விட்டு மறுநாள் நடந்தது எல்லாம் மிராக்கிள் தான். அண்ணேன் என அவரை கட்டிப்பிடிக்க, என்ன பயந்துட்டீங்களா என கூலாக ரஜினி கேட்டார். அன்றைய நாள் எங்க அப்பா எங்களுடன் இருந்ததாக நான் உணர்ந்தேன். ரொம்ப எமோஷனலா இருந்துச்சு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வறுமையில் வளர்ந்தாரா? சுத்தப்பொய் ! பரபரப்பை கிளப்பிய முதல்வர் விஜயின் ஸ்கூல் மேட்
வறுமையில் வளர்ந்தாரா? சுத்தப்பொய் ! பரபரப்பை கிளப்பிய முதல்வர் விஜயின் ஸ்கூல் மேட்
*ZEE5 ஒரிஜினல் சீரிஸ் வழங்கும், பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் “வாரண்ட்” சீரிஸ் டிரெய்லர் அறிமுக விழா !
*ZEE5 ஒரிஜினல் சீரிஸ் வழங்கும், பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் “வாரண்ட்” சீரிஸ் டிரெய்லர் அறிமுக விழா !
சிவகார்த்திகேயனை சீண்டி பார்க்கும் சூர்யா..கருப்பு டிரெய்லர் வசனத்தால் சர்ச்சை
சிவகார்த்திகேயனை சீண்டி பார்க்கும் சூர்யா..கருப்பு டிரெய்லர் வசனத்தால் சர்ச்சை
CM Vijay salary: சினிமாவில் ரூ.200 கோடி வாங்கிய விஜய், முதல்வராக இனி மாதம் எவ்வளவு ரூபாய் சம்பளம் பெறுவார்? - முழு விவரம் இதோ
சினிமாவில் ரூ.200 கோடி வாங்கிய விஜய், முதல்வராக இனி மாதம் எவ்வளவு ரூபாய் சம்பளம் பெறுவார்? - முழு விவரம் இதோ
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இபிஎஸ் கூட்டணிக்கு டீல் பேசியது உண்மை.. வதந்தி என சொன்ன திமுக.. போட்டுக்கொடுத்த சி.வி.சண்முகம்!
இபிஎஸ் கூட்டணிக்கு டீல் பேசியது உண்மை.. வதந்தி என சொன்ன திமுக.. போட்டுக்கொடுத்த சி.வி.சண்முகம்!
ADMK support TVK : தவெக ஆட்சிக்கு அதிமுக முழு ஆதரவு.! பாஜகவுடன் கூட்டணி இல்லை- சி.வி.சண்முகம் அதிரடி அறிவிப்பு
தவெக ஆட்சிக்கு அதிமுக முழு ஆதரவு.! பாஜகவுடன் கூட்டணி இல்லை- சி.வி.சண்முகம் அதிரடி அறிவிப்பு
CM Vijay: 2 வாரம் தான் டைம்... 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!
CM Vijay: 2 வாரம் தான் டைம்... 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!
CM Vijay: ADMK-வின் 30 MLA-க்கள் ஆதரவு..! CM விஜய் ஏற்பாரா? தவெகவின் நிலையான ஆட்சி? முரண்பாடான கூட்டணி?
ADMK-வின் 30 MLA-க்கள் ஆதரவு..! CM விஜய் ஏற்பாரா? தவெகவின் நிலையான ஆட்சி? முரண்பாடான கூட்டணி?
Tamilnadu Round Up: சபாநாயகர் பதவியேற்பு, எகிறிய தங்கம் விலை, உயர்நீதிமன்றம் தீர்ப்பு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: சபாநாயகர் பதவியேற்பு, எகிறிய தங்கம் விலை, உயர்நீதிமன்றம் தீர்ப்பு - தமிழ்நாட்டில் இதுவரை
TVK ADMK: கவலை வேண்டாம் CM விஜய்..! 30 MLA-க்களின் ஆதரவை இன்று அறிவிக்கும் அதிமுக - அமைச்சரவை இடம்?
TVK ADMK: கவலை வேண்டாம் CM விஜய்..! 30 MLA-க்களின் ஆதரவை இன்று அறிவிக்கும் அதிமுக - அமைச்சரவை இடம்?
Skoda Kodiaq: நவீன அம்சங்களை சேர்த்து, ரூ.3 லட்சம் விலையை குறைத்த ஸ்கோடா கோடியாக் - எப்படி இருக்கு?
நவீன அம்சங்களை சேர்த்து, ரூ.3 லட்சம் விலையை குறைத்த ஸ்கோடா கோடியாக் - எப்படி இருக்கு?
MK Stalin: வெறும் 87 ஓட்டு வாங்கிய மு.க.ஸ்டாலின்.. தோற்ற காரணம் இதுதானா? - சம்பவம் செய்த கொளத்தூர் மக்கள்!
MK Stalin: வெறும் 87 ஓட்டு வாங்கிய மு.க.ஸ்டாலின்.. தோற்ற காரணம் இதுதானா? - சம்பவம் செய்த கொளத்தூர் மக்கள்!
Embed widget