Actor Karthi Daughter: முளைப்பாரியுடன் வலம் வந்த வந்தியத்தேவனின் மகள் உமையாள்.. வைரலாகும் புகைப்படங்கள்
Actor Karthi Daughter: நடிகர் கார்த்தியின் மகள் புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
![Actor Karthi Daughter: முளைப்பாரியுடன் வலம் வந்த வந்தியத்தேவனின் மகள் உமையாள்.. வைரலாகும் புகைப்படங்கள் Actor Karthi Daughter Photo Goes Viral Tamil Cinema Entertainment News Actor Karthi Daughter: முளைப்பாரியுடன் வலம் வந்த வந்தியத்தேவனின் மகள் உமையாள்.. வைரலாகும் புகைப்படங்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/08/b160d82020cc7aceabfe382d095fd30d1688818156552102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக நடிகர் கார்த்தி இருந்து வருகிறார். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன்ம் இரண்டு பாகங்களும், விருமன் திரைப்படமும் வசூலை அள்ளியதையடுத்து, தற்போது அடுத்த படமான ஜப்பான் படத்திற்கான வேளையில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், நடிகர் கார்த்தி தனது மனைவு மற்றும் மகளுடன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக கார்த்தி தனது மகள் உமையாள் மற்றும் மனைவியுடன் முளைப்பாரி எடுத்துக்கொண்டு செல்லும் புகைப்படங்கள் கார்த்தி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக, கார்த்தியின் மகள் புகைப்படம் தான் ஹைலைட்டாம். அதாவது கார்த்தி மகளின் தற்போதைய புகைப்படம் இல்லாமல் தவித்த ரசிகர்களுக்கு இந்த போட்டோ கிடைத்ததும், உற்சாகத்தில் உள்ளார்களாம். குழந்தை பார்ப்பதற்கு அப்படியே கார்த்தியைப்போல் இருப்பதாக குறிப்பிட்டு, ரசிகர்கள் தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்தும் வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் 80களில் கவனிக்கத்தக்க நடிகராக இருந்தவர் நடிகர் சிவக்குமார். இவர் 2000-களுக்குப் பிறகு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். அதன் பின்னர் சினிமாவில் தலைகாட்டாமல் இருக்கிறார். இவர்களது மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் நாயகன்கள் எனக் கூறும் அளவிற்கு இவர்களது ரசிர்கள் பட்டாளம் என்பது உள்ளது.
இவர்கள் இருவரும் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் தங்களது குடும்பத்துடன் செலவிட்டு வருவார்கள் என்பது சினிமா வட்டாரத்திற்கே தெரிந்த விஷயம். இருவரும் தங்களது குடும்பத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். சூர்யா அண்மையில் தனது மகளின் உயர் கல்விக்காக மும்பை குடிபெயர்ந்துள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இருவரில் சூர்யா தனக்கு கிடைக்கும் நேரத்தில் குடும்பத்தை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று ஜாலியாக சுற்றுவார். ஆனால் கார்த்தி படித்ததே அமெரிக்காவில் என்பதால், வெளிநாடுகளில் சுற்றுவதை விரும்பாமல், கிடைக்கும் நேரத்தில் கிராமம் கிராமமாக சுற்றி என்ஜாய் செய்து வருகிறாராம்.
சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வரும் கார்த்தி, அவரது மனைவி மற்றும் அவரது மகள் உமையாள் புகைப்படத்தில், கார்த்தி வேட்டி சட்டையுடன் பக்கா கிராமத்துவாசியாகவே காணப்படுகிறார். மிகவும் இக்கட்டான சூழலில் கூட தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் இவர்களைப்போல் நாமும் நமது குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என கார்த்தி ரசிகர்கள் தங்களுக்கு தாங்களே அறிவுரை கூறிக்கொள்கின்றார்களாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)