Livingston On Rajini : என் மனைவி உயிரோடு இருப்பதற்கு காரணமே ரஜினிதான்...எங்க பூஜை அறையில் ரஜினி இருக்கார்..நடிகர் லிவிங்ஸ்டன் பகிர்ந்த தகவல்
தனது மனைவி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமையில் இருந்தபோது நடிகர் ரஜினிகாந்த் தனக்கு 15 லட்சம் கொடுத்து உதவியதாக நடிகர் லிவிங்ஸ்டன் தெரிவித்துள்ளார்
![Livingston On Rajini : என் மனைவி உயிரோடு இருப்பதற்கு காரணமே ரஜினிதான்...எங்க பூஜை அறையில் ரஜினி இருக்கார்..நடிகர் லிவிங்ஸ்டன் பகிர்ந்த தகவல் Actor Livingston reveals Rajini gave 15 lakhs for his wife treatment on lal salaam set Livingston On Rajini : என் மனைவி உயிரோடு இருப்பதற்கு காரணமே ரஜினிதான்...எங்க பூஜை அறையில் ரஜினி இருக்கார்..நடிகர் லிவிங்ஸ்டன் பகிர்ந்த தகவல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/22/c9cac8867d3931364d3005f8556743361726986627732572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ரஜினிகாந்த்
நேற்று இன்று நாளை என எல்லா தலைமுறையினருக்கு சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த். கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் ரஜினிகாந்த் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பலருக்கு முன்மாதிரியாக இருந்து வருகிறார். எவ்வளவு புகழின் உச்சத்திற்கு சென்றாலும் ரஜினியின் எளிமையை பாராட்டுபவர்கள் பலர். தற்போது வேட்டையன் மற்றும் கூலி ஆகிய இரு படங்கள் ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கின்றன. வேட்டையன் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கூலி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஜினி தனக்கு செய்த உதவி பற்றி நடிகர் லிவிங்ஸ்டர் பேசியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
என் மனைவி உயிரோடு இருப்பதற்கு காரணமே ரஜினிதான்
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் லிவிங்ஸ்டன் " என் மனைவிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்தோம். பணம் இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். இன்னும் ஒரு வாரம் விட்டால் அவர் இறந்துவிடுவார் என்கிற நிலைதான். அப்போது லால் சலாம் படத்தில் நான் நடித்துகொண்டிருந்தேன். படப்பிடிப்ப்பில் இருந்த உதவி இயக்குநர்கள் பேசியதை எப்படியோ தெரிந்துகொண்ட ரஜினி சார் என்னை அழைத்தார். பின் மனைவியின் மருத்துவ செலவிற்கு 15 லட்சம் பணம் கொடுத்தார். எனக்கு ஏற்கனவே நிறைய கடன் இருக்கிறது. இதை எப்படி திருப்பி கொடுக்கப்போகிறேன் என்று நான் தயங்கினே. என்னை உன் பிரதர் என்று நினைத்துக்கொள் என்று ரஜினி சொன்னார். இன்று என் மனைவி உயிரோடு இருக்கிறார் என்றால் அதற்கு ரஜினி சார் தான் காரணம். வெளியே தெரியாமல் எத்தனையோ பேருக்கு ரஜினி இப்படி உதவி செய்கிறார். பைபிளில் ஒரு வசனம் வரும் உன் ஒரு கை கொடுப்பது உன் இன்னொரு கைக்கு தெரியக்கூடாது. அப்படி தெரிந்தால் மேலோகத்தில் உனக்கு பலன் கிடைக்காது என்று. ரஜினி அந்த வசனத்தை தான் பின்பற்றுகிறாரோ என்னவோ. எத்தனையோ பேருக்கு அவர் உதவி செய்துகொண்டு இருக்கிறார். ஆனால் அது எல்லாம் வெளியே தெரிவதில்லை. இன்று என் வீட்டு பூஜை அறையில் ரஜினி சாரின் புகைப்படம் இருக்கிறது. தன் அம்மாவின் உயிரை காப்பாற்ற உதவிய ரஜினியின் புகைப்படத்தை என் மகள்கள் தான் பூஜை அறையில் வைத்தார்கள். இப்போது அவர் தான் எங்களுக்கு கடவுள் மாதிரி." என்று லிவிங்ஸ்டன் தெரிவித்துள்ளார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)