மேலும் அறிய

என்னை புரிந்துகொள்ளாதவர்கள் தான் தற்குறி...மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சோலார் ஸ்டார் மகேந்திரன்

தமிழ்நாட்டில் மின்வெட்டுக் குறித்து நடிகர் மாஸ்டர் மகேந்திரனின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தனது கருத்து குறித்து மகேந்திரன் விளக்கமளித்துள்ளார்

தமிழகத்தில் மின்வெட்டு குறித்து மாஸ்டர் மகேந்திரனின் கருத்து பரவலாக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. மாஸ்டர் மகேந்திரனை பலரும் கடுமையாக திட்டி வந்த நிலையில் தனது கருத்து மகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் தவெக அரசு அமைத்து ஒரு மாத காலம் கடந்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தில் பெண்கள் , குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் தவெக அரசு கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதே நேரம் தவெக ஆட்சி ஏற்றப்பின் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் தொடர் மின்வெட்டுகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து அரசு தரப்பில் இருந்து இதுவரை நியாயமான எந்த வித விளக்கமும் வராரது மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

மாஸ்டர் மகேந்திரன் சர்ச்சைப் பேச்சு

இதனால் தேர்தலுக்கு முன் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த சினிமா பிரபலங்கள் மற்றும் சமூக வலைதள பிரபலங்களை விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் தவெகவுக்கும் விஜய்க்கும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தவர் நடிகர் மாஸ்டர் மகேந்திரன். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். தற்போது ஒரு சில படங்களில் நாயகனாகவும் , வில்லனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் யூடியுப் சேனல் ஒன்றில் பேசியபோது தமிழகத்தில் மின்வெட்டு குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து அவர் பேசுகையில் "  இவ்வளவு நாள் மின்சார தடை இல்லையா. இத்தனை நாள் ஜாலியாக இருந்தீர்களா ? 6 மாதத்திற்கு எதுவும் கேட்காதீர்கள். வேண்டுமானால் என் வீட்டில் இருந்து கூட மின்சாரம் எடுத்துக் கொள்ளுங்கள். சோலார் சிஸ்டம் என்று ஒன்று இருக்கிறது. எனக்கு அதை பயன்படுத்தி மின்சாரம் எடுக்க தெரியும். விஜயிடம் கேள்வி கேட்டால் மின்சாரம் வந்துவிடுமா. இன்னும் எத்தனை  நாள் தான் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பீர்கள். கேள்வி கேட்பதை நிறுத்தினால் பதில் கிடைக்கும் ' என மகேந்திரன் பேசியிருந்தார்

மகேந்திரனின் கருத்து பரவலாக விமர்சனங்களை எதிர்கொண்டது. திமுக ஆட்சியில் கேள்வி கேட்பது நம் உரிமை என்று புரட்சிகரமாக வீடியோ போட்ட இதே மகேந்திரன் இன்று கேள்வி கேட்காதீர்கள் என்று பேசியிருக்கிறார். இதுதான் அவரது உண்மை முகம் என பலர் அவரை விமர்சித்து வந்தார்கள். புதிதாக அவருக்கு சோலார் ஸ்டார் என்றும் நெட்டிசன்கள் பெயர் வைத்துள்ளார்கள். இந்த நிலையில் மகேந்திரன் தனது கருத்து குறித்து விளக்கமளித்துள்ளார். தனது கருத்தை தவறாக புரிந்துகொண்டவர்களே தற்குறி என மகேந்திரன் கூறியுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது 

சர்ச்சை கருத்து குறித்து மகேந்திரன் விளக்கம் 

தனது கருத்து குறித்து விளக்கமளித்த மகேந்திரன் "நான் பேசுனது முழுசா பாக்காம, ஷார்ட்ஸ்ஸ பாத்துட்டு எதையாவது பரப்ப வேண்டியது. மின்சர தேவை அதிகமா இருக்கு, அதனால சோலார் பயன்படுத்தி இருந்தா இந்த மின்சார பிரச்சனை இருந்து இருக்காதுனு சொன்னேன். கொச்சின் ஏர்போர்ட் முழுக்க முழுக்க சோலார் சிஸ்டத்துல இயங்குது, எங்க சாத்தியம்னா இங்க முடியாதா? நான் பேசுனது தப்பா புரிஞ்சிகிட்டு என்ன தற்குறின்னு திட்றாங்க. அப்போ நான் பேசினது தற்குறித்தனமா? இல்ல தப்பா புரிஞ்சுகிட்டவங்க தற்குறியா? அதனால நான் என் கருத்துல உறுதியா இருக்கேன். அதுல இருந்து பின்வாங்குறதா இல்லை" என்று கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget