Karthi: சர்தார் 2க்கு ரெடியாகும் கார்த்தி! முடிந்தது மெய்யழகன், வா வாத்தியாரே ஷூட்டிங்!
Actor Karthi: மெய்யழகன், வா வாத்தியார் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், சர்தார் 2 படத்திற்காக நடிகர் கார்த்தி தயாராகி வருகிறார்.
கார்த்தி நடிக்கும் மெய்யழகன்
நடிகர் கார்த்தி (Karthi) தற்போது அடுத்தடுத்து இரு படங்களில் நடித்து வருகிறார். 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகும் படம் மெய்யழகன். சூர்யா, ஜோதிகாவின் 2D நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கும் நிலையில், அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, இளவரசு, ஸ்வாதி கொண்டே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. கார்த்தியின் பிறந்த நாளில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதைத் தொடர்ந்து அடுத்தடுத்து வரும் மாதங்களில் அப்டேட்களை எதிர்பார்க்கலாம். வரும் செப்டம்பர் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
வா வாத்தியார்
மெய்யழகன் படத்தில் நடித்தபடியே கார்த்தி நடித்து வந்த படம் வா வாத்தியார். சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு படங்களிலேயே பெருமளவிலான ரசிகர்களை கவர்ந்த நலன் குமாரசாமி கிட்டதட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தை இயக்குகிறார். இதனால் வா வாத்தியாரே படத்தில் நல்ல எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. சத்யராஜ் , க்ரித்தி ஷெட்டி , ராஜ்கிரண் , ஆனந்தராஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயாணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் இறுதியோடு நிறைவடை இருக்கிறது.
சர்தார் 2
அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ள கார்த்தி தற்போது அடுத்தக் கட்ட படங்களை நோக்கி நகர இருக்கிறார். இந்த ரவுண்டில் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 வின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பின் எச் வினோத் இயக்கத்தில் தீரன் 2 வும் கார்த்தியின் லிஸ்டில் இருப்பதாக கூறப்படுகிறது . கூலி படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு லோகேஷ் கனகராஜூடன் கைதி 2 படத்தின் வேலைகளும் தொடங்க இருக்கின்றன. ஒரு படம் முடித்த கையுடன் அடுத்தப் படத்திற்கான வேலைகளில் இறங்கும் கார்த்தி இனி தான் நடிக்க இருக்கும் படங்களுக்கான கதைகளை கவனமாகவும் தேர்வு செய்து வருகிறாராம்