Watch Video : என்னோட பைக்கிங் சீசனை தொடங்கிட்டேன்.. அஜித்துக்கு போட்டியாக களமிறங்கிய மாதவன்.. வைரல் வீடியோ!
பைக்கிங் பிரியரான நடிகர் மாதவன் தனது காஸ்டலி இந்தியன் ரோடு மாஸ்டர் பைக்கில் பயணத்தை தொடங்கிவிட்டார். அவரின் இன்ஸ்டா ரீல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா நடிகர்களில் அஜித் ஒரு பைக் பிரியர் என்பதை விடவும் பைக்கிங் வெறியர் என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல தமிழ் சினிமாவில் மற்றுமொரு பைக் பிரியர் இருப்பதாக தெரிகிறது. அவர் தான் மேடி என செல்லமாக அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் மாதவன்.
காஸ்ட்லி பைக் வைத்திருக்கும் தமிழ் நடிகர் :
நடிகர் மாதவன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பைக்கிங் ரீல்ஸ்களை பகிர்வதை வழக்கமாக கொண்டிருப்பவர். இந்தியன் ரோடு மாஸ்டர் மட்டுமின்றி BMW K 1600 GTL என காஸ்ட்லியான பைக் வைத்திருக்கும் பிரபலங்களில் நடிகர் மாதவனும் ஒருவர். 40 முதல் 46 லட்சம் மதிப்புள்ள இந்தியன் ரோடு மாஸ்டரில் பைக்கிங் செய்வது அவருக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் கூட அவர் ஒரு பாலைவனத்தில், பைக்கிங் செய்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து இருந்தார். அந்த பயணம் மிகவும் த்ரில்லிங்காக இருந்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என குறிப்பிட்டு இருந்தார். மேடியின் ரசிகர்கள் அவரை பாராட்டி தள்ளியிருந்தனர்.
View this post on Instagram
அஜித்துக்கு போட்டியா?
அந்த வகையில் மீண்டும் தனது பைக்கிங் சீசனை துவங்கிவிட்டார் நடிகர் மாதவன். தனது இன்ஸ்டாகிராம் ரீல் மூலம் இதை அவரின் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். நடிகர் மாதவனை போலவே நடிகர் அஜித்தும் 'துணிவு' படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இமயமலைக்கு பைக்கிங் செய்தது குறிப்பிடத்தக்கது. அவரின் பல பைக்கிங் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.
#Rocketry: The Nambi Effect 🚀 - A perfect combination of science and emotion, passionately put together ❤️
— Simran (@SimranbaggaOffc) June 29, 2022
Proud to be a part of this masterpiece! #Rocketrythefilm #NambiNarayanan @actormaddy @vijaymoolan @27invest @agscinemas @yrf @ufomoviez @pharsfilm pic.twitter.com/qOoTgXbcQ9
இயக்குனரான மாதவன் :
நடிகராக இருந்த மாதவன் இயக்குனராக அவதாரம் எடுத்தது சமீபத்தில் வெளியான ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படம் மூலம். இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியும் விண்வெளி பொறியாளருமான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.