மேலும் அறிய

S.J. Surya : எஸ்.ஜே.சூர்யா பெயருக்கு பின்னால் இப்படி ஒரு வரலாறா? .. நடந்ததை விளக்கும் இயக்குநர் மாரிமுத்து..!

வறுமையான நிலையிலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தவர் எஸ்.ஜே. சூர்யா. 

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக வேண்டும் என்ற ஆசையோடும் கனவோடும் திரைப்பயணத்தை தொடங்கியவர் எஸ்.ஜே. சூர்யா. அதன்  முதற்படியாக இயக்குநர் வசந்த்திடம் உதவியாளராக சேர்ந்து பணியாற்றியுள்ளார். அப்படி வசந்த் இயக்கிய 'ஆசை' படத்தின் போது அவரின் துணை இயக்குநராக பணிபுரிந்தவர் எதிர்நீச்சல் தொடர் புகழ் மாரிமுத்து. அந்த வகையில் எஸ்.ஜே.சூர்யாவின் சீனியர் மாரிமுத்து. இன்றும் அந்த நட்பு மிக சிறப்பாக தொடர்ந்து வருகிறது. 

 

S.J. Surya : எஸ்.ஜே.சூர்யா பெயருக்கு பின்னால் இப்படி ஒரு வரலாறா? .. நடந்ததை விளக்கும் இயக்குநர் மாரிமுத்து..!

 

நாய்குட்டியுடன் பயணம் :

ராதா மோகன் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள 'பொம்மை' திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் எஸ்.ஜே. சூர்யா பற்றி பல ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார் நடிகர் மாரிமுத்து. 'ஆசை' படத்தில் ஒரு காட்சியில் அஜித், சுவலக்ஷ்மிக்கு ஒரு நாய்க்குட்டியை பிறந்தநாள் பரிசாக கொடுப்பார். அதற்காக நாய்க்குட்டி ஒன்றை சென்னையில் இருந்து டெல்லிக்கு கொண்டு செல்லும் பொறுப்பு எஸ்.ஜே. சூர்யாவிடம் கொடுக்கப்பட்டது. அவரிடம் பணமும் நாய்குட்டியும் மட்டுமே கொடுக்கப்பட்டது.

ட்ரெயின் டிக்கெட்  முன்பதிவு செய்யவில்லை. டெல்லி வரை நாய்க்குட்டியை எப்படி ஒரு ட்ரெயினில் 48 மணிநேரம் பயணம் செய்து கொண்டு சேர்ப்பது என்பது பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை சூர்யா. உடனே ஒரு பக்கெட், பால் பாக்கெட் எல்லாம் வாங்கிக்கொண்டு டெல்லி செல்லும் ஏதோ  ஒரு ட்ரெயினில் ஏறி பத்திரமாக நாய்க்குட்டியை டெல்லி கொண்டு சென்று அங்கு இருந்து அரக்க பறக்க ஓடி ஷூட்டிங் ஸ்பாட்டில் நாய்க்குட்டியை ஒப்படைத்து விட்டார். அது தான் எஸ்.ஜே. சூர்யாவின் டெடிகேஷன். 

 

S.J. Surya : எஸ்.ஜே.சூர்யா பெயருக்கு பின்னால் இப்படி ஒரு வரலாறா? .. நடந்ததை விளக்கும் இயக்குநர் மாரிமுத்து..!

அஜித்துடன் வாலி படம் :

எஸ்.ஜே. சூர்யாவின் கடுமையான உழைப்பை ஆசை மற்றும் உல்லாசம் படத்தின் போது பார்த்த நடிகர் அஜித், அவரை அழைத்து நீங்கள் ஒரு படம் பண்ணுங்கள் நான் உங்கள் படத்தில் நடித்து கொடுக்கிறேன் என அஜித் சார் கூறினார். அப்படி அஜித் சாருக்காக உருவானது தான் 'வாலி' திரைப்படம். இப்படத்திற்காக எஸ்.ஜே.சூர்யா ஒரு பைசா கூட வாங்காமல் இயக்கி கொடுத்தார். அன்று அஜித் சார் இவர் மேல் வைத்திருந்த பாசம் இன்றும் துளியும் குறையவில்லை என்றார் மாரிமுத்து. தனது வறுமையான நிலையிலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தவர் எஸ்.ஜே. சூர்யா. 

எஸ்.ஜே. சூர்யா பெயர் காரணம் :

இயக்குநர் வசந்த் யாராக இருந்தாலும் முதலில் அவர்களின் பெயரை தான் மாற்றுவாராம். அப்படி ஜஸ்டின் செல்வராஜ் என்ற பெயரை அவர் தான் எஸ்.ஜே. சூர்யா என மாற்றினாராம். அதற்கு ஒரு பெயர் காரணமும் இருந்துள்ளது. எஸ், ஜே, ஸ்யூர், யா எல்லாமே பாசிட்டிவான விஷயங்கள் அதில் இருக்கிறது என விளக்கம் கொடுத்தாராம் இயக்குநர் வசந்த்.   

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget