Actor Nakul Daughter Video: நல்லா வச்சு செய்யுறா.!! சேட்டை மகளோடு வொர்க் அவுட் செய்யும் நகுல்.. வைரலாகும் வீடியோ..!
நடிகர் நகுல் தனது மகளுடன் விளையாடி வெளியிட்டிருக்கும் வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
![Actor Nakul Daughter Video: நல்லா வச்சு செய்யுறா.!! சேட்டை மகளோடு வொர்க் அவுட் செய்யும் நகுல்.. வைரலாகும் வீடியோ..! Actor Nakul with her daughter cute video viral on social media Actor Nakul Daughter Video: நல்லா வச்சு செய்யுறா.!! சேட்டை மகளோடு வொர்க் அவுட் செய்யும் நகுல்.. வைரலாகும் வீடியோ..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/19/f54bb191d957c8080f17ae9f2db415fe_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் திரையுலகின் வளரும் கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் நகுல். இவர் தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாக திகழ்ந்த நடிகை தேவயானியின் தம்பி என்பது அனைவரும் அறிவர். ‘பாய்ஸ்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், ‘காதலில் விழுந்தேன்’ ‘ மாசிலாமணி’ ‘ நான் ராஜாவாக போகிறேன்’ ‘வல்லினம்’ ‘ தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்’ உள்ளிட்ட படங்களில் நடித்ததின் மூலம் பிரபலமடைந்தார்.
இது மட்டுமன்றி, ‘டான்ஸ் vs டான்ஸ்’, ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 7’ , ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 8’ , ’பிக்பாஸ் ஜோடிகள்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று இருக்கிறார். தான் நீண்ட காலமாக காதலித்து வந்த தனது காதலியான ஷ்ருதி பாஸ்கரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு அகிரா என்ற பெண் குழந்தை பிறந்தது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இந்தத் தம்பதி தங்களது நடவடிக்கைகள், குழந்தையுடன் செய்யும் சேட்டைகள், தங்களது பர்சனல் விஷயங்கள்,உள்ளிட்டவற்றை தொடர்ந்து பகிர்ந்து வருகிறது. அந்த வகையில், தற்போது மீண்டும் ஒரு வீடியோவை நகுல் வெளியிட்டு இருக்கிறார். “அதில் நகுல் தனது குழந்தையை, வயிற்றில் வைத்து கொண்டு வொர்க் அவுட் செய்து கொண்டிருக்கிறார். அகிரா கையில் கேக்கை வைத்துக்கொண்டு சிரித்து கொண்டிருக்கிறது. அப்போது அங்கு பூனை ஒன்று வர, அங்கு இன்னொரு கேக் இங்கு இருக்கிறது என்கிறார் நகுல்.. இதனை கேட்டுக்கொண்டிருந்த நகுலின் மனைவி சிரிக்கிறார்.
அந்த வீடியோவுடன் ஒரு பதிவையும் நகுல் பதிவிட்டிருக்கிறார், “ அதில் , அகிரா என்னுடைய ஜெராக்ஸ்தான்.. ஆனால் அவருடைய கேரக்டர் அப்படியே சுருதியோடது. இவங்க இரண்டு பேரும் நான் வொர்க் அவுட் செய்யும் போது என்னை டார்ச்சர் செய்வார்கள். ஒருவர் கேக் செய்கிறார்.. இன்னொருவர் என்மேல் உட்கார்ந்து கொண்டு கேக் சாப்பிடுகிறார்.. நல்லா வச்சு செய்கிறங்கடா என்ன..!” என்று பதிவிட்டு இருக்கிறார். இது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)