Pawan Kalyan : தப்பே செய்யாமல் மன்னிப்பு கேட்ட கார்த்தி.. அட்வைஸ் கொடுத்த பவன் கல்யாண்..
மெய்யழகன் பட தெலுங்கு ப்ரோமோஷனின் போது நடிகர் கார்த்தி திருப்பதி லட்டு பற்றி கேட்டதற்கு, அது சென்சிடிவ்வான விஷயம். கார்த்தி, அது குறித்து பேசமுடியாது என்றார்.
திருப்பதி லட்டு பற்றி கார்த்தி
மெய்யழகன் பட தெலுங்கு ப்ரோமோஷனின் போது நடிகர் கார்த்தி திருப்பதி லட்டு பற்றி கேட்டதற்கு, அது சென்சிடிவ்வான விஷயம். கார்த்தி, அது குறித்து பேசமுடியாது என்றார்.
ஆனால் தொகுப்பாளர் தொடர்ச்சியாக லட்டை பற்றியே பேசிக்கொண்டிருந்தார். அவரது பேச்சு குறித்து ஆந்திர துணை முதலமைச்சரும், பிரபல நடிகருமான பவன் கல்யாண் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். "ஒரு நடிகராக உங்களை மதிக்கிறேன். ஆனால், சனாதன தர்மம் என்று வரும்போது ஒரு வார்த்தையை கூறும் முன்பு 100 முறை யோசிக்க வேண்டும்” என்று பவன் கல்யாண் தெரிவித்தார்.
மன்னிப்பு கேட்ட கார்த்தி
பவன் கல்யாண் பேசிய ஒரு சில மணி நேரங்களில் நடிகர் கார்த்தி தனது தவறை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்டார். "வெங்கடேசப் பெருமானின் தாழ்மையான பக்தன் என்ற முறையில், நான் எப்போதும் நம் மரபுகளை அன்புடன் பின்பற்றுகிறேன்" என கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். எந்த வித ஈகோவும் இல்லாமல் தனது தவறை ஏற்றுக்கொண்டு கார்த்தி மன்னிப்பு கேட்டதை பவன் கல்யாண் பாராட்டியுள்ளார்.
கார்த்தியின் செயலை பாராட்டிய பவன் கல்யாண்
" அன்புள்ள கார்த்தி இந்த விஷயத்தில் துரிதமாக நீங்கள் பதிலளித்ததற்கும் நம் கலாச்சாரத்தின் மீது உங்கள் மரியாதையை வெளிப்படுத்திய விதத்தையும் நான் பாராட்டுகிறேன். ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வுகளில் கலந்திருக்கும் திருப்பதி போன்ற கலாச்சார அமைப்புகள் விஷயத்தில் நாம் ரொம்ப கவனமாக கையாள்வது அவசியம். எந்த வித உள்நோக்கத்தோடும் நீங்கள் அப்படி பேசியதாக நான் நினைக்கவில்லை. ஒற்றுமை மற்றும் மரியாதையையும் ஊக்குவிப்பதே நம்மைப் போன்ற பிரபலங்களின் கடமை. குறிப்பாக நாம் அதிகம் மதிக்கும் நம் கலாச்சாரத்தையும் அதன் விழுமியங்களையும் . மக்களை சினிமாவின் வழி உற்சாகப்படுத்தும் அதேவேளையில் நம் கலாச்சார விழுமியங்களை உயர்த்தி பிடிக்கவே நாம் முயற்சிக்க வேண்டும் . இந்த தருணத்தில் ஒரு நடிகராக நான் உங்கள் மீது வைத்திருக்கும் மதிப்பையும் வெளிப்படுத்திக் கொள்கிறேன். உங்கள் திறமையாலும் கடின உழைப்பாலும் சினிமாவிற்கு பெரும் பங்காற்றி இருக்கிறீர்கள்.
Dear @Karthi_Offl garu,
— Pawan Kalyan (@PawanKalyan) September 24, 2024
I sincerely appreciate your kind gesture and swift response, as well as the respect you've shown towards our shared traditions. Matters concerning our sacred institutions, like Tirupati and its revered laddus, carry deep emotional weight for millions of…
சூர்யா , ஜோதிகா மற்றும் ஒட்டுமொத்த மெய்யழகன் படத்திற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படம் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும் என்று நம்புகிறேன்.' என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.