மேலும் அறிய

Prabhas: ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு பிரபாஸுக்கு அழைப்பு... வருகைதரும் மற்ற வி.ஐ.பிக்கள் யார் யார்? 

Prabas : அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி நடைபெற இருக்கும் ராமர் கோயில் விழாவுக்கு நடிகர் பிரபாஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.   

அயோத்தியில் பல ஆண்டு காலமாக சர்ச்சைக்குரிய ஒரு இடத்திற்கு சட்டப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டு அந்த இடத்தில் ராம ஜென்மபூமி கோயிலை கட்ட சொல்லி உச்சநீதிமன்றம் அறக்கட்டளைக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவின் பேரில் மிகவும் பிரமாண்டமான ராமர் கோயிலை அந்த நிலத்தில் கட்ட முடிவெடுக்கப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. 

குடமுழுக்கு விழா :

2020ம் ஆண்டில் பூமி பூஜை நடைபெற்று அடிகள் நாட்டப்பட்டது. சுமார் 1000 கோடி ரூபாய் செலவில் ராமர் கோயில் கட்டிட பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வந்தது. கோயில் பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் வரும் ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட உள்ளன. 

Prabhas: ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு பிரபாஸுக்கு அழைப்பு... வருகைதரும் மற்ற வி.ஐ.பிக்கள் யார் யார்? 

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு நாட்டில் உள்ள பல்வேறு  வி.வி.ஐ.பி.க்கள், துறவிகள் மற்றும் நாட்டின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை. 

வி.ஐ.பி.க்கள் யார் யார் ?

அந்த பட்டியலில் திரையுலகை சேர்ந்த பலருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், ரன்பீர் கபூர், ஆலியா பட், டைகர் ஷெராஃப், சன்னி தியோல், அஜய் தேவ்கன், ஆயுஷ்மான் குரானா, கங்கனா ரனாவத், சஞ்சய் லீலா பன்சாலி, ரோஹித் ஷெட்டி, ராஜ்குமார் ஹிரானி கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர்கள் ரத்தன் டாடா , முகேஷ் அம்பானி,  கௌதம் அதானி உள்ளிட்ட பலர் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 

இந்த கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க நடிகர் பிரபாஸுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

Prabhas: ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு பிரபாஸுக்கு அழைப்பு... வருகைதரும் மற்ற வி.ஐ.பிக்கள் யார் யார்? 
ஆதிபுருஷ் பிரபாஸ் :

பான் இந்தியன் நடிகராக புகழின் உச்சியில் இருக்கும் நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'சலார்'. படம் வெளியான நான்கு நாட்களில் சுமார் 450 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராவணனை ராமன் வீழ்த்தும் ராமாயண புராண கதையை மையமாக வைத்து கடந்த ஜூன் மாதம் வெளியான திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இப்படத்தில் ராமனாக பிரபாஸ் நடிக்க, ராவணனாக சைஃப் அலி கான் மற்றும் சீதாவாக கிருத்தி சனோன் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தலைப்பு செய்திகள்

ரிஷிகாந்த் சனந்த் இருவருக்கும் மோதிரம் பரிசளித்த இயக்குநர் மிஷ்கின்
ரிஷிகாந்த் சனந்த் இருவருக்கும் மோதிரம் பரிசளித்த இயக்குநர் மிஷ்கின்
ரொம்ப மொக்கையா இருந்துச்சு...கார்த்திக் சுப்பராஜ் முன்னாடியே ரெட்ரோ படத்தை கழுவி ஊற்றிய மிஷ்கின்
ரொம்ப மொக்கையா இருந்துச்சு...கார்த்திக் சுப்பராஜ் முன்னாடியே ரெட்ரோ படத்தை கழுவி ஊற்றிய மிஷ்கின்
ஜெயிலர் 2-க்கு யு/ஏ சான்றிதழ்...ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி...
ஜெயிலர் 2-க்கு யு/ஏ சான்றிதழ்...ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி...
சிபிராஜின் புதிய அவதாரம்...தயாரிப்பாளராக களமிறங்க என்ன காரணம்?
சிபிராஜின் புதிய அவதாரம்...தயாரிப்பாளராக களமிறங்க என்ன காரணம்?

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Embed widget