Paresh Rawal : பீர் மாதிரி என் சிறுநீரை குடித்தேன்...அதிர்ச்சியை கிளப்பிய சூர்யா பட நடிகர்
Paresh Rawal : படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்தை குனப்படுத்த தனது சொந்த சிறுநீரை அருந்தியதாக பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் தெரிவித்துள்ளார்

பரேஷ் ராவல்
இந்தி படங்களில் பல்வேறு நகைச்சுவை மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் பரேஷ் ராவல். அக்ஷய் குமார் , சுனில் ஷெட்டியுடன் இவர் நடித்த ஃபிர் ஹேரா பேரி திரைப்படம் பரவலாக பேசப்பட்டது. தமிழில் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2014 தேர்தலில் பாஜக எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி அடிக்கடி செய்திகளில் இடம்பெறக் கூடியவர் பரேஷ் ராவல். அந்த வகையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தனது சொந்த சிறுநீரை அருந்தியதாக பரேஷ் ராவல் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
சொந்த சிறுநீரை அருந்திய பரேஷ் ராவல்
' படப்பிடிப்பின் போது என் காலில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் இருந்தபோது நடிகர் அஜய் தேவ்கனின் தந்தை வீரு தேவ்கன் என்னை சந்திக்க வந்தார். சீக்கிரம் குனமடைய காலை எழுந்ததும் என் சிறுநீரை அருந்தும்படி ஆலோசனை சொன்னார். அதே நேரத்தில் புகைப்பிடிப்பது , மது அருந்துவது , மாமிசம் சாப்பிடுவதை தவிர்க்கச் சொன்னார். அவர் சொன்னது போல நானும் தினமும் காலை எழுந்ததும் என் சிறுநீரை பீர் குடிப்பது போல் ஒரே மூச்சாக குடித்தேன். 15 நாட்கள் இப்படி செய்துவந்தேன். மருத்துவம் என் எக்ஸ்ரேவை பார்த்து ஆச்சரியப்படும் அளவு நான் சீக்கிரம் குனமடைந்து வந்தேன். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக இரண்டு மாதங்கள் ஆகும் என எதிர்பார்த்த நிலையில் ஒன்றரை மாதத்தில் என்னை டிஸ்சார்ஜ் செய்தார்கள்" என பரேஷ் ராவல் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்து பலரும் நம் நாடு முன்னேற இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என பதிவிட்டு வருகிறார்கள்
I drank my first urine of the day like beer for 30 days, and I was cured of my disease.
— Dr Nimo Yadav 2.0 (@DrNimoYadav) April 27, 2025
- Ex BJP MP Paresh Rawal
I think india will take a lot of time to achieve 5 trillion dollar economy due to people like @SirPareshRawal . pic.twitter.com/TaJ4Dasyln





















